Showing posts with label மல்லர். Show all posts
Showing posts with label மல்லர். Show all posts

மதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்

மதுரை வரலாறு

        தென்பாண்டி நாட்டிலுள்ள பள்ளர்கள் நடுவே மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கி வந்துள்ளது. வைகையாற்றின் தென்கரையில் அவனியாபுரம்,வில்லாபுரம்,பழங்காநத்தம்,மாடக்குளம்,பொன்மேனி,தானத்தவம்புதூர்,விராட்டிபத்து,அச்சம்பத்து,ஆரப்பாளையம்,அனுப்பானடி,சிந்தாமணி,ஐராவத நல்லூர்,விரகனூர் ஆகிய ஊர்களும், ஆற்றின் வடகரையில்வண்டியூர்,கருப்பாயூரணி,மானகிரி,மதிச்சியம்,கோசாகுளம்புதூர்,செல்லூர்,'மீனாட்சி புரம்' என்ற பெயரில் மூன்று ஊர்கள்,தத்தநேரி,விளாங்குடி ஆகிய ஊர்களும் மதுரை மாநகருக்குள் நடுவம் கொண்டுள்ள மருத நில மக்களான பள்ளர்களின் பழம்பெரும் குடியிருப்புகளாகும்.


         மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்குக் கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இச்சுவர் 'சுந்தர பாண்டியன் திருமதில்' என்றே வழங்கப்படுகிறது (கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.279). பாண்டிய அரசர்கள் 'அவனிப சேகரன்' என்றும், பாண்டிய அரசிகள் 'அவனி முழுதுடையாள்' என்றும் அழைக்கப் பெற்றனர்(கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.152). இது பற்றியே அவனியாபுரம் என்ற ஊர்ப் பெயர் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் பள்ளர்குல மக்களே பெருந்திரளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. 


        பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகிறது. மதுரையைப் பற்றிய அக்காலத்தியக் கதைகளை இப்புராணம் பதிவு செய்துள்ளது. 'மாடக்குளக்கீழ் மதுரை' எனக் கல்வெட்டுகளில் வரும் பெயர் இந்நூலிலும் வருகிறது. 'மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு' எனப் பள்ளர் வரலாற்றை பறைசாற்றும் பழனி செப்பு பட்டய வரி 216 குறிக்கும். பாண்டியர் வரலாற்றை தாங்கிய மேற்கண்ட வரலாற்று முதன்மைச் சான்றுகள் முன்மொழிகின்ற மதுரை 'மாடக்குளம்' பள்ளர்களின் பழம்பெரும் ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.


சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் - ஊர்சூழ்வரி
அடிகள் 15 - 22
                             மல்லன் மதுரை
"அல்லலுற் றாற்றா தழுவளைக் கண்டேகி
மல்லன் மதுரையா ரெல்லாருந் தாமயங்கித்
களையாத துன்பமிக் காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கோல்
மன்னவர் மன்ன மிதிக்குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றஞ் சிதைந்த திதுவென்கோல்
மண் குளிரச் செய்யு மறவே னெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திதுவென்கோல்
"

    பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்ற கண்ணகியைக் கண்டு அவள் துயரத்தைத் தம்மால் ஆற்ற முடியவில்லையே என்று ஏக்கமுற்று மல்லன் பாண்டிய நெடுஞ்செழியனுடைய மதுரை நகரத்தில் வாழுகின்ற மக்களெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் எடுத்துரைக்கின்றது.


        இச்செய்யுளின் மூலம் 'மல்லன் மதுரை' வாள் வேந்தனான தென்னவன் பாண்டிய மன்னனின் தலைநகர் என்பது தெரிய வருகிறது. நெடுநெல்வாடையும் பாண்டியரின் தலைநகரை 'மாட மோங்கிய மல்லன் மூதூர்' (அடி.29) என்கிறது. பொ.வே. சோமசுந்தரனாரின் கழக வெளியீடு 'மல்லன் மூதூர்' என்கிறது. ஏனைய பதிப்புகள் சிலவற்றில் திரிக்கப்பட்டு 'மல்லல் மூதூர்' எனப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'மல்லன் மூதூர்' என்றாலும் வளமுடைய பழைமையான மருத நிலத்து ஊர் என்று தான் பொருள். வளம் என்றாலே பயிர்த்தொழில்,உற்பத்திப் பெருக்கம் என்பதையே குறிக்கும். எனவே பாண்டியரின் தலைநகரான 'மல்லன் மூதூர் - மல்லன் மூதூர்' என்பது மள்ளர்களின் ஊர் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளவியலாது. 


