கல்வெட்டுகளில் மள்ளர்/மல்லர்


கல்வெட்டுகளில் மள்ளர்/மல்லர்


           வரலாற்றினை மீட்டுருவாக்கம் செய்யக் கல்வெட்டுச் சான்றுகள் மிகவும் இன்றியமையாததாகும். "மள்ளர்" என்ற பெயரில் இதுகாறும் ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. 'ள'கரம், 'ல'கரமாகி "மல்லர்" என்று பதிவு பெற்ற கல்வெட்டுப் பொறிப்புகளே ஏராளம் காணக் கிடைக்கின்றன. கல்வெட்டுகள் மிகவும் காலத்தால் பிற்பட்டன. ஆதலால் இலக்கியங்களைப் போன்று கல்வெட்டுகளில் தொன்மையையும், பிழையின்மையையும் காணமுடியாது. ஏனெனில் இலக்கியங்கள் மொழிப்புலமை வாய்ந்த புலவர்களாலும், கல்வெட்டுகள் தொழில்புரியும் கல்தச்சர்களாலும் எழுதப் பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 'ள' கரம் 'ல' கரமாவது இயல்புதான் 'மள்ளர்' என்பதை 'மல்லர்' எனக் கொள்ளின் அக்து பிழையுமாகாது. மள்ளர், மல்லர் என்ற இரு சொற்களையும் தமிழ்ப் புலவர்களும் கையாண்டுள்ளனர். மல்லர் வரலாற்றை மீட்டெடுக்கக் கல்வெட்டுகள் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றி இங்கே பார்ப்போம். 


மள்ளர்

 • "திருமள்ள வீரசோழப் பேரரையன் மகன் அத்திப் பேரரையன்" (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.107 ) சந்தி விளக்கு வைத்த செய்தியை, செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் வட்டம், கூவம் திருப்புராந்தககேசுவர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 - 360 ) தெரிவிக்கின்றது.

