மள்ளர் - பள்ளர் ஒன்றே!


மள்ளர் - பள்ளர் ஒன்றென ஓதும் பள்ளிசை    இன்று வாழ்கின்ற பள்ளர்களே இலக்கியங்கள் புகழ்கின்ற மள்ளர்கள் என்பதற்குப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும், மொழியியல் அறிஞர்களும், தங்களின் விளக்கங்களோடு கூடிய கருதுகோளை முன்வைத்த போதிலும் , பள்ளர்களே மள்ளர்கள் என்பதற்கு மறுக்கவென்னாச் சான்றுகளைப் பள்ளுப் பாடல்களே அதன் பாடலடிகளின்  ஊடாகப் பதிய வைத்துள்ளன. அது குறித்துச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.


  • செங்கோட்டுப் பள்ளு

           இயற்றியவர் பொன்னுச் செல்லையா, காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.

செய்யுள் 197 

        "பள்ளனும்பள் ளியருடனே  வந்து போற்றப்
                பண்ணையினார் கோல்காரன் தனையும் பார்த்து

        உள்ளமகிழ்த் திவூரில் பள்ளர் பள்ளி
                ஒருவரிலா மற்படியிங் கழையும் என்ன

        வள்ளல்மொழி கேட்டவன்போய் அளித்த பின்பு
                வழமை செறி மோரூரில் வாழ்ந்திருக்கும்

        மள்ளர்கள் பள்ளிய ருடனே கூடிவந்து
                மன்னவரைத் தொழஅவரும் மகிழ்ந்து சொல்வார்..
."

செய்யுள் 245 

        "வந்ததுமே திருக் கூட்டமதாகவும்
                மள்ளரும் பள்ளிமார்களும் கூடியே

        சிந்தை தானும் மகிழ்ந்து அவரவர்
                தெய்வங்கள் தமைப் போற்றியேகும்பிட்டு
"

செய்யுள் 354 

        "மள்ளனும் இளைய பள்ளி
                மனையினில் வந்தி ருந்து

        கள்ளிமோ கத்தால் காமக்
                கடலினில் அழுந்திக் கொண்டான்

        பள்ளன்செய் கொடுமை மூத்த
                பள்ளியும் மனம்பொ றாமல்

        வெள்ளியங் கிரியார் பண்ணை
                வேந்தர்முன் வந்து சொல்வாள்
"

செய்யுள் 819 

        "மங்கையர் மீதினில் மாங்க னி - பறித்
                தங்கிட
மள்ளர்வி  ளாங்க னி

        மந்தியின் மீதிலே எறிந்து மே - மகிழ்
                விந்தையைப் பாரடி
பள்ளிய ரே"

மேற்கண்ட செங்கோட்டுப் பள்ளுவின் செய்யுட்கள் பள்ளரே மள்ளர் என்பதை உறுதி செய்கின்றன.

  • திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு

          இயற்றியவர் சுப்பிரமணிய நாவலர், காலம் கி.பி.1882 

பகுதி 118 

        "பள்ளத் தடாக நல்லூர்ப் பள்ளி சொன்ன சொற்படியே
                மள்ளத் தலைவனைக் கால்மரம் வெட்டி விட்டபின்பு

        உள்ளத்து அறிவான் உடல்செலவு எல்லாம் போக்கி
                எள்ளத்தனை குறையாது இருப்பு வகை சொன்னானே
"

    பள்ளரே மள்ளர் என்கிறது மேற்கண்ட பள்ளு அடிகள்.

  • எட்டையபுரப் பள்ளு

          இயற்றியவர் முத்துப் புலவர்

செய்யுள் 146 

        "அகத்திலுகந்து கொண்டு நு கத்தை மகிழ்ந்து கையிலெடுத்தான்
                பண்ணையாண்டவர் சொல்படி பூண்டு
பள்ளரிடங் கொடுத்தான்

        மகத்துவ மீறிய வையகத்து மானதவாழ்த்தித் தொழுதார்
                மள்ளர் வலிலேரைப் பூட்டி நயமாகக் கூட்டியுழுதார்"

செய்யுள் 153 

        "வேலைவிட்டொன் னார்தளத்தை வென்றருள்கு மாறயெட்ட
                மாலையிட்ட தார்பரவு
மள்ளருக்குப் பள்ளியர்கட்

        செளைவிட்டுப் பின்வேறு சிந்தையுண்டோ செய்கால்வாய்க்
                காலைவிட்டாப் பாலே கடக்கக்கா லேறாதே
"

  • சாமிநாதப் பள்ளு

         இயற்றியவர் சிவப்பெருமாள் கவி

செய்யுள் 7

        "மஞ்சினஞ் சூழ்ந்திலகு வீராச்சி
                மங்கை நகர்க்கிசைந்திடும் பண்ணை

        மள்ளனுக்கே மனமகிழ் மூத்த
                பள்ளி வந்தனளே"

பள்ளரே மள்ளர் என்பதற்கு சாமிநாதப் பள்ளு ககரும் சான்று இது.

  • தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு

      பக்கம் 19 வரி 9 ,10
        "வருமனய மள்ளரெலா மூத்தபள்ளிக் காவேசம் வறுத்து வாய்மெய்
                பெருமையென வேளாரை வருகவென வந்தவகை பேசலாமே"

  • முக்கூடற் பள்ளு

         இயற்றியவர் பெயர் தெரியவில்லை, காலம் 1670

செய்யுள் 10

        "ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
                பாதியடி மைப்படுமோ
பள்ளிமரு தூரிளையாள்

        சோதிமுக மள்ளருக்கே தோன்ற வயலுற்ற நட்ட
                போதிலொரு பூவில் ஐந்து பூவும் பயிராமே
"

    தன ஒளி பொருந்திய முகம் மள்ளர் வடிவழகக் குடும்பனாருக்கு மட்டுமே தோன்றும் படியாக மருதூர் இளைய பள்ளி வயலில் நாற்று நட்டால் பயிர் செழித்து வளர்ந்து விளைச்சல் ஐந்து மடங்காய் பெருகி விளையும் என்னும் பொருள்பட அமைந்த மேற்கண்ட முக்கூடற் பள்ளு  அடிகள் பள்ளரே மள்ளர் என்பதையும் அறிவிக்கின்றன.

No comments:

Post a Comment