திருவிளையாடற் புராணம்
மெய்க்காட்டிட்ட படலம்
செய்யுள் 27
                    மல்லன் மாநகரில் மள்ளரின் ஆரவாரம்
"பல்லிய மொலிக்கு மார்பும் பாயபரிசுலிக்கு மார்ப்புஞ்
சொல்லொலி மழுங்க
மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் கைம்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே"


    பல்வகை இசைக்கருவிகளின் முழக்கமும், குதிரைகளின் கனைப்பொலியும் மள்ளர் போர்ப்படை வீரர்களின் ஆரவார ஒலியும் ஒன்றோடொன்று கலந்து பேரொலியாயின. அப்படி மள்ளர் சிவபெருமானின் மள்ளர் படை வரும் ஒலி, முன்பொரு காலத்தில் பாண்டிய மல்லனின் மதுரைக் கடல் சீறி வந்து கொண்டது போலிருந்தது எனக் கூறும் மேற்கண்ட செய்யுளடியின் ஊடாக மதுரை மாநகர், மள்ளர்களின் பேரூர் என விளங்கி வந்தமையை அறிய முடிகிறது. இரா.பி.சேதுப்பிள்ளை தனது 'ஊரும் பேரும்' என்னும் நூலில் மதுரை என்பதை 'மருதந்துறை' என்று குறிப்பிடுகிறார்.


        மதுரை காந்தி என்ற நூலில் பா.சி.சந்திரபிரபு, 1935 ஆம் ஆண்டு நா.ம.இராசுப்பராமன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது மதுரை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    "நகராட்சியின் மூலம் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளும் நடைபெற்றன. நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களுக்கும், தெருக்களுக்கும் சாதிப் பெயர் சூட்டக் கூடாது என்று ஐயா அவர்கள் தடை விதித்தார். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அரசுகள் இது போன்ற சீர்திருத்தம் கொண்டுவர இன்றும் கூடத் தயங்குவதைப் பார்க்கிறோம். புரட்சிகரமான இத்திட்டத்தை 1935ஆம் ஆண்டில் ஐயா அவர்கள் மதுரையில் செயல்படுத்தியது அசாதாரணமானதாகும். அதற்கிணங்க சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றுப் பெயர் அளிக்கப்பட்டன. உதாரணமாக 'பள்ளர் தெரு' என்று வழங்கி வந்த தெருவுக்கு 'பெருமாள் கோயில் தெரு' என்று சூட்டப்ப் பட்டது. இன்று அந்த தெருவில் வசிப்பவர்களும் கூட இச்செய்தியை அறிவார்களா என்பது சந்தேகமே." (பா.சி.சந்திரபிரபு, மதுரை காந்தி (ஒரு சத்தியாகிரகியின் கதை), ப.44-45)
    

        பெருமாள் கோயில் தெருவாகப் பெயர் மாற்றப்பட்ட 'பள்ளர் தெரு' மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மேற்குப் புறம் இருந்தது. இவ்வாறு பள்ளர் குல மக்களின் அடையாளங்கள் பல அழிந்து போய்விட்டன.


பாண்டியர் இடுகாடு - கோவலன் பொட்டல்
    

        மதுரை பழங்காநத்தத்தில் உள்ள 'கோவலன் பொட்டல்' என அழைக்கப் படுகின்ற 'பாண்டியர் இடுகாடு' உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாறு அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தத்தில் உள்ள பாண்டியர் இடுகாடு என்பது இன்று பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் 'தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மயானம்' என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இடுகாடு என்பது ஒரு குலத்திற்கு சொந்தமான சொத்தாகவே இருந்து வருவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஃது தமிழரின் மரபு வழக்காறாகவே இருந்து வருகிறது.

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு நுழைவுப் பகுதி புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு உள்ப்புறம் புகைப்படம்)

(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாட்டில் உள்ள பள்ளரின் கல்லறை)

        பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைச் சிறைப்படுத்தி மரண தண்டனை வழங்கிக் கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 'பாண்டியர் இடுகாடு' 'கோவலன் பொட்டல்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் காட்டுவதாகக் கூறி மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்ச்சியைப் பழங்காநத்தம் பள்ளர்கள் முறியடித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியல்புகளையும் ஒப்பு நோக்கும் போது பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.

மள்ளர் என்பது ஒரு குலம்


மள்ளர் என்பது ஒரு குலம்
மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர் - தேவேந்திரன் எல்லாம் ஒன்றே,ஒருவரே 


    மள்ளர் என்பது மருத நில மக்களின் மரபுப் பெயர் என்பதையோ, மள்ளரும் மல்லரும் ஒன்று என்பதையோ, இம்மள்ளர் - மல்லரே இன்றையப் பள்ளர் என வழங்கப்படுகின்றனர் என்பதையோ இதுகாறும் தமிழர் வரலாற்றினை எழுத முனைந்த எந்தவொரு வரலாற்றாளர்களும் வெளிப்படுத்த விரும்பவில்லை. மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர். இதனால் தான் இதுவரையிலும் மூத்த தமிழ்குடி மக்களின் மூல வரலாறு மூடி மறைக்கப் பட்டே வந்துள்ளது. தமிழக வரலாற்றளார்கள் மள்ளர் / மல்லர் என்றால் 'வீரர்' என்று வெறுமனேப் பொருள் கூறி மழுப்பியுள்ளனர். மள்ளர் - மல்லர் என்பது ஒரு குலம் என்பதை இவர்கள் எடுத்துரைக்கத் தவறி விட்டனர்.

