பதினென் குடிமக்களில் ஒருவரான கொல்லர்


விழா சுருக்கம்
தெலுங்கு நாயக்கர்களை வீழ்த்திய பாண்டியர்களின் வரலாற்று எச்சமே இந்த நிகழ்வு. நாயக்கர்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட ராசூக்கள், இன்று வரை பாண்டியரை வீழ்த்தும் நோக்கில், அவருடைய 'வெண்குடையை' பறிக்கும் எண்ணம் நிறைவேறவே இல்லை. நிறைவேறப் போவதும் இல்லை.


பதினெண் குடிமக்கள் 
வண்ணான், 
மயிர்வினைஞன், 
செம்மான், 
குயவன், 
கொத்தன், 
கொல்லன்
கன்னான், 
தட்டான், 
தச்சன், 
கற்றச்சன், 
செக்கான்,
கைக்கோளன், 
பூக்காரன், 
கிணையன், 
பாணன், 
கூத்தன், 
வள்ளுவன், 
மருத்துவன்
ஆசாரி என்றும் பின்னாளில் சமஸ்கிருத மொழியாக்கத்தின் தாக்கத்தினால் தம்மை விஸ்வகர்மா என்றும் அழைத்து கொள்ளும், பதினென் குடிமக்களும், பள்ளருள் ஒருவகையினருமான கொல்லர்/ஆசாரி அவர்களுக்கும், பள்ளருக்கும் இடையே தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரியத்தை விளக்கும் நிகழ்வே இராஜபாளையத்தில் இன்றும் நடக்கும் 'சித்திரை வெண்கொடை' திருவிழா நிகழ்வு.

சமீபத்தில் நடந்த சித்திரை வெண்கொடை திருவிழாவின் போது, அந்த பகுதியில் வசிக்கும் திரு.முருகன் ஆசாரி அவர்கள், பள்ளருக்கும்(பாண்டியருக்கும்), தங்களுக்கும் தலைமுறை தலைமுறையாய் தொடரும் வரலாற்று உறவை விளக்குகிறார்.
ராஜபாளையத்தில் பல்வேறு சாதி,சமுதாய மக்கள் இருந்த போதிலும், பள்ளர் என்று சொல்லக்கூடிய தேவேந்திர குல வெள்ளாளர் சமூகம் தான் மிக அதிக அளவில் இருந்து இருக்கிறார்கள். அன்று முதல் இன்று வரை, அவர்கள் தான் இங்கே விவசாயம் முதல் போர் செய்தல் வரை புரிந்து, பெருவாரியாக வாழ்ந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் எம் மூதாதையர்கள், எங்களுக்கு செவி வழியாக கூறி வந்த தகவல்கள். அதை உங்களுக்கு சொல்கிறேன்.

    தேவேந்திர குல வேளாளர்களுக்கு, ஏர் கருவிகளும், போர் கருவிகளும் விலையில்லா பொருட்களாக காலம் காலம் தொட்டு கொடுத்து, அவர்கள் எங்களை காக்கும் கடனுக்கு, நன்றிக்கடனாக ஒவ்வொரு வருடமும், இந்த வெண்குடை திருவிழாவின் போது, அவர்கள் நீர் காத்த அய்யனார் கோவிலில் இருந்து கிளம்பும் போதும், ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் வருவார்கள். அந்த அய்யனார் கோவிலின் அருகில் 'நால்வர் குளம்' என்ற, எங்களுக்கு (ஆசாரிகளுக்கு) பாத்தியப்பட்ட இடம் உண்டு. அந்த இடத்தில் அவர்களுக்கு நீர் மோர்,பானாகம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை செய்து  கொடுப்போம். நாங்கள் மரியாதை செய்த பின்பு தான் அவர்கள் அய்யனார் கோவிலுக்கே செல்வார்கள்.

    மீண்டும் இதே போன்று காமாட்சி அம்மாள் கோவில் என்று பழைய பாளையத்தில் விஸ்வகர்மா மக்கள் வசிக்கிறார்கள். அங்கேயும் இந்த தேவேந்திர குல வேளாளர்கள் வெண்குடையுடன் செல்வார்கள். அங்கேயும் அவர்களுக்கு விஸ்வகர்மா மக்களால், மரியாதை செய்யப்படும்.

