Showing posts with label கிரேக்கம். Show all posts
Showing posts with label கிரேக்கம். Show all posts

கிரேக்கம் படைத்த பாண்டியர்கள்

கிரேக்கத்திற்கும் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்ப்பு இருப்பது பழங்காலத்து கிரேக்க - பாண்டிய கடல் வழி வணிகம் மற்றும் கிரேக்க கடவுள்கள் மற்றும் வழிபாட்டு முறை மூலம் விளங்கும் .

கிரேக்க புராணங்களில் Battle of Thermopylae ( 300 ஸ்பார்டன்ஸ் - ஹாலிவுட் திரைப்படம் ) மிக முக்கியமான போர் .... உலகத்தின் பல பகுதிகளை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டுவந்த பெர்சிய பேரரசன் Xerxes l , வெறும் 300 ஸ்பார்ட வீரர்களின் தாக்குதலில் தன் படைபிரிவில் பல பகுதிகளை இழந்தான் . ஸ்பர்டாவின் மக்கள் தங்களை கிரேக்க இந்திரனான Zeus இன் மகன் Heracles/Hercules இன் ரத்தத்தில் உதித்தவர்கள் என்று பெருமை கொள்வர் . #இந்திரகுலத்தார் என்று இன்றும் தங்களை தமிழகத்தில் கூறிகொள்ளும் ஒரே மக்கள் பிரிவு #பள்ளர்கள் மட்டுமே .

தமிழர் வேந்தன் இந்திரன் :

"வேந்தன் மேய தீம்புனல் உலகமும் "

தொல்காப்பியம் சுட்டும் மருதநில வேந்தனே இந்திரன் என அழைக்கப்பட்டான் . தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டபின் இவ்வேந்தனான இந்திரனே தெய்வேந்திரன் என்று அழைக்கபடுகிறான் . தெய்வேந்திரன் மருவி தேவேந்திரன் என்றாகிப்போனது .

தெய்வம் + வேந்தன் + இந்திரன் = தெய்வேந்திரன் 
தேவர் + வேந்தன் +இந்திரன் = தேவேந்திரன் . 

உழவு செய்யும் உழவர்களுக்கு (தெய்வங்களுக்கு) வேந்தனான இந்திரன் தேவேந்திரன் எனப்பட்டான் .

தேவேந்திரன் இடி, மின்னல், மழையின் கடவுள் .குறிப்பாக போர் கடவுள் . வேளாண்மை செழிக்க மழை வரம் தரும் மருத நில தலைவன். ஈடிணையில்லா வஜ்ராயுதம் எனும் இடியினை தன் ஆயுதமாக கொண்டவன் . குமரிக்கண்டத்தின் காலத்தில் மேரு மலையின் உச்சியில் குடிகொண்டவன் . முழுமுதற்கடவுளான இந்திரனை நான்மறைகள் போற்றதவரியதே இல்லை.

கிரேக்க இந்திரன் Zeus :

Zeus is the "Father of Gods and men" who rules the Olympians of Mount Olympus as a father rules the family according to the ancient Greek religion. He is the god of sky and thunder in Greek mythology. His symbols are the thunderbolt, eagle, bull, and oak. In addition to his Indo-European inheritance, the classical "cloud-gatherer" also derives certain iconographic traits from the cultures of the Ancient Near East, such as the scepter. Zeus is frequently depicted by Greek artists in one of two poses: standing, striding forward, with a thunderbolt leveled in his raised right hand, or seated in majesty. (நன்றி விக்கிபீடியா )

ஆக தமிழர்வேந்தன் இந்திரனே கிரேக்க கடவுளாக வாழ்ந்திருக்கிறான் என்பது மிக தெளிவாக தெரிகிறது .

சமீபத்தில் வெளியான 300 (பாகம் 2) இன்  படத்தின் அடுத்த பகுதி .