இலக்கியச் சான்றுகள்

  • கம்பராமாயணம்

பால காண்டம் - ஆற்றுப் படலம்
கம்பன் காட்டும் மள்ளர் குலம்

செய்யுள் 18
நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
       "காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப்  பறை கறங்க, கைபோய்ச்
        சேர்த்த நீர்த்திவலை, பொன்னும், முத்தமும் திரையின் வீசி,
        நீத்தம் ஆன்று , அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு
        கொத்தகால்
ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே"

    உழவர் குடியினராகிய மள்ளர் குலத்தார் வாய்க்கால்களில் நீர் வருதலை எதிர்நோக்கிக் காத்து நிற்றலைக் குறிக்கும், மகிழ்வை வெளிப்படுத்தும் ஆரவாரப் பறை முழங்க, திரண்ட நீர்த்தி வலைகள் பொன்னும் முத்துமாய் அலைகளால் தெளிக்கப் பட்டு, நிலத்தினைக் கிழித்துக் கொண்டு நீண்ட கோத்த கால்வாய், மள்ளர் குலத்தார் எப்படிப் பல கிளைகளாகப் பாண்டியர் குடி, சோழர் குடி, சேரர் குடி எனப் பிரிந்து சென்று மண்ணையும், மக்களையும் கத்துச் செழிப்பாக ஆள்வதைப் போல் பல கிளைகளாக வாய்க்கால்கள் பிரிந்து சென்று வயல்களை விளைவித்ததைக் கூறும் கம்பராமாயணம் மள்ளர் என்பதை ஒரு குலம்  எனக் குறிப்பிடுகிறது.


பால காண்டம் - நாட்டுப் படலம்
செய்யுள் 32
குன்றுடைக் குல மள்ளர்
        "கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
        வன்தொடர் படுக்கும், வன வாரி சூழ்
        குடுடைக் குல
மள்ளர் குழுஉக் குரல்
        இன் துணைக் களி அன்னம் இரிக்குமே
"

    குட்டிகளையுடைய பெண் யானைகள் விட்டு விட்டுச் சுர்ரித்திர்யும் ஆண் யானைகளின் வட்டங்கள், வலிய சங்கிலியால் பிடித்துக் கட்டப்படுகின்ற காட்டாறுகளும், ஓடைகளும் சூழ்ந்துள்ள குன்றுகளுக்கு உரிமை உடையவர்களான மள்ளர் குலத்தாரின் கூட்டங்களில் இருந்து எழும்புகின்ற ஆரவார ஒளியானது, இனிய பெட்டிகளுடன் களிக்கின்ற ஆண் அன்னங்களை நிலைகெட்டு ஓடச் செய்வதாகக் கூறும் மேற்கண்ட செய்யுளடிகள் மள்ளர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது.


யுத்த காண்டம் - வானரர் களம் காண் படலம்
செய்யுள் 25
உயிரிழந்து கிடக்கும் அரக்கர் சேனை குறித்த வீடணன் கூறுதல்

        "நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
        உதிர நீர் நிறைந்த காப்பின்
        கடும் பகடு படி கிடந்த கடும் பரம்பின்
        இன மள்ளர் பரந்த கையில்
        கடுங் கமலா மலர் நாறும் முடி பரந்த
        பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை
        தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
        எனக் பொலியும் தகையும் காண்மின்
"

நீண்ட வாட்படையாகிய ஏர்க் கலப்பையினால் உழுகின்ற மனிதச் சதைகளாகிய சேற்றில் குருதி நிறைந்த நீர்த் தேக்கத்தினையும், விரைவுடன் கூடிய வேழங்கலாகிய எருமைக் கடாக்கள் படிந்து தோயப் பெற்றதாகி வேகமாகப் பரவுதலுடைய மள்ளர் இனத்தார் கூடிப் பரம்படிக்கும் கையில்படும் தாமரை மலரின் நறுமணம் கமழ்கின்ற தலைகளாகிய நாற்று முடிகள் பரவிக் கிடந்த பெரிய அந்தப் போர்க்களம் பரந்து விரிந்த பெரிய வயல்வெளிகளைக் கொண்ட மருத நிலத்தின் தன்மையை ஒத்தது போல் விளங்குகின்றதைப் பாருங்கள் எனக் கூறும் மேற்கண்ட செய்யுள் என்பது ஒரு இனம் என எடுத்துரைக்கின்றது. இங்கனம் மல்லர்களை 'இனம்' எனக் குறிப்பது இவர்களே தமிழர்கள் எனப் பொருட்டாகும்.