   அவ்வாறு சென்ற பள்ளர்கள், மீண்டும் இந்த பகுதிக்கு திரும்பி அதே சாமி,ஆள்,அரவம்,ஆழி,பொய்க்கால் குதிரை என திரும்பவும் வருவார்கள். அவர்கள் வருகைக்காக நாங்களும் காத்திருப்போம். சுமார் 10 -12 மணி வாக்கில் இங்கே வந்து சேருவார்கள். 



   அப்படி அவர்கள் வருகை புரிந்ததும், சுமார் 350 வருடத்துக்கு மேலாக வெண்குடை பிடித்து வெற்றிக் களிப்புடன் ஆடும் அந்த குடை பிடித்து ஆடும் பாண்டியருக்கும், 350 வருடத்துக்கும் மேலாக வசிக்கும் எங்களை போன்ற மக்களுக்கும் அவரின் போர் வெற்றியை பறைசாற்றும் அர்த்தத்தில் வெண்குடை ஆட்டம் நடை பெரும். அது முடிந்தவுடன், ஊர் நாட்டாமைகள் அனைவரும் சேர்ந்து, அவர்களை கவுரவித்து, பொன்னாடை,புது உடுப்புகள்,பண முடிப்பு என அனைத்தும் கொடுத்து கவுரவிப்போம்."

 
* இந்த வெண்கொடை திருவிழாவில் பள்ளர் சமூக மக்களை தவிர வேறு யாரும் கலந்து கொள்வது இல்லை.
* இதில் பெண்களோ,குழந்தைகளோ கலந்து கொள்வதும் இல்லை.
* படை பரிவாரங்கள் என்று சொல்லப்படும் யானை,குதிரை என அனைத்தும் இந்த விழாவில் பங்கேற்கும்.
---------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை

கல்வெட்டு எஸ்.இராமச்சந்திரன்

(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கொற்கை அகழ்வைப்பகக் காப்பாட்சியராக பணிபுரிந்தவர்)

இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… – என்ற என்னுடைய கட்டுரை குறித்துக் கற்பக விநாயகம் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளாரம் பறம்பில் காணப்படும் பாறைகள் சீனியைப் போன்று பளபளப்பதால் அப் பெயர் பெற்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனிக்கல் என்ற வழக்கு குறித்த சொல்லாராய்ச்சியை முதன்மையாக வைத்து நான் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை1. சீனிக்கல் (Quartzite) என்பது வெப்பத் தன்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், சூட்டினை அதிகரிக்கவும் முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட கல்லாகும். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் வல்லநாடு மலைத்தொடர்க் காட்டுப் பகுதியை ஒட்டி ஆழ்வார் கற்குளம் என்ற ஊர் அமைந்துள்ளது. இக் காட்டுப் பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கிய கழிவு (Iron Slag) காணப்படுகிறது. இப் பகுதியில் இரும்பு உருக்குவதற்கு இப் பறம்புகளில் காணப்படும் சீனிக்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரும்பை உருக்கி வார்க்கும்போது அடியில் பரப்பி வைக்கப்படும் மணலில் இச் சீனிக்கற்களையும் பொடித்துப் பரப்புவர். இதனைத் தற்கால உலோகவியல் நிபுணர்கள் Moulding Sand என்று குறிப்பிடுகின்றனர். சீனிக்கற்கள் மிகுந்த சூட்டிலும் கரைந்து விடாமல் தாக்குப் பிடிப்பதால் இவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன. ஆழ்வார் கற்குளம் என்ற ஊரின் பழம்பெயர் ஆழ்வார் கற்களம் என்பதாகும். கற்களம் என்பது கல்வெட்டு வழக்கில் கற்கள் வெட்டியெடுக்கப்பட்ட இடமாகும் (பக்கம் 163, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, முதல் தொகுதி, பதிப்பு: சாந்தி சாதனா, சென்னை – 28, 2002). ஆழ்வார் திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோயில் கோபுரத்தின் வட சுவரில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டில் இவ்வூர் “மேல் பிடாகைக் கற்களம்” என்று குறிப்பிடப்படுகிறது. இத்தகைய கற்களங்களில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைக் கற்களில் Quartzite, Pigmatite போன்ற கற்களும் செப்புக் கனிமம் உள்ள Malachite வகைக் கற்களும் அடங்கும்.

ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம். முக்கூடற்பள்ளு என்ற 17ஆம் நூற்றாண்டு இலக்கியம் “சேர குலப் பத்தனார் தம் மாளிகைப் பூங்காட்டு வளமெல்லாம் களமர் உரை செய்வாரே” என்று குறிப்பிடுகிறது. சேர அரச குலத்தவர்க்கு நகை செய்து கொடுத்து வந்த பத்தர் (விஸ்வகர்மா இனத்தவர்)க்குரிய பூந்தோட்டத்துடன் (நந்தவனத்துடன்) கூடிய மாளிகை ஒன்று ஆழ்வார் திருநகரியில் இருந்ததாக இதற்கு உரை கூறப்படுவதுண்டு. ஆழ்வார் திருநகரி விஸ்வகர்ம சமூகத்தவரின் தலைநகராக இருந்து வந்ததாகவும், 20ஆம் நூற்றாண்டில் அவர்கள் பெருமளவில் ஏரலில் குடியேறிவிட்டதாகவும் கூறப்பட்டு வருகின்றன. இரும்பு உருக்குகின்ற தொழில் இப்போதும் கூடச் சிறிய அளவில் ஏரல் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒழுக்கு அறல் அல்லது ஒழுக்கறை எனப்படும், ஆற்றுப்படுகையில் காணப்படும் கருநிற மணலை எடுத்து உருக்கி இரும்புத் தூள் தயார் செய்து பற்ற வைப்பதற்கு அதனைப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மண் வெட்டிக் குழைச்சியைத் தகட்டில் பொருத்திப் பற்ற வைப்பதற்கு இத் தூளைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு இரும்பு உருக்குகின்ற தொழில்நுட்பத்திற்கு மிகுந்த வெப்பம் தேவைப்படும். எனவே, வெப்பத்தை அதிகரிப்பதற்கும், சூடு நீடித்து நிற்கச் செய்வதற்கும் சீனிக்கற்களைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. உலை சூட்டினால் வெடித்து விடாமல் பாதுகாப்பதற்கு வசதியாகக் கொல்லர் உலைகளின் உட்பகுதியிலும் சீனிக்கல் தூள் பொடித்துப் பூசப்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், வெடிகுண்டு பயன்படுத்தப்படுகின்ற பீரங்கி போன்ற ஆயுதங்களின் குழல் பகுதிகள் சூட்டினையும் அதிர்வினையும் தாங்கிக் கொள்வதற்கு வசதியாகச் சிப்பம் செய்யும் பொருளாகச் சீனிக்கல் தூள் பயன்பட்டிருக்கலாம். சீனிக்கல்லுக்குக் கடினத்தன்மை அதிகம் உண்டு. மோஹர் என்பவரால் நிர்ணயிக்கப்பட்ட கடினத்தன்மை அளவுக் குறியீட்டின்படி (Mohr’s Scale of Hardness) வைரம் 10; மரகதம் 9; மாணிக்கம் 8; சீனிக்கல் (Quartzite) 7 என்ற மதிப்பில் அளவிடப்பட்டுள்ளன.

திருவைகுண்டம் வட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் சற்றேறக்குறைய 140 ஏக்கர் பரப்பளவுடைய பறம்பு இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு அண்மையில் நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களையும் இப் பறம்பினையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளான திரு. எஸ். பத்ரிநாராயணன் (மேனாள் இயக்குநர், இந்திய மண்ணியல் பரப்பாய்வுத் துறை) மற்றும் திரு. சசிசேகரன் (விஞ்ஞானி, தேசிய ஆழ்கடல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், சென்னை) ஆகியோருடனான கலந்துரையாடலில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் என்னால் சில கருதுகோள்களை முன்வைக்க முடியும். இப் பகுதியில் பாஷாணத்துடன் (Arsenic) கலந்த நிலையில் பலவித உலோகப் படிவுகள் காணப்படுகின்றன. இவற்றை மூலக் கனிமத்திலிருந்து பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தனர். இத் தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள் அக்காலத் தச்சர், கொல்லர் சமூகத்தவராகவே இருக்க முடியும்2. தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லன்பறம்பு, தட்டார்பாறை போன்ற பெயர்களில் வழங்கப்படும் இடங்களிலெல்லாம் மூலக் கனிமத்திலிருந்து உலோகத் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணி முற்காலத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஓட்டப்பிடாரத்துக்கு அருகிலுள்ள இராஜாவின் கோவில் என்ற பெயர் கொண்ட சிற்றூரில் உள்ள பழங்காலச் சிவன் கோயிலில் காணப்படும் துண்டுக் கல்வெட்டுகளில் ‘திவட்டாப்பாறை’ என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. திவட்டா என்ற சொல் த்வஷ்டா என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபாகும். தட்டார் (பொற்கொல்லர்) என்பதுதான் இதன் பொருள். இது தற்போதைய தட்டார்பாறை ஊரையே குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. முற்காலத்தில் இவ்வூரில் உள்ள பாறைகளிலிருந்து பொன் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது திண்ணம்.