ஏதென்ஸ் நகர தளபதி Themistocles பெர்சிய படைகளை ஒரு கை பார்க்கிறார் ... திடீர் தாக்குதல் நடத்தி பெர்சிய படைகளை நிலை குழைய செய்கிறார் ... இதனை கண்டு வியந்த பெர்சிய முக்கிய தளபதி Artemesia Themistocles ஐ அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறாள் ... அப்பொழுது உள்ள வசனம்

" Themistocles உன் வீரம் கண்டு வியக்கிறேன் ... எங்கள் அரசர் இறப்பதற்கு முன் கிரேக்கர்களை கடவுள்களை தவிர யாராலும் வெல்ல இயலாது என்றார் ... அப்பொழுது நான் நம்பவில்லை ஆனால் இப்பொழுது நம்புகிறேன் உன்னுள் இறையருள் இருக்கிறது ... உனக்குள் ஓடுவது Poseidon இன் ரத்தம் ... அத்தீனியர்கள் கடல்களின் கடவுளான Poseidon இன் வழித்தோன்றல்கள் என்று நான் அறிவேன் "

யார் இந்த Poseidon ?
கிரேக்க கடல் தெய்வம் பொசைடன்

கிரேக்க இந்திரன் zeus இன் உடன் பிறப்பு ... திரிசூலத்தை ஆயுதமாக கொண்டவன் . கடல்களின் அரசன் . ஏதென்ஸ் நகரத்தை உருவாக்கியதில் பள்ள ஏதேனாவிற்க்கு உதவியவன் . ரெட்டை மீன் சின்னத்தை உடைய Oceanus இன் மறுஉருவம்

நமக்கு தெரிந்த திரிசூலம் கொண்ட கடவுள் சிவன் ஒருவனே . சிவனை பாண்டிய மன்னன் என்றே இன்றும் பல கோயில்களில் விளிகின்றனர் . கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சிவனை வேளாண்மை செய்யும் #பள்ளன் என்றே குறிபிடுகின்றனர் .

[[ பாண்டியனின் சின்னம் ரெட்டை மீன் . பாண்டியர்களே முதன் முதலில் கடலில் பாய்மர கப்பல்களை செலுத்தியவர்கள் . கடலின் மீது கொண்ட ஆளுமையினால் "கடலன் " எனும் சிறப்பு பெயர் பாண்டியர்களுக்கு உண்டு . மேலும் தமிழின மரபு பெயர்களான குடும்பன் , காலாடி, பள்ளா , மள்ளா கிரேக்கத்தில் இன்றும் உள்ளது ( kaladi beach in Greece , First boat named as "Kudumbagar") - கடலியல் ஆய்வாளர் திரு ஒரிசா பாலு Orissa Balu அவர்களுக்கும் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவதிற்கும் நன்றி ]]

தமிழ் மரபு பெயரை உடைய ஒரு உழவு சமூகமே தான் தமிழகத்தில் பின்பற்றிய சிவ வழிபாடையும், இந்திர வழிபாடையும் (முன்னோர் வழிபாட்டு முறை ) அங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெளிவு .

ஏதென்ஸ் நகரில் பாண்டியர்களே முதல் அரசை உருவாக்கியவர்கள் . "Pallas son of Pandion l of Athens" என தமிழர் மரபு பெயர்களை உடைய உழவு சமூகமே கிரேக்கத்தின் முதல் அரசை நிறுவியவர்கள் என கிரேக்க புராணங்கள் கூறுகின்றன . தமிழ்நாட்டில் பண்டையோன் பாண்டியனின் தலைநகரமான மதுரைக்கு "கிழக்கின் ஏதென்ஸ்" (Athens of the East) என்ற சிறப்பு பெயர் வழங்கி வருவதன் அர்த்தம் இங்கு விளங்கும் .

பாண்டியனை ஹீரோ என்றே அழைகின்றனர் . இந்திர விழாவை கிரேக்கத்தில் கொண்டாடியவன் பாண்டியனே என தெளிவாக விக்கிபீடியா கூறுகிறது .

Pandion was the eponymous hero of the Attic tribe Pandionis, He is usually assumed to be one of the two legendary kings of Athens, Pandion I or Pandion II. Pandion had a heroon (hero shrine) on the Acropolis of Athens, where Pausanias reports seeing a statue of Pandion. Pandion was also honored with a statue (along with the other tribal heroes) at the Monument of the Eponymous Heroes in the Agora.