  • முக்கூடற் பள்ளு

           இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காலம் கி.பி.1670 .
செய்யுள் 12
மள்ளர் குலமே பள்ளர் குலம்
        "மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க் கோர்
        பள்ளக் கணவன்
எனின் பாவனைவே றாகாதோ
        கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
        கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே"

    மள்ளர் என்பது ஒரு குலம் என்பதையும், அம்மள்ளர் குலமே பள்ளர் குலம் என்பதையும் முக்கூடற் பள்ளு அடிகள் தீர்க்கமுடன் தெளிவுபடுத்துகின்றன.


=> மள்ளர் - மல்லர் ஒருவரே: தொல்லியல் அறிஞர்களின் கருத்து


முனைவர் நடன.காசிநாதன்

    மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருத நில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் சுட்டுகின்றன. சங்க காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண் குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது" என்கிறார் தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.


முனைவர் இரா.நாகசாமி

    'மல்' என்ற சொல்லிற்குச் 'செல்வம்' என்று பொருள். 'மல்லை' என்ற சொல்லிற்கு 'செல்வம் மிகுதியானது' என்று பொருள். இதற்குத் 'திண்ணம்' என்ற பொருளும் உண்டு. 'வலிமை' 'வளப்பம்' என்கிற பொருட்களும் உண்டு. இவ்வாறாக 'மல்' என்ற சொல்லிற்கு வளம்,வளமை,திண்ணம் - உறுதியான - வலிமையான,செல்வம், செழுமை என்ற பொருட்கள் உண்டு இதனை Lexican , Dravidan Etimolagy Dictionary முதலிய அகராதிகள் மூலம் அறியலாம். இதே பொருளை 'மள்' என சொல்லிற்கு பார்க்கலாம். 'மள்ளர்' என்பதற்கு திண்மை, செழுமை, என்று பொருள். மள்ளர் என்றால் உழுபகடு உறப்புவார். செல்வம் என்றால் என்ன? பயிரினால் வருவது செல்வம்; போர் புரிபவர்களுக்கும் மள்ளர் என்ற பெயர் உண்டு. மல் - மல்லர், மள் - மள்ளர் இரண்டிற்கும் ஒன்று போல் பொருள் வருகின்ற கரணியத்தால், சில இடங்களில் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.  இஃது எனது முடிவான கருத்து. மல்லர் என்றாலும், மள்ளர் என்றாலும் ஒரு பொருள் உண்டு. வேறு பொருளும் உண்டு. அந்த இடத்திற்கு தக்கவாறு சொல்லின் பொருள் மாறுபடும். 'பள் ' என்ற சொல்லிற்கு 'பள்ளம் செய்தல்' என்று பொருள். எந்த வேளாண் செயல்பாடுகளாக இருந்தாலும் 'பயிர் செய்தல்' என்று வந்தால் வரப்பு எடுத்து நீர் தேங்க அந்தப் பள்ளத்தின் அடிப்படையில் இருப்பதாலே 'பள்' என்றால் 'பள்ளர்' என்று பொருள் சொகிறார்கள்.


         ஆதலால் பயிர் செய்து வளத்தைப் பெருக்கி, செல்வத்தைத் திரட்டியவர்களுக்கு 'பள்ளர்' என்று பெயர் வந்தது. அதாவது இம்மக்கள் தொழிலில் இருந்து நிறைவான செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனால் மருத நிலத்தில் வாழும் பள்ளர்கள் பிற குலத்தாருக்கு உணவூட்டியவர்களாவர். ஆதலால் 'பள்ளம்' செய்து செல்வத்தைப் பெருக்குகிறவர்கள் 'பள்ளர்கள்' என்றாயினர் என்று மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் இரா.நாகசாமி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மல்லர் - மள்ளர் - பள்ளர் என்பது எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள் மட்டுமின்றி மருத நிலக் குடியினரை மட்டும் குறிக்கும் குறியீட்டுக் குல மரபுப் பெயர் சொற்கள் என்பதும் எளிதில் விளங்கும். 


=> மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர்
ஒன்றென உரைக்கும் சான்றுகள்


அனுமனேரிச் செப்பேடு

        "ரெகுநாத காவேரிக்குத் தெற்கு மல்லர் திருமேனிக் குடும்பன் புஞ்செய்கு மேற்கு பொடுகட்டியூரணிக்கு வடக்கு" நில அளவையின் போது, அருகாமைந்த நில உரிமையாளரின் பெயரினைப் பதிவு செய்யும் மேற்கண்ட செப்பேடு 'மல்லர் திருமேனிக் குடும்பன்' எனக் குறிக்கிறது. இதனால் குடும்பர்கள் 'மல்லர் குலத்தவர்' என்பது மெய்ப்படுகிறது.