மல்லர்

 •         வடஆர்க்காடு மாவட்டம், வாலாசாபேட்டை வட்டம், திருமால்புரம் மனிகண்டேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.22 / 298 , கி.பி.943 -44 ). நிலம் விற்றுக் கொடுத்த அதிகாரி "கடகன் குஞ்சரமல்லனாகிய சோழமாராயன்" என்கிறது. 
 •          ிருச்சிராப்பள்ளி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், திருமழவாடி வைத்தியநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /635 ) கோயிலுக்கு விளக்கெரிக்க நெய்கொடுக்க சாவா மூவாப்பேராடுகளை ஏற்றுக் கொண்ட மள்ளர்கள் "குஞ்சிர மல்லன் பெருவழுதி,குஞ்சிர மல்லன் காடன், குஞ்சிர மல்லன் திருமால்" (ஞா.தேவநேயன் (பாவாணர்), பழந்தமிழராட்சி, ப.59  ) என்கிறது. 
 •         காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /816 ) நெய்க்காக கோயிலுக்கு பசுக்கள் 32 கொடை அளித்தவர், "திரிலோகிய மல்லன்,கிரிதுர்க மல்லன்,புவனேகநேத்திரன் வைதும்ப மகாராஜன் ராஜேந்திர சோழ மும்முடி விஷ்ணுதேன் துரை அரசன்" (ஆய்வுக்கோவை - 2010 , பாரதியார் பல்கலைக் கழக வெளியீடு, ப.572 ) என்கிறது.
 •         "காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /315 பகுதி சி). போருக்குச் செல்ல ஒப்புக்கொண்ட "பரமேசுவர மல்லர் அதுக்கு ஹிரண்யவரம்ம மகராஜ குல மல்லரையும் கூவி விவை ஆகும். போகராத்தம் மகன் ஸ்ரீ மல்லனு,ரண மல்லனு,சங்கரராம மல்லனு என்பார்கள் விவை குடு என்பர் நி......தாமரவோ செய்வர் நாம் போகாமென பந்தாபந்தா மருப்ப.....வ மல்லனான பரமேஸ்வர நான் போவானேன்று தொழுது நின்ற இடம்" என்கிறது. 
 •         திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.3 /95 பகுதி - 3 கி.பி.910 ) கோயிலுக்கு விளக்கு வைக்க பொன் கொடை அளித்தவர். "கற்பூண்டி நாடுடைய பரபூமிகன் மல்லனாகிய கண்டராதித்தப் பல்லவரையன்" என்கிறது.
 •         போளூர் திருமலையில் வண்ணச் சித்திரங்கள் உள்ள குகைக்கு கீழே உள்ள சிறிய கோயில் கல்வெட்டு (தெ.க.1 /73 ) "திருமலை பரவாதி மல்லர் மாணாககர் அரிஷ்டனேமி ஆச்சாரியார் செய்வித்த யக்ஷித் திருமேனி" என ஆசிரியராக மல்லர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றது.
 •         காஞ்சிபுரம் வட்டம், சின்னக் காஞ்சிபுரத்தில் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டு (தெ.க.4 /861 ) நந்தவனத்திற்கு நிலம் கொடை அளித்த மள்ளர் "கங்க மண்டலத்து மகாமண்டலிகள் சோழமாராசன் கட்டி நுளம்பன் ஸ்ரீ மன்னு புசபெலவீரன் ஆகோ மல்லரசன்" என்கிறது.
 •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், சித்தலிங்கமடம் வியாக்கிரபாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.26 / 432 ), 26 / 435 ). நிலக் கொடை அளித்த மள்ளர் "திருமுனைப்பாடி கிளியூர் மலையமான் அத்திமல்லன் சொக்கப்பெருமாளான ராஜகம்பீர சேதிராயன்" என்கிறது.
 •         திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழப் பழுவூர் வாதமூலிசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.5 /608 ) நந்தா விளக்கு கொடை அளித்த மள்ளர் "தொண்டிநாட்டு மணலூருடையான் மல்லன் கல்லறை" (மறைமலையடிகள், வேளாளர் நாகரிகம், பக். 41 - 42 ) என்கிறது.
 •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், கீழூர் வீராட்டானேசுவரர் கோயில் கல்வெட்டு (இராசேந்திர சோழன் II ,கி.பி.1072 ) (தெ.க.7 /877 ) விளக்கு வைக்க பசு 16 கொடை அளித்த மள்ளர், "கோதண்டன் கண்டனான மதுராந்தக வளநாடாள்வானின் சிற்றப்பன் உபகாரி மல்லன்" என்கிறது.
 •         தஞ்சாவூர் மாவட்டம், திருசென்னம்பூண்டி சடையார் கோயில் கல்வெட்டு (பராந்தக சோழன் I , கி.பி.941 ) (தெ.க.7 /512 ) மள்ளருடைய மனைவி அரசன் மகளாவார். "இவ்வூருடையான் குணகல்வன் வீர மல்லன் மனைவாட்டி அரசன் கொற்ற பிராட்டி" (ந.சி.கந்தையா பிள்ளை , தமிழ் இந்தியா , பக்.46 -47 ) எனக் கூறுகின்றது.
 •         தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலஞ்சுழி கபாலீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 223 ) அரசு அதிகாரி "சேந்தன் மல்லன்" என்கிறது.
 •         திண்டிவனம் வட்டம், திண்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 156 ) கி.பி.1003 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய நிலக்கிழார் "மல்லன் பராதயன்" என்கிறது.
 •         திருச்சி மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மேலை பழுவூர் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 / 227 ) "பழ்வூர்ச் சங்கரபடி மல்லன் சங்கன்" கொடை பற்றிக் குறிப்பிடுகிறது.
 •         தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை தேவராயன் பேட்டை மத்தியபுரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.13 /15 ) கோயிலுக்குக் கொடை வழங்கிய மள்ளர் "கருகாவூர் கிழவன் வேளாண்குஞ்சிர மல்லன் மகன் குஞ்சிர மல்லன் கண்டராபணனான கணபதி" (பரிபாடல் 18 :38 :39 ) என்கிறது.
 •         கிரிட்டிணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், கம்பையநல்லூர் தேசீகாதீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.7 / 11 ) "அதிகாரி மல்லணார்" (ஐங்குறுநூறு 62 :12 )என்ற மள்ளர் குல அரசு அலுவலர்ப் பற்றி கூறுகிறது.
 •         கோயமுத்தூர் மாவட்டம், அன்னூரில் மள்ளீசர் கோயில் கல்வெட்டு (ARE 586 /1922 ) அமுதுப் படிக்கு காசு கொடை அளித்தவர் "வல்லங்கிழான் மல்லன் அழகிய திருச்சிற்றம் பலமுடையானான முனையதரன்" (வை.கோவிந்தன், மகாகவி பாரதியார் கவிதைகள், தமிழ் சாதித் தொகுப்பு) என்கிறது.
 •         தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு (தெ.க.2 /66 , கி.பி.985 -1014 ) நட்டுவம் செய்தவர் கோயில் கட்டிய தலைமை சிற்பி "1 .நட்டுவஞ் செய்த மல்லன் இரட்டையன், 2 .தச்சாசாரியார் வீர சோழன் குஞ்சர மல்லனான ராஜ ராஜப் பெருந்தச்சன்" என்று கூறுகிறது.
 •         தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருக்கோடிக் காவல் திருகோட்டீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 /78 ) பொன் கொடை அளித்த மள்ளர் "கொண்ட நாடுடைய வெட்டுவதி அரையனான மல்லன் வெங்கடேவன் கொடுத்த பொன் பதினைங்கழஞ்சி" என்கிறது.
 •         விருத்தாச்சலம் வட்டத்தில் விருத்தகிரீசுவரர் கோயில் கல்வெட்டு (தெ.க.12 / 123 ) விளக்கு நெய்க்குப் பசு வளர்த்தவர் "மல்லன் ஆளப்பிறந்தி" (இ.அப்பாசுமந்திரி, புதுக்காப்பியம் (இலக்கணமும்) ப.297 ) என்கிறது.
 •         திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தாமரைப் பாக்கம் அக்னீசுவரர் கோயில் கல்வெட்டு மள்ளர் குலத்தாரை "இலத்தூர் சேக்கிழான் அத்திமல்லன் சீராளன் பாடாநாட்டு கங்கநல்லூர் மாதெட்டல் இருங்கோளன்" என்றும், "மல்லன் நக்கன் என்றும், பங்கள நாடுடைய பிரிதியங்கரையன்" மகன் அத்தி மல்லனாகிய கன்நரதேவப் பிரிதியங்கரையன்" என்கிறது.
 •         திருமய்யம் வட்டம், சித்தூர் திருவாகீசுவரர் கோயிலுக்குத் தேவதானமாக  நாட்டு நியமனம் செய்கின்றவர் "பராந்தக குஞ்சிர மல்லனான இராசசிங்க பல்லவரையன்" என்கிறது.
 •         தென்னார்க்காடு மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், சம்பை சம்புநாதர் கோயில் மூலதன வடக்குச் சுவரிலுள்ள இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தியது. வாணகோவரையன் சுத்த மல்லன் வேண்ட வேந்தர் இசைவு தந்து அந்த ஊருக்கு எல்லை வகுத்தது பற்றி " ..... ஓர் ஊர்ரிட வேண்டுமென்று வாணகோவரையன் சுத்த மல்லன் விண்ணப்பஞ் செய்ய....." எனக் கூறுகின்றது.
 •         புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை அருமைக்குளத்தின் வடபுறமுள்ள பாறையில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு "ஸ்ரீ அணிமதயேறி வென்றி மதத்தமிழ தியாரைனனான மல்லன் விட்மன் செய்வித்த குமிழி இது செ......தா தச்சன் சொனானனாரையனுக்கு குடு.....த குமிழ்த்துட... குழச்செய்  வடவியது" என்கிறது.
 •         குடிமக்களிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கினை வரியாக பெற்றதை முற்பராந்தகனின் செங்கல்பட்டு கல்வெட்டு,