Pandion was probably associated in some way with the ancient Athenian festival Pandia(இந்திர விழா ) , and it is possible that the festival derived its name from Pandion. However the festival was probably held in honor of Zeus(இந்திரன்)

மேலும் அந்த திரைபடத்தில் உள்ள வசனங்கள் :

" உழவர்கள் இன்னைக்கு நல்லா போர் செய்ஞ்சாங்க .... "

" பயிற்சி இல்லாத உழவர்கள் கூட அருமையா சண்டை போட்டாங்க ... இயற்க்கையாவே அவங்களுக்குள்ள போர்த்திறன் இருக்கு "

" வீரர்களே நாமெல்லாம் உழவர்கள் - மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு செத்து மடிவோம் "

ஆக உழவர்களே பெரும் படையாக திரண்டு போர்த்தொழிலும் செய்திருகின்றனர் . தமிழ் அகராதியில் (நிகண்டுகளில் ) 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர நிகண்டில்

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்"

என்று #மள்ளர் எனும் பெயருக்கு விளக்கம் கொடுக்கிறது

ம(ப)ள்ளர்கள் வேளாண்மை செய்யும் உழவர்கள் என்றும், போர் என்று வந்தால் படை வீரர்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது . தான் உண்ணும் உணவை தானே உற்பத்தி செய்துகொள்ளும் உயர்ந்த தொழில்நுட்பத்தை உடைய உழவன் தன் இறைவனை தவிர வேறு எவருக்கும் அடிபணியா சுதந்திர வீரனாகவே இருந்திருக்கிறான் .

வேளாண்மை = வேள் (மண்) + ஆண்மை(ஆளுமை)
வேளாண்மை = விவசாயம் (பயிர் தொழில் )
பாண்டியம் = விவசாயம்
#பாண்டியன் = #மன்னன் , #உழவன்
#பள்ளன் = பள்( மண் ) மண்ணை உழுது பயிர்த்தொழில் செய்பவன் .

ஆக தமிழின மூத்த குடிகளான பள்ளர்களின் அறிவாற்றலும் , கடலின் மீது கொண்ட ஆளுமையும் , வேளின் (மண்ணின் ) மீது இருந்த ஆளுமையும் பாண்டியர்களின் (தமிழனின்) சூரியன் மறையா சாம்ராஜ்யத்தை படைக்க துணை நின்றது மிகதெளிவாக தெரிகிறது .

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."

ஆய்வு
லோகேசுவர பாண்டியன் தேவேந்திர குடும்பன்

கிரேக்கத்தில் பள்ளர்

தமிழகத்தில் மழை தெய்வமான இந்திரனின் மகளான தெய்வானையை போல், கிரேக்க இந்திரன் (ஜீயஸ்) மகளான, இன்றைய ஏதென்ஸ் என்ற பிராந்தியத்தின் நினைவாக உள்ள 'ஏதேன்னா' என்ற பெண் கடவுளை 'பள்ளர்' என்றே கிரேக்க இலக்கியங்கள், வரலாற்று குறிப்புகள் குறித்து வைத்துள்ளன.


கிரேக்க கடவுள்களின் குடும்ப உறவுகள் 


கிரேக்க இந்திரன் ஜீயஸ்


உழவு மற்றும் போர் கடவுளான பெண் தெய்வம் 'ஏதென்ன பள்ளா'

ஆஸ்திரிய நாடாளுமன்றத்தின் முன்பு இருக்கும் 'ஏதென்ன பள்ளா'வின் சிலை.


Pallas Athena

The war goddess of the ancient Greeks was Athena often called Pallas Athena, or simply Pallas. The Romans identified her as Minerva and ranked her third among their gods, after Jupiter and Juno. Athena was also worshiped as the goddess of wisdom and of crafts, especially spinning and weaving.
According to mythology, Athena was the favorite daughter of Zeus. She was said to have sprung from his head full grown and clothed in armor. The goddess was usually shown wearing a helmet and carrying a spear and shield. Like her father, she also wore the magic aegis a goatskin breastplate, fringed with snakes, that produced thunderbolts when shaken. Athena was very different from the war god Ares. She represented the intellectual and civilized side of war she was not so much a fighter as a wise and prudent adviser.
Athena was regarded as the protector of all cities and states. She was wise not only in war but also in the arts of peace. She supposedly invented the plow and taught men how to yoke oxen.
Athens became the most important seat of the worship of Athena. Zeus had decreed that the city should be given to the god who offered the most useful gift to the people. Poseidon gave them the horse. Athena struck the bare soil with her spear and caused an olive tree to spring up. The people were so delighted with the olive that Zeus gave the city to Athena and named it after her. Athena is often shown with an olive branch, a symbol of peace and plenty.
On the hill of the Acropolis the Athenians built a beautiful temple to Athena called the Parthenon (from parthenos, meaning . In the temple stood the ivory and gold statue called the Athena Parthenos, by Phidias, the greatest Greek sculptor.The Athenians held their most important festival, the Panathenaea, on the day considered to be the goddess' birthday. It was celebrated by a procession, sacrifices, and games.

