ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சந்த நயம் பொருந்திய பாடல்கள் பள்ளு பாடல்கள். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சுதந்திரம் அடைந்துவிட்டதாக கருதி, பாரதியார் அவர்கள் பாடிய மிக பிரபலமான 'பள்ளர் களியாட்டம்' இதோ.

சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி
தாளம் - ஆதி

பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

சரணங்கள்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; 
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)
Source:  http://bharathipaadal.our24x7i.com/bharathiar_kavithaigal/243/49.jws


நேற்று (28 - 07 -2013) காலை விஜய் தொலைக் காட்சியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நடுவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை கண்ணன் -- பிள்ளைமார்
எஸ்.ராமகிருஷ்ணன் -- கள்ளர்
மோகன்ராம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நெல்லை கண்ணன் கேட்டார்.

நெல்லை கண்ணன்: "ஏம்மா....இந்த பாடல் யார் பாடுவதாக அமைந்து இருக்கிறது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "டி.கே.பட்டம்மாள்"
நெல்லை கண்ணன்:"அதை கேட்கவில்லை. இந்த பாடல் எந்த மக்கள் பாடுவதாக அமைந்துள்ளது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "தெரியாது...."
நெல்லை கண்ணன்: "இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் பாடுவதாக இந்த பாடல் அமைந்து உள்ளது."

குறிப்பு: நெல்லை கண்ணன் அவர்களின் மகன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துடன்' நெருங்கிய தொடர்பில் உள்ளார். வாய்ப்பு கிடைத்தால், இதே நெல்லை கண்ணன் அவர்கள் வரும் காலத்தில், 'பள்ளர் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்றும், அவர்களே இந்த மண்ணின் மூத்த குடிகளும், மூவேந்தரின் வாரிசுகளும் ஆவர்' என்றும் சொல்ல வாய்ப்பு உண்டு. அந்த பயணத்தை நோக்கி இனிதே 'தா.வ.ஆ.ந'....!!!3 comments:

  1. Appo Pillamar Intha Mannin mainthargal ah illaiya ...???????????
    Nangal Vantherigalaaaaaa....?????????

    ReplyDelete
  2. பள்ளு இலக்கியத்தை பள்ளரா பாடுவார்கள்? அது வடுகரால் இயற்றப்பட்ட பள்ளேசல் தானே? இல்லை பள்ளு-பள்ளேசல் வேறு வேறா?

    ReplyDelete