மதுரை மாவட்ட நில ஆவணம்

    நில ஆவணத்தின்.... '1952 - ம் வருஷம் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதிக்கு தமிழ் கர வருஷம் மார்கழி மாதம் 25 - ம் தேதி மதுரை தாலுகா வண்டியூர் கிராமத்திலிருக்கும் இருளப்பக் குடும்பன் குமாரத்தி பள்ளர் சுகவாசி அரசாய் அம்மாளுக்கு மேலூர் தாலுகா, ஜாரி ஆமூர் கிராமம், மஜரா தெற்கிலாமூரிக்கும் மல்லர் குடும்பன் குமாரர் பள்ளர் விவசாயம் ஆளப்பன் எழுதி வைத்த செட்டில்மென்ட்...." எனக் குறிப்பிடுகின்றது.


செண்பகராமன் பள்ளு

இளைய பள்ளி வருந்தல்

        "மல்லார் சேர் நாஞ்சிநாட்டுப் பள்ளி - மூத்த பள்ளி
                வன்மத்தைக் கண்டாயோ
பள்ளா
        இல்லாத களவெல்லாம் சுமத்தி - யுன் தலையில்
                ஏற்றியே மரத்திலிடு வித்தாள்
        கொள்ளாமல் கொல்லவல்லோதுணிந்தாள் - பண்ணைக்காரக்
                கூதற நயினாரு மதுதன்
        னுல்லாரும் பெண்ணேபெண் என்றால் - நானுமிதுக்
                கென்செய்வேன் பகவதிக் குடும்பா"

    மரத்தில் அடிக்கப் பட்ட பள்ளனிடம் இளைய பள்ளி சென்று உன்மேல் இல்லாத களவெல்லாம் மூத்த பள்ளி சுமத்தி உன்னை மரத்திலடிக்கச் செய்தான். இதற்க்கு நான் என்னசெய்வேன் என்று வருந்துகிறாள்.

 

எட்டையபுரப் பள்ளு

செய்யுள் 146 

        "யிப்படிக் கூடிய நாள்நல்ல நாள் மல்லர் யாரும் வயல்
                ஏரிடச் சாத்திகம் நேரிடச் சீக்கிரம் வாருஞ்
        செப்பினேனென்று மனப்பிரியமாகவே நடந்தான்
மள்ளர்
                சேரத்திரண்ட பின்பு கூர்க்குடும்பன் பின்றுடர்ந்தார்
        காகம் வலம்பாயக் கருடனிடம் பாயக் கண்டார் சிலைக்
                காமன் குமாரயெட்டசாமி யோகமென்று கொண்டார்
        வாகன கருடனுமாகாசம் வட்டமிட்டாடவே பள்ளர்
                வந்தபேர்க ளெல்லாஞ் சிந்தை மகிழ்ந்து கொண்டாடவே..."


    தென்னிசைப் பள்ளு மருத நில மக்களை மல்லர்,மள்ளர், குடும்பன், பள்ளர் எனக் குறிக்கிறது. மல்லர் / மள்ளர் என்பது ஒன்றே! யாவரே இன்றையப் பள்ளர்! குடும்பன் என்னும் குலப்பட்டம் இவர்களுக்குரியதே என்பதற்கு மேற்கண்ட பள்ளு மறுக்கவொண்ணாச் சான்றாக திகழ்கிறது.


    "தொண்டையர் கோன் மண் மல்லகுல வரையால் நூற்றுக்கால் மண்டபத் தேணி" என்று சிதம்பரம் நடராசர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6  எண்.225 , வரி.14 -15 ), "ஆகோ  மல்ல குல கால வாய்க்காலுக்கு வடக்கு" என்று மன்னார்குடி சயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6/37 ) மல்லர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது. கதிர்வேற் பிள்ளையின் மொழியகராதி 91 சாதிகளில் 'மல்லர்' சாதியையும் குறிப்பிடும். இதனூடாக மல்லர் / மள்ளர் என்பது பள்ளர் குல மக்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது என்பதை அறியலாம். 


=> பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே


காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு

    இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து பேர்களும், முதலியார்களும் நான்கு பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில் ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.


பட்டயத்தின் காலம்


    "சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்".


