தேவேந்திர நாடாழ்வான்

"தேவேந்திர நாடாழ்வான்" --- கல்வெட்டுகளில் 'தேவேந்திரன்'


 •         திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மன்னார் கோயில் குலசேகரப் பெருமாள் கோயில் கல்வெட்டு (ARE No . 398  of  1916 )
  1. "வடவாறி நாட்டு உரிமையழகியானில் பரிக்கிரகம் தேவேந்திர வல்லபன்"
  2. "தேவேந்திரப் பல்லவரையன்" என்கிறது.

 •         தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், மாற மங்கலம் சந்திரசேகர் கோயில் கல்வெட்டு (தெ.க.8 / 445 ) நந்தா விளக்கிற்கு நிலம் விற்றுக் கொடுத்த 'தெய்வேந்திரப் பேரரையன்' பற்றிக் கூறுகிறது. தேவேந்திர குலத்தார் பெயரில் சதுர் வேதி மங்கலம் அமைத்த செய்தியை "மாற மங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதி மங்கலம்" எனக் குறிக்கிறது.
 •         சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் கல்வெட்டு (தெ.க.8 /178 , 8 /179 , கி.பி.1098 ) நிலம் விலை முடிக்கப்பட்ட செய்தியைக் கூறுகையில் "கீழக் கோட்டையாளன் கலங்காத கண்டநல்லூர்த் தேவன் தொங்கனான மாளவ தேவேந்திரப்ப அரையன் -- சக்ரவர்த்தி மல்லனான அஞ்சாத கங்கராயன்" என்கிறது.
 •         சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் சொக்க லிங்கபுரம், சோழீசுவரர் கோயில் கல்வெட்டு (தமிழக தொல்லியல் கழகம்,ஆவணம் 11 , சூலை 2000 ப.48 ) "தேவேந்திரன் நாடாழ்வான்" என்று தேவேந்திரன் நாடாண்ட மரபினர் என்பதைக் காட்டுகிறது
 •         கரூரில் இருந்து கோயமுத்தூர் செல்லும் பாதையில் 27 கல் தொலைவில் உள்ள தெண்ணிலை சிவன் கோயில் கல்வெட்டு "ஸ்வஸ்தி ஸ்ரீ சிவல்லப தேவற்கு யாண்டு மூன்றாவது என்று தொடங்கும் இக்கல்வெட்டில் இவூரின் பெயர் 'தெண்ணிலி' என்றும், இறைவனின் பெயர் "தெண்ணிலி நாயனார் தேவேந்தீசுரமுடைய நாயனார்" (இரா.செயராமன் , கல்வெட்டு, காலாண்டிதழ் , மே. 1992 , ப.34 ) என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டில் கோயிலுக்குக் கொடை அளித்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
 •         கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி வட்டம், அவினாசியில் அம்மன் கோயில் மகாமண்டபத் தென்சுவர் கொடுன்கையின் கீழ் காணப்படும் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு
                "....இறையிலியாக உழுது பொதுவானதாகவும் இவனுக்கு இக்காணி பெற்று மற்றும் எப்பேர்ப்பட்ட சர்வ பிராப்திக்கும் உரித்தாவதாக சந்திராத்திதவரை இவன் மக்கள் செல்வதாக நம் ஓலை குடுத்தோம். முதலைவாய் பிள்ளை குடுத்த வேளானுக்கு இப்படிக்கு செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க. இப்படிக்கு அருளால் ஆதி சண்டேஸ்வரன் காஸ்யபன் சீகாழி மொழி பாகன் எழுத்து யான தட்டுருவ விட்ட இப்படிக்கு திருகல இராமபிரான் எழுத்து சுந்தரபாண்டிய சக்கரவர்த்தி எழுத்து இப்படிக்கு மாதேவாண்டான் எழுத்து இப்படிக்கு ஆளுடையான் எழுத்து இப்படிக்கு தேவேந்திரப் பிச்சன் எழுத்து இப்படிக்கு ஆளுடையநாயன் எழுத்து இப்படிக்கு கூத்தப் பெருமான் எழுத்து இப்படிக்கு அருளால் ஆதி சண்டேஸ்வரன் ஸ்ரீகரணத்தான் எழுத்து இது பன்மாஹேஸ்வரரட்சை" என்கிறது.