இந்த அடிப்படையில் பார்க்கும்போது வீரன் சுந்தரலிங்கனின் சொந்த ஊர்களான வெள்ளாரம், கவுனகிரி ஆகிய ஊர்களிலும் இத்தகைய பணிகள் பெருமளவில் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. மேற்குறித்த இரண்டு ஊர்ப் பெயர்களுமே இத்தகைய அரிய தாதுக்களை குறிப்பிடும் பெயர்களாக உள்ளன. ஆரம் என்ற சொல் அஞ்சன பாஷாணத்தையோ அஞ்சனக் கல்லையோ குறிக்கும். கவுனி என்ற சொல் குதிரைப்பல் பாஷாணம் எனப் பொருள்படும். குதிரைப்பல் பாஷாணம் என்பது Realgar Arsenic ஆகும். இப் பாஷாணத்துடன் ஈயம் கலந்து காணப்படுவதுண்டு எனத் தெரிகிறது. குதிரைப்பல் பாஷாணம் வாண வேடிக்கைகளின் போது பல வித வர்ண ஜாலங்களைத் தோற்றுவிக்கும் ஒரு ரசாயனம் ஆகும். அஞ்சனக் கல் என்பது Antimony Sulphide எனப்படும் Antimony-யும் கந்தகப் படிவும் கலந்து காணப்படும் கல்லாகும். Antimony என்பது இரு உலோகங்களை ஒன்றுடன் ஒன்று கலப்பதற்குப் பயன்படும் வினையூக்கி ஆகும். கல்லீயம், ஈயம், கந்தகம் ஆகியன வெடிகுண்டு தயாரிப்பின்போது, பல்வேறு கட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் தாதுக்களாகும். சீனி என்ற சொல்லுக்குப் பித்தளை மணல் என்று தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பிலிருந்து செம்புத் தாது முற்காலத்தில் உருக்கி எடுக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. பித்தளை என்பது செம்பும், துத்தநாகமும் சேர்ந்த கலவையாகும். எனவே, இப்பகுதியிலிருந்த சீனிக்கற்களுடன் கலந்திருந்த பல்வேறு வகைப் பாஷாணங்களையும் உலோகத் தாதுக்களையும் பிரித்தெடுக்கும் பணி இப்பகுதியைச் சேர்ந்த கொல்லர் சமூகத்தவரால் நீண்ட காலமாக செய்யப்பட்டு வந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. இன்றைய கண்ணோட்டத்தில் மூலக் கனிமத்திலிருந்து இத் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் பணிக்கு, இறுதியாகக் கிடைக்கின்ற பொருளை விடச் செலவு அதிகமாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுகின்ற செம்புரைக்கல் அல்லது செம்புராங்கல் என்று சொல்லப்படுகின்ற Laterite கற்களை Iron Aluminium Silicate என்று வேதியியல் அடிப்படையில் வகைப்படுத்தலாம். ஆனால், செம்புரைக் கற்களிலிலிருந்து இரும்பையும், அலுமினியத்தையும் பிரித்தெடுப்பது என்பது மிகுந்த செலவு பிடிக்கிற ஒரு தொழில்நுட்பமாகும். தாம் வாழ்கின்ற ஊர்களோடும், தம் ஊரின் முதன்மையான நிறுவனமாக விளங்கிய கோயில்களோடும் மானியதாரர்கள் என்ற அளவில் தம் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த விஸ்வகர்ம சமூகத்தவருக்கும், அவ்வக் காலத்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையே நிலவிய உற்பத்தி உறவுகளில் இத்தகைய உற்பத்திச் செலவுகள் பிரதானமான தடைக்கற்களாக இருந்ததில்லை. எனவே, நம்முடைய பாரம்பரியத் தொழில்நுட்ப அறிவின் மேம்பாடு குறித்து வரலாற்று அறிஞர்கள் கூட ஐயுறுவதற்கு இது ஒரு முதன்மையான காரணமாகும்.