தேவேந்திரர் மெய்க்கீர்த்தி


    "தேவேந்திரப் பள்ளரில் வெள்ளானை வேந்தன் மிக விருது பெற்றவன். சேத்துக்கால் சென்னன், சென்னல் முடிக்காவலன், தேவேந்திர வர புத்திரன், மண் வெட்டி கொண்டு மலையை கடைந்த கண்ணன், வெள்ளானை கொடி படைத்தவன், வெள்ளக் குடை, முத்துக்குடை, பஞ்சவர்ண குடை, முகில் கொடி, புலிக் கொடி, அழகுக் கடை படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் தேவேந்திரப் பள்ளன்"


விருது பெற்ற தேவேந்திரர்கள்


    "காஞ்சிபுரத்துப் பண்ணாடி, சின்னக் காஞ்சிபுரம் நாகப் பண்ணாடி, சர்வதீரத்து வீதி முத்துப் பன்னாடியும், செஞ்சி நகரம் அரசப் பன்னாடியும், தஞ்சாவூர் சீரங்க மூப்பன். திருச்சிராப்பள்ளி மூக்க மூப்பன், திருவெங்கிமலை நயினார்க் குடும்பன் மதுரை நாராயணக் குடும்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்திமதி காலாடி, திருச்செங்கோடு பழனிப் பன்னாடியும் தேவேந்திர கூட்டத்தின் பெரியோர்களாகும்."


சிவகங்கைக் குடும்பர்கள் செப்பேடு


    இப்பட்டயம் எழுத்தப் பட்ட ஆண்டு கி.பி.1752 ஆகும். வரி.96 - 107 


தேவேந்திரர் சிறப்புகள் - அவை கூடுதல்


    "வெள்ளாண்மை யுலகில் வியணப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வர்சையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகன் சேர் சேறாடிக் குடையும்ஞ் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால்ச் செலவரான குடும்பர்களும், அமராபதிகளும், அளகாபுரிக்கும், நிகரைச் சிரஞ்சீவிப் பதியான் சிவகெங்கைத் திருக்குளத்தங் கரையில்ச் சீவற்னயீசுவரன் பெரியனாயகி சன்னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வட திசை தென் திசையிலும் உள்ள உறவின் முறையாரையும், குடும்பர்களையுங் கூட்டஞ் செய்து..." என்கிறது.

மல்லிக் குந்தம் செப்புப் பட்டயம்


காலம் கி.பி.1701 . அடி 52 - 55


    "மஞ்சப்பாவாடை யுடையவர் தேவேந்திரப் பள்ளன் வெள்ளைகொடை வெள்ளை வெண்சாமரமுடையவர் விருது கோங்கி பூதக் கொடியுடையவர் இவர்களுக்கெல்லாம் தலைகட்கு க.னுலை ம் முக்குருணி அரிசியும், கொடுக்க வேண்டியது" என்கிறது.


   இங்கனம் செப்புப் பட்டயங்களின் வாயிலாகவும் பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே என அறியலாம்.


(விரைவில் இங்கே பிரசுரிக்கப்படும்: பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் ஒன்ருவரே என்று ஓதும் பள்ளுப் பாடல்கள்)

கல்வெட்டுகளில் மள்ளர்/மல்லர்


கல்வெட்டுகளில் மள்ளர்/மல்லர்


           வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யக் கல்வெட்டுச் சான்றுகள் மிகவும் இன்றியமையாததாகும். "மள்ளர்" என்ற பெயரில் இதுகாறும் ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. 'ள'கரம், 'ல'கரமாகி "மல்லர்" என்று பதிவு பெற்ற கல்வெட்டுப் பொறிப்புகளே ஏராளம் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகள் மிகவும் காலத்தால் பிற்பட்டன. ஆதலால் இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளில் தொன்மையையும், பிழையின்மையையும் காணமுடியாது. ஏனெனில் இலக்கியங்கள் மொழிப்புலமை வாய்ந்த புலவர்களாலும், கல்வெட்டுகள் தொழில்புரியும் கல்தச்சர்களாலும் எழுதப் பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 'ள' கரம் 'ல' கரமாவது இயல்புதான் 'மள்ளர்' என்பதை 'மல்லர்' எனக் கொள்ளின் அக்து பிழையுமாகாது. மள்ளர், மல்லர் என்ற இரு சொற்களையும் தமிழ்ப் புலவர்களும் கையாண்டுள்ளனர். மல்லர் வரலாற்றை மீட்டெடுக்கக் கல்வெட்டுகள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம். 


மள்ளர்

  • "திருமள்ள வீரசோழப் பேரரையன் மகன் அத்திப் பேரரையன்" (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.107 ) சந்தி விளக்கு வைத்த செய்தியை, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் திருப்புராந்தககேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 - 360 ) தெரிவிக்கின்றது.