 •         கோயமுத்தூர் மாவட்டம், அவினாசி கருணாம்பிகை கோயில் மகாமண்டப வடக்குச் சுவரில் காணப்படும் கி.பி.1289 ஆம் ஆண்டைய கல்வெட்டு
        "...... ஆண்டு ஒன்றுக்கு நெல்லு நூற்று ஐம்பத்திரு கலனே குறுணி அளந்து போதக் கடவார்களாகவும் இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளவும். இதற்க்கு சிலவு இரண்டுப்படி அரிசி ப....கையிலே சந்திராதித்தவரையும் அ.....மாதவாண்டான் எழுத்து. இப்படிக்கு ஆளுடையான் எழுத்து.ஆதிசண்டேஸ்வரன் ஸ்ரீகரணத்தான் சம்பந்தன் எழுத்து. ன தட்டுருவ விட்ட சுந்தரபாண்டிய சக்கரவர்த்தி எழுத்து. இப்படிக்கு தேவேந்திரப்பன் எழுத்து... இப்படிக்கு ஆளுடையநாயன் எழுத்து. இப்படிக்கு கூத்தப் பெருமான் எழுத்து.... இவை ஆடிமாதம் இருபத்தொன்பதாம் தியதி முதல் சந்திராதித்ய வரை செல்வரை........" என்கிறது.

 •         ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மூன்றாவது தொரை மண்டபத்தின் வடக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு கி.பி.1276 இல் அரியணை எரிய இரண்டாவது ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது. "அப்பன் தேவேந்திர வல்லப பிரமாராயர் ஜீ வைஷ்ணவர்களுக்கு" அமுது படைக்க நிலம் கொடுத்த செய்தியைக் கூறுகின்றது. தேவேந்திர வல்லபன் என்னும் வேந்தன் பெயரால் பிராமணர்களுக்கும் விருதுகள் வழங்கப் பட்டன என்பதை அக்கல்வெட்டுக் கூறும்
  1. "ஸ்வத்ஸிஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முட்கொண்ட சோழபு ..... சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 15 எதிராமாண்டு பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம் இவ்வூர் சிகைலாசமுடையார் சந்திரசேகர ஈஸ்வர முடைய நாயனார்க்கு சண்டேஸ்வர விலையாக...." என்கிறது.
  2. "ஸ்வத்ஸிஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் சோனாடு... கொண்ட சோழபுரத்து வீர அபிசேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 17 -வது பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப  துர்வேதி.... லத்து மகாசபையோம். இவ்வூர் உடையார் சந்திரசேகர் ஈசுவரமுடைய நாயனார் தேவதானக் கருஞ்செய்யும் இவ்வூர் அழகிய பாண்டிய விண்ணகர்....." என்கிறது.
  3. "ஸ்வத்ஸிஸ்ரீ. திரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 11 -வது பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து திருமேல் கோயிலில் அழகிய பாண்டிய விண்ணகர் எம்பெருமான் கோயிலில் திருவடி பிடிக்கும் நம்பிமாற்கு......." என்கிறது.
  4. "ஸ்வத்ஸிஸ்ரீ. பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லப சதுர்வேதி மங்கலத்து மகாசபையேம்... மற்கே.... பெருமாள் திருவடி பிடிக்கும் நம்பிமார் கண்டு ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 11 -வது அற்பிகை மாதம் இவ்வூர் திருவிடையாட்டம் தாங்கள் அனுபவித்து வருகிற நிலத்துக்கு இந்நூல் முதல் வரி நீங்கப் ... இவை ஸ்ரீபொகலூர் கூத்தன் பெரிய நம்பியான கருணாகர நம்பி எழுத்து. இவை இறைவாரபூற் செந்தாமரைக் கண்ணன் சூரிய தேவனான தேவேந்திரப் பிரமாதராயன் எழுத்து. இவை சிபொகலூர் சிதரன் சிகைலாஸமுடையானான சிவல்லபப் பிமாதராயன் எழுத்து....." என்கிறது.
  5. "ஸ்வத்ஸிஸ்ரீ. ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு 17 -வதின் எதிராமாண்டு பராந்தவ.... மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம். வி.....திரசேகர ஈஸ்வரமுடைய நாயனார் திருவாசலில் கூட்டக் குறைவேறக் கூடியிருந்து....." என்கிறது.
 •         "திருமுகைப்படி திரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மை கொண்டான் பராந்தக வளநாட்டு மாறமங்கலமான தேவேந்திர வல்லபச் சதுர்வேதிமங்கலத்து சமையாற்கு தங்களூர் முன்பு குதிரைச் செட்டிகள்....." என்கிறது.
          "தேவேந்திர வல்லபன் பெயரால் சதுர்வேதி மங்கலம்" இருந்ததை மேற்கண்ட தென்னிதியக் கல்வெட்டுகள், தொகுதி - 8 , எண். 446 , 447 , 451 - 454  விளக்குகின்றன