"ஆறு கூறில் புரவுமாயதியும் பொன்னும்
பெறுமாறு சோழ கோன்... பறிவையர் கோன்
மங்கல வீர சோழன் அத்தி
மல்லன்
முங்கில் வரி என்னும் வயல்தான் கொடுத்தான்"
எனக் கூறுகிறது.
 •         ரைசின் மைசூர் கல்வெட்டில் கொடுக்கப் பட்டுள்ள அரசர்களின் வரிசைப் பட்டியலில் "திரிபுவன மல்லர்" என்ற மல்லர் குல மன்னரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

உபரித் தகவல்

    'பல்லவ மல்லன்' என்ற போர் வீரன் பல்லவ நாட்டில் தலையெடுத்தான். மாவீரனனான இவன் பல்லவ மரபைச் சார்ந்தவனில்லை என்ற போதிலும் கூட நாட்டைக் காக்கப் படை திரட்டினான். பிறகு அந்நாட்டிலுள்ள சிற்றரசர் அனைவரையும் வென்றான். வெற்றி வாகை சூடியதும் அந்நாடு முழுவதற்கும் தானே மன்னனாகவும் முடி சூடிக் கொண்டான். பல்லவ மல்லனுடைய வீரப் போர் வெற்றிகள் பல நாட்டு மன்னர்களையும் கதிகலங்கும்படி செய்து விட்டது. (பதிப்பாசிரியர் எம்.செ.காலிங்கராயர், செண்பகராமன் பள்ளு,பக். 43 )

No comments:

Post a Comment