Source: http://library.thinkquest.org/17709/people/athena.htm

தமிழாக்கம்
கிரேக்கர்களின் போர் கடவுள் 'ஏதென்ன பள்ளா' சுருக்கமாக 'பள்ளா'. ரோமானியர்கள் இந்த பெண் தெய்வத்தை 'அறிவின் கடவுளாக' (தமிழ் இலக்கியத்தில் சரஸ்வதி என்று பொருள் கொள்ளவும்) கொண்டு, தங்களது இந்திரனான ஜூபிடர் மற்றம் ஜூனோ என்பதற்கு அடுத்த படியாக ஏதென்ன பள்ளாவை வழிபட்டனர்.

கிரக்கர்கள் எதேன்னாவை அறிவின் கடவுளாகவும்,கலைகளின் கடவுளாகவும் (தமிழில் சரஸ்வதி) வழிபட்டனர். குறிப்பாக நெசவு மற்றும் ஆடை நெய்தலின் கடவுளாக வழிபட்டனர். ஏதேன்னா கிரேக்க இந்திரனான ஜீயசுக்கு மிகவும் பிடித்தமான மகளாக இருந்திருக்கிறாள். ஏதேன்னா இந்திரனின் தலையில் இருந்து உதித்தவள் என்றும், அவள் போர் கோலம் பூண்டவாறு காட்சி அளிக்கிறாள் என்றும் கிரேக்க புராணம் கூறுகிறது. இந்த பெண் தெய்வம் தலையில் கவசமும், கையில் கதை ஆயுதமும், கேடையமும் கொண்டு காட்சி தருகிறாள். இவள் தனது தந்தையை போலவே இந்த பெண் தெய்வமும் தனது உடலில் கவசத்துடன் காட்சி தருகிறாள். அந்த கவசத்தில், 'உலுக்கினால் இடையையும் மின்னலையும் உருவாக்கும்' பாம்புகள் நெளியும் வண்ணம் உள்ளன. இவள் மற்றொரு போர் கடவுளான 'அரியஸ்' இல் இருந்து முற்றிலும் வேறுபடுகிறாள். இவள் நாடு நகரங்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள். இவள் போருக்கும் மற்றும் இன்றி அமைதிக்குமான கடவுளாகவும் விளங்குகிறாள். வேளாண்மையை கண்டறிந்தவலான இவள், மக்களுக்கு எருதினை பூட்டி ஏர் உழவும் கற்று கொடுக்கிறாள். ஏதென்ஸ் நகரம் 'ஏதென்ன பள்ளாவின்' துதி பாடும் முக்கிய நகரம் ஆகும். அந்த நகரை உருவாக்கிய பள்ளாவின் பெயரிலேயே அந்த நகரம் (ஏதென்ஸ்) அழைக்க பட வேண்டும் என்று கிரேக்க இந்திரன் ஜீயஸ் கட்டளை இட்டார். கிரேக்க மக்களின் விருப்ப பயிரான 'ஆலிவ்' விதையை ஏதென்ன பல்லாவே விதைத்தாள். இதன் பலனாக ஜீயஸ், எதெனனவுக்கெ அந்த நகரை கொடுத்ததோடு மட்டும் இன்றி, அந்த நகருக்கு அவளின் பெயரையே சூட்டினார். இதன் காரணமாக ஏதேன்னா இன்றும் அமைதியின் சின்னமாக ஆலிவ் இலைகளுடன் காட்சி தருகிறாள்.