மல்லர்

  •         வடஆர்க்காடு மாவட்டம், வாலாசாபேட்டை வட்டம், திருமால்புரம் மனிகண்டேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.22 / 298 , கி.பி.943 -44 ). நிலம் விற்றுக் கொடுத்த அதிகாரி "கடகன் குஞ்சரமல்லனாகிய சோழமாராயன்" என்கிறது. 
  •          ிருச்சிராப்பள்ளி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /635 ) கோயிலுக்கு விளக்கெரிக்க நெய்கொடுக்க சாவா மூவாப்பேராடுகளை ஏற்றுக் கொண்ட மள்ளர்கள் "குஞ்சிர மல்லன் பெருவழுதி,குஞ்சிர மல்லன் காடன், குஞ்சிர மல்லன் திருமால்" (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.59  ) என்கிறது. 
  •         காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /816 ) நெய்க்காக கோயிலுக்கு பசுக்கள் 32 கொடை அளித்தவர், "திரிலோகிய மல்லன்,கிரிதுர்க மல்லன்,புவனேகநேத்திரன் வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்முடி விஷ்ணுதேன் துரை அரசன்" (ஆய்வுக்கோவை - 2010 , பாரதியார் பல்கலைக் கழக வெளியீடு, ப.572 ) என்கிறது.
  •         "காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /315 பகுதி சி). போருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட "பரமேசுவர மல்லர் அதுக்கு ஹிரண்யவரம்ம மகராஜ குல மல்லரையும் கூவி விவை ஆகும். போகராத்தம் மகன் ஸ்ரீ மல்லனு,ரண மல்லனு,சங்கரராம மல்லனு என்பார்கள் விவை குடு என்பர் நி......தாமரவோ செய்வர் நாம் போகாமென பந்தாபந்தா மருப்ப.....வ மல்லனான பரமேஸ்வர நான் போவானேன்று தொழுது நின்ற இடம்" என்கிறது. 
  •         திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.3 /95 பகுதி - 3 கி.பி.910 ) கோயிலுக்கு விளக்கு வைக்க பொன் கொடை அளித்தவர். "கற்பூண்டி நாடுடைய பரபூமிகன் மல்லனாகிய கண்டராதித்தப் பல்லவரையன்" என்கிறது.
  •         போளூர் திருமலையில் வண்ணச் சித்திரங்கள் உள்ள குகைக்கு கீழே உள்ள சிறிய கோயில் கல்வெட்டு (தெ.க.1 /73 ) "திருமலை பரவாதி மல்லர் மாணாககர் அரிஷ்டனேமி ஆச்சாரியார் செய்வித்த யக்ஷித் திருமேனி" என ஆசிரியராக மல்லர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
  •         காஞ்சிபுரம் வட்டம், சின்னக் காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /861 ) நந்தவனத்திற்கு நிலம் கொடை அளித்த மள்ளர் "கங்க மண்டலத்து மகாமண்டலிகள் சோழமாராசன் கட்டி நுளம்பன் ஸ்ரீ மன்னு புசபெலவீரன் ஆகோ மல்லரசன்" என்கிறது.
  •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சித்தலிங்கமடம் வியாக்கிரபாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 / 432 ), 26 / 435 ). நிலக் கொடை அளித்த மள்ளர் "திருமுனைப்பாடி கிளியூர் மலையமான் அத்திமல்லன் சொக்கப்பெருமாளான ராஜகம்பீர சேதிராயன்" என்கிறது.
  •         திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழப் பழுவூர் வாதமூலிசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /608 ) நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் "தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன் கல்லறை" (மறைமலையடிகள், வேளாளர் நாகரிகம், பக். 41 - 42 ) என்கிறது.
  •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழூர் வீராட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு (இராசேந்திர சோழன் II ,கி.பி.1072 ) (தெ.க.7 /877 ) விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர், "கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்" என்கிறது.
  •         தஞ்சாவூர் மாவட்டம், திருசென்னம்பூண்டி சடையார் கோயில் கல்வெட்டு (பராந்தக சோழன் I , கி.பி.941 ) (தெ.க.7 /512 ) மள்ளருடைய மனைவி அரசன் மகளாவார். "இவ்வூருடையான் குணகல்வன் வீர மல்லன் மனைவாட்டி அரசன் கொற்ற பிராட்டி" (ந.சி.கந்தையா பிள்ளை , தமிழ் இந்தியா , பக்.46 -47 ) எனக் கூறுகின்றது.
  •         தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி கபாலீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 223 ) அரசு அதிகாரி "சேந்தன் மல்லன்" என்கிறது.
  •         திண்டிவனம் வட்டம், திண்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 156 ) கி.பி.1003 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய நிலக்கிழார் "மல்லன் பராதயன்" என்கிறது.
  •         திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலை பழுவூர் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 / 227 ) "பழ்வூர்ச் சங்கரபடி மல்லன் சங்கன்" கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
  •         தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை தேவராயன் பேட்டை மத்தியபுரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 /15 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய மள்ளர் "கருகாவூர் கிழவன் வேளாண்குஞ்சிர மல்லன் மகன் குஞ்சிர மல்லன் கண்டராபணனான கணபதி" (பரிபாடல் 18 :38 :39 ) என்கிறது.
  •         கிரிட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், கம்பையநல்லூர் தேசீகாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 11 ) "அதிகாரி மல்லணார்" (ஐங்குறுநூறு 62 :12 )என்ற மள்ளர் குல அரசு அலுவலர்ப் பற்றி கூறுகிறது.
  •         கோயமுத்தூர் மாவட்டம், அன்னூரில் மள்ளீசர் கோயில் கல்வெட்டு (ARE 586 /1922 ) அமுதுப் படிக்கு காசு கொடை அளித்தவர் "வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம் பலமுடையானான முனையதரன்" (வை.கோவிந்தன், மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ் சாதித் தொகுப்பு) என்கிறது.
  •         தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு (தெ.க.2 /66 , கி.பி.985 -1014 ) நட்டுவம் செய்தவர் கோயில் கட்டிய தலைமை சிற்பி "1 .நட்டுவஞ் செய்த மல்லன் இரட்டையன், 2 .தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" என்று கூறுகிறது.
  •         தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் "கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி" என்கிறது.
  •         விருத்தாச்சலம் வட்டத்தில் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 / 123 ) விளக்கு நெய்க்குப் பசு வளர்த்தவர் "மல்லன் ஆளப்பிறந்தி" (இ.அப்பாசுமந்திரி, புதுக்காப்பியம் (இலக்கணமும்) ப.297 ) என்கிறது.
  •         திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப் பாக்கம் அக்னீசுவரர் கோயில் கல்வெட்டு மள்ளர் குலத்தாரை "இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன் பாடாநாட்டு கங்கநல்லூர் மாதெட்டல் இருங்கோளன்" என்றும், "மல்லன் நக்கன் என்றும், பங்கள நாடுடைய பிரிதியங்கரையன்" மகன் அத்தி மல்லனாகிய கன்நரதேவப் பிரிதியங்கரையன்" என்கிறது.
  •         திருமய்யம் வட்டம், சித்தூர் திருவாகீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாக  நாட்டு நியமனம் செய்கின்றவர் "பராந்தக குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன்" என்கிறது.
  •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சம்பை சம்புநாதர் கோயில் மூலதன வடக்குச் சுவரிலுள்ள இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. வாணகோவரையன் சுத்த மல்லன் வேண்ட வேந்தர் இசைவு தந்து அந்த ஊருக்கு எல்லை வகுத்தது பற்றி " ..... ஓர் ஊர்ரிட வேண்டுமென்று வாணகோவரையன் சுத்த மல்லன் விண்ணப்பஞ் செய்ய....." எனக் கூறுகின்றது.
  •         புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்தின் வடபுறமுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு "ஸ்ரீ அணிமதயேறி வென்றி மதத்தமிழ தியாரைனனான மல்லன் விட்மன் செய்வித்த குமிழி இது செ......தா தச்சன் சொனானனாரையனுக்கு குடு.....த குமிழ்த்துட... குழச்செய்  வடவியது" என்கிறது.
  •         குடிமக்களிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை வரியாக பெற்றதை முற்பராந்தகனின் செங்கல்பட்டு கல்வெட்டு,