 •         திருப்பத்தூர் அருகில் சொக்கலிங்கபுரம் அழகிய சோழீசுவரர் கோயில் கல்வெட்டில் "தேவேந்திர நாடு" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
 •         சங்கரன்கோயிலில் பழங்காலப் பாண்டியரலால் கட்டப் பட்ட மண்டபங்களும், அவைகளில் உள்ள சிற்பச் சிலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கவரும் வண்ணம் உள்ளன. 1506 ஆம் ஆண்டில் பொறிக்கப் பட்ட பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகளும் சங்கரன்கோயிலில் காணப்படுகின்றன. இது இவரது 33 வது ஆட்சியாண்டைச் சார்ந்ததாகும். கோயிலைச் சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுகளில் பராக்கிரம பாண்டியன் நிலக்கொடைவழங்கிய செய்தி இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510 இல் அவனது 26 ஆவது ஆட்சியாண்டில் பொறிக்கப் பட்டுள்ளது. கி.பி.1562 -1605 வரை அதிவீரராம பாண்டியன் சங்கரன் கோயில் பகுத்யை ஆட்சி செய்துள்ளான். இவனே கழுகுமலைப் பகுதியையும் ஆண்ட பாண்டிய மன்னனாவான். சங்கரன் கோயிலின் வடக்குப் பக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகர பாண்டியன் சகம் 1475 ஆகிய தனது மூன்றாவது ஆட்சியாண்டில் கோட்டூர் என்னும் ஊரை இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இடம் பெற்றுள்ளது.( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு, பக்.14-15 )

  மற்றுமொரு கல்வெட்டில் (கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு)"


  "
  விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
  திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
  தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
  துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
  சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
  இருக்கின்ற காலத்திலே 
  தெய்வேந்திரன் பக்கல் மழை
  கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
  மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
  வணங்கியிருக்க பாண்டியன் 
  தெய்வேந்திரனுடனே
  கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
  கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
  தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
  கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
  விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
  பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
  ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
  நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
  பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
  அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
  பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
  வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
  ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
  வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
  பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
  கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
  2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
  கட்டளையிட்டு நடக்கிற காலத்தில் பறையர் தங்களுக்கு இந்த
  வரிசை உண்டென்று நடப்புவித்தார்கள். ஆனபடியினாலே ஐந்து சாதிக்கும் பிள்ளை என வேந்தலிலிருக்கும் அனுமக் கோடி அடிச்சாலும் (வாகைகுளம்) குட்டிக்குடும்பனும் அல்லகர்த்தாகுடும்பனும், கூட்டிக் கொண்டு சமூகம் ஏறி விண்ணப்பித்துக் கொள்ள ஆதி பூர்வ ராஜாக்கள் கொடுத்த  பட்டயம் பார்த்துப் பறையர்களுக்கு உண்டான வரிசை நன்மைக்கு மூன்று கால் பந்தலும் ஒரு சிலம்பும் ஒரு கொடுக்கும் ஒத்த
   மாராப்பும், ஒரு பந்தமும் கிளப் பாவாடையும் மஞ்சியில் தண்டியக்
   கொம்பில்லாத வீடும் துன்மைக்குக் கட்டணமும், பட்டடப்
  படிக்கு கட்டளையிட்டோம். குடும்பிகளுக்கு குதிரைக்குடையும்
   இட்டு இந்த இரண்டு கோட்டை விதைப் பாடும் கொடுத்து இந்த
   வரிசைப் பரிகாரம் கட்டளை இடுவித்தோம். இதற்க்கு அதிகம் பண்ணினவர்கள் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற தேசத்திலே போலாவார்களாகவும்"
   ( தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 /1914 )
      என்று திருநெல்வேலி -சங்கரன் கோவில் - கரிவலம் வந்த நல்லூர்க்கோயில் கல்வெட்டுகள் குறித்துள்ளன. (தென்னிந்தியா கோயில் கல்வெட்டுகள் II 863D - 3226 , 432 / 1914 )

No comments:

Post a Comment