பணதேனியா என்ற பண்டிகை
Panathenaea,  in Greek religion, an annual Athenian festival of great antiquity and importance. It was eventually celebrated every fourth year with great splendour, probably in deliberate rivalry to theOlympic Games. The festival consisted solely of the sacrifices and rites proper to the season (mid-August) in the cult of Athena, the city protectress. At the Great Panathenaea, representatives of all the dependencies of Athens were present, bringing sacrificial animals. After the presentation of a new embroidered robe to Athena, the sacrifice of several animals was offered. The great procession, which included the heroes of Marathon, is the subject of the frieze of the Parthenon. Musical contests were held, and portions of epic poems were recited, a long-standing accompaniment of the festival. The contests took place in the odeum, originally built for the purpose by Pericles himself.
Source: http://www.britannica.com/EBchecked/topic/440866/Panathenaea



ஏதென்ன பள்ளாவின் கோவில்

மழையை மாரி என்றும், ஊரின் எல்லை மற்றும் காவல் தெய்வத்தை குறிக்கும் பொருட்டு அந்த மாரி அம்மனுக்கு கோடை காலத்தில் விழா எடுப்பதுவும் வழக்கம். இவ்வாறு தனது ஊர் காவல் தெய்வமான ஏதேன்னா பள்ளாவிற்கு கிரேக்கர்கள் எடுக்கும் விழாவே 'பணதேனியா' என்பதாகும்.
இந்த பணதேனியா என்ற கிரேக்கர்களின் அதி முக்கிய விழாவை பற்றி சில முக்கிய குறிப்புகள்:

* வேளாண்குடி மக்களால் இந்த பணதேனியா விழா ஒருங்கிணைக்கப்படுகிறது.
* கிரேக்க மக்கள் அனைவரும் ஏதென்ன பள்ளா'வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு இடத்தில் கூடுகின்றனர்.
கோவிலை நோக்கி ஊர்வலம்

*வருடம் முழுவதும் பண்டிகை கொண்டாடப்பட்டாலும், நான்காவது வருட முடிவில் கொண்டாடப்படும் பண்டிகையே சிறப்பு. இந்த பண்டிகை 12 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
* இந்த விழாவின் போது பல சடங்குகள் சம்பிரதாயங்கள் நடை பெறுகின்றன. பள்ளாவின் பெருமை பேசும் பாடல்கள் இசைக்கப்படுகின்றன.இதில் பெருவாரியான ஆடு,மாடு போன்ற விலங்குகள் பலி இடப்படுகின்றன. பலி இடப்பட்டதும் மாமிசம் மக்களுக்கே பிரசாதமாக பகரிந்து அளிக்க படுகிறது.




ஒரு ஒப்பீட்டு ஆய்வுக்காக, பழனி மலையில் கிடைத்த ஓவியம் இது.


* விழாவின் ஒரு பகுதியாக தீச்சுடர் ஏந்தி மக்கள் ஓடும் 'மாரத்தான்' உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது.
தீப்பந்தம் ஏந்தி வருதல்

* தாரை தப்பட்டைகள் முழங்க, வாள் வேலுடன் போர் வீரர்கள் முன்னுக்கு ஆடி கொண்டே 'ஏதென்ன பள்ளாவின்' இருப்பிடம் நோக்கி செல்லுதல்
The dance would have been performed to the sound of the aulos (picture a double flute) and those who have read up on the Spartans may have remembered that the Spartans marched in step to the sound of this. Music being used to establish a march is something which occurred in relatively modern times, infantry marching to the sound of a drum, or bagpipes for example.
Source: http://hehasawifeyouknow.tumblr.com/post/49869528164/the-panathanaic-festival



இவை எல்லாம் பள்ளர்கள் இன்றும் வழிபாடும் மாரியம்மனின் திருவிழா, தீச்சட்டி,ஊர்வலம்,ஆடு புலி ஆட்டம், வாள் வேல் ஆட்டம், கிடா வெட்டுதல்,தலை வரிக்கு காணிக்கையாக இறைச்சியை பகிர்ந்து அளித்தல் என்று ஒத்துக் போகும் வரலாற்று உண்மையை காணலாம்.

More sources:



ஆய்வும் மூல தகவலும் வழங்கியோர்:
கடலியல் நிபுணர் ஒரிசா பாலு & 
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்