நவீன ஆயுதங்களும் வெடிமருந்துகளும் டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள் போன்ற ஐரோப்பியர்கள் மூலமே நம்மிடையே புழக்கத்தில் வந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக இருந்தன என்று கற்பக விநாயகம் குறிப்பிட்டுள்ளார். வெடிமருந்து என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிமுகமாகி விட்டது. இது தொடக்கத்தில் சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம். இருப்பினும் சால்ட் பீட்டர் போன்ற சில வெடியுப்புகள் வெடித்தல் என்னும் செயலை நிகழ்த்தும் பொட்டாஷியம் நைட்ரேட் அடங்கிய தாதுப்புகள் இமயமலைப் பகுதியிலும், ஜம்மு பகுதியிலும் கிடைக்கின்றன எனத் தெரிகிறது. இத்தகைய இறக்குமதிப் பொருள்களை மட்டும் வெளியிலிருந்து வரவழைத்து உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே தமிழகத்திலும் வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதற்கான தொழில்நுட்ப அறிவு பரவலாக வெளிப்பட்டு விடாமல் சில குலக் குழுக்களிடம் மட்டும் பாரம்பரிய அறிவாகத் தேங்கி நின்றுவிட்டது. புறநானூறு 19ஆம் பாடலில் “இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் அடார்” என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. “பெரும்புலியைப் படுக்கும் (வீழ்த்தும்) வேட்டுவன் எந்திரமறிந்து கொளுத்திய பெரிய கல்லை உடைய இடியை ஒக்கும் அடார்” என்று பழைய உரை பொருள் கூறுகிறது (பக்கம் 50, புறநானூறு மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூலகப் பதிப்பு, சென்னை – 41, 1971). இன்றும் இந்த அடார் என்ற வெடிகுண்டு வட ஆர்க்காடு மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்கு வேட்டுவக் குடியினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, ஐரோப்பியர்கள் தொடர்பினால்தான் நம்மிடையே நவீன ஆயுதங்கள் புழங்கத் தொடங்கின என்று எண்ணுவது தவறாகும்.


.........கட்டுரையாளர் திருவாளர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களுக்கு நன்றி


















ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சந்த நயம் பொருந்திய பாடல்கள் பள்ளு பாடல்கள். இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பே, சுதந்திரம் அடைந்துவிட்டதாக கருதி, பாரதியார் அவர்கள் பாடிய மிக பிரபலமான 'பள்ளர் களியாட்டம்' இதோ.

சுதந்திரப் பள்ளு பள்ளர் களியாட்டம்
ராகம்-வராளி
தாளம் - ஆதி

பல்லவி
ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

சரணங்கள்

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; 
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே (ஆடுவோமே)
Source:  http://bharathipaadal.our24x7i.com/bharathiar_kavithaigal/243/49.jws


நேற்று (28 - 07 -2013) காலை விஜய் தொலைக் காட்சியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட நடுவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை கண்ணன் -- பிள்ளைமார்
எஸ்.ராமகிருஷ்ணன் -- கள்ளர்
மோகன்ராம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நெல்லை கண்ணன் கேட்டார்.

நெல்லை கண்ணன்: "ஏம்மா....இந்த பாடல் யார் பாடுவதாக அமைந்து இருக்கிறது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "டி.கே.பட்டம்மாள்"
நெல்லை கண்ணன்:"அதை கேட்கவில்லை. இந்த பாடல் எந்த மக்கள் பாடுவதாக அமைந்துள்ளது தெரியுமா...?"
பங்கேற்ற பெண்: "தெரியாது...."
நெல்லை கண்ணன்: "இன்று தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் பாடுவதாக இந்த பாடல் அமைந்து உள்ளது."

குறிப்பு: நெல்லை கண்ணன் அவர்களின் மகன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்துடன்' நெருங்கிய தொடர்பில் உள்ளார். வாய்ப்பு கிடைத்தால், இதே நெல்லை கண்ணன் அவர்கள் வரும் காலத்தில், 'பள்ளர் தாழ்த்தப்பட்டோர் அல்ல என்றும், அவர்களே இந்த மண்ணின் மூத்த குடிகளும், மூவேந்தரின் வாரிசுகளும் ஆவர்' என்றும் சொல்ல வாய்ப்பு உண்டு. அந்த பயணத்தை நோக்கி இனிதே 'தா.வ.ஆ.ந'....!!!