=> பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே
காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு
இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து பேர்களும், முதலியார்களும் நான்கு பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில் ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பட்டயத்தின் காலம்
"சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்".
தேவேந்திரர் மெய்க்கீர்த்தி
"தேவேந்திரப் பள்ளரில் வெள்ளானை வேந்தன் மிக விருது பெற்றவன். சேத்துக்கால் சென்னன், சென்னல் முடிக்காவலன், தேவேந்திர வர புத்திரன், மண் வெட்டி கொண்டு மலையை கடைந்த கண்ணன், வெள்ளானை கொடி படைத்தவன், வெள்ளக் குடை, முத்துக்குடை, பஞ்சவர்ண குடை, முகில் கொடி, புலிக் கொடி, அழகுக் கடை படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் தேவேந்திரப் பள்ளன்"
விருது பெற்ற தேவேந்திரர்கள்
"காஞ்சிபுரத்துப் பண்ணாடி, சின்னக் காஞ்சிபுரம் நாகப் பண்ணாடி, சர்வதீரத்து வீதி முத்துப் பன்னாடியும், செஞ்சி நகரம் அரசப் பன்னாடியும், தஞ்சாவூர் சீரங்க மூப்பன். திருச்சிராப்பள்ளி மூக்க மூப்பன், திருவெங்கிமலை நயினார்க் குடும்பன் மதுரை நாராயணக் குடும்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்திமதி காலாடி, திருச்செங்கோடு பழனிப் பன்னாடியும் தேவேந்திர கூட்டத்தின் பெரியோர்களாகும்."
சிவகங்கைக் குடும்பர்கள் செப்பேடு
இப்பட்டயம் எழுத்தப் பட்ட ஆண்டு கி.பி.1752 ஆகும். வரி.96 - 107
தேவேந்திரர் சிறப்புகள் - அவை கூடுதல்
"வெள்ளாண்மை யுலகில் வியணப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வர்சையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகன் சேர் சேறாடிக் குடையும்ஞ் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால்ச் செலவரான குடும்பர்களும், அமராபதிகளும், அளகாபுரிக்கும், நிகரைச் சிரஞ்சீவிப் பதியான் சிவகெங்கைத் திருக்குளத்தங் கரையில்ச் சீவற்னயீசுவரன் பெரியனாயகி சன்னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வட திசை தென் திசையிலும் உள்ள உறவின் முறையாரையும், குடும்பர்களையுங் கூட்டஞ் செய்து..." என்கிறது.
மல்லிக் குந்தம் செப்புப் பட்டயம்
காலம் கி.பி.1701 . அடி 52 - 55
"மஞ்சப்பாவாடை யுடையவர் தேவேந்திரப் பள்ளன் வெள்ளைகொடை வெள்ளை வெண்சாமரமுடையவர் விருது கோங்கி பூதக் கொடியுடையவர் இவர்களுக்கெல்லாம் தலைகட்கு க.னுலை ம் முக்குருணி அரிசியும், கொடுக்க வேண்டியது" என்கிறது.
இங்கனம் செப்புப் பட்டயங்களின் வாயிலாகவும் பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே என அறியலாம்.
(விரைவில் இங்கே பிரசுரிக்கப்படும்: பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் ஒன்ருவரே என்று ஓதும் பள்ளுப் பாடல்கள்)
No comments:
Post a Comment