"ஆறு கூறில் புரவுமாயதியும் பொன்னும்
பெறுமாறு சோழ கோன்... பறிவையர் கோன்
மங்கல வீர சோழன் அத்தி
மல்லன்
முங்கில் வரி என்னும் வயல்தான் கொடுத்தான்"
எனக் கூறுகிறது.
  •         ரைசின் மைசூர் கல்வெட்டில் கொடுக்கப் பட்டுள்ள அரசர்களின் வரிசைப் பட்டியலில் "திரிபுவன மல்லர்" என்ற மல்லர் குல மன்னரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

உபரித் தகவல்

    'பல்லவ மல்லன்' என்ற போர் வீரன் பல்லவ நாட்டில் தலையெடுத்தான். மாவீரனனான இவன் பல்லவ மரபைச் சார்ந்தவனில்லை என்ற போதிலும் கூட நாட்டைக் காக்கப் படை திரட்டினான். பிறகு அந்நாட்டிலுள்ள சிற்றரசர் அனைவரையும் வென்றான். வெற்றி வாகை சூடியதும் அந்நாடு முழுவதற்கும் தானே மன்னனாகவும் முடி சூடிக் கொண்டான். பல்லவ மல்லனுடைய வீரப் போர் வெற்றிகள் பல நாட்டு மன்னர்களையும் கதிகலங்கும்படி செய்து விட்டது. (பதிப்பாசிரியர் எம்.செ.காலிங்கராயர், செண்பகராமன் பள்ளு,பக். 43 )