கோவையின் வரலாற்று பின்னணி

கோவன் என்ற மன்னன் (இருளர்) ஆண்ட பகுதி கோவன்புதூர் (கோயமுத்தூர்) என்ற மரபு வழி வரலாற்று செய்தி.




கோவன் புதூர் > கோவன் புத்தூர் > கோயன் புத்தூர் > கோயம்புத்தூர் (அ) கோயமுத்தூர்

    சங்ககால இலக்கியங்களிலோ,அல்லது வரலாற்று ஆதரங்களிலோ இருளர் (உதாரணமாக விழுப்புரம் பகுதி வாழும் இருளர்கள் போல) பற்றிய செய்தி இடம் பெறவில்லை. இருப்பினும் கோவன் என்பவன் சோழனுக்கு நெருக்கமாகவும், பேரூர் கோவிலை நிர்மாணிக்கும் போது ,அந்த பகுதி வேளாளர்களுடன் கூடிப் பாடப்பட்டுள்ளமைக்கு கற் சாசனன்களே சான்று.


கோவன் என்ற ஒரு தலைவன் இவ்வகை யாக இறுதியாக தாம் வாழ்ந்த கோவனூரையும் விட்டு கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் வெளியேறி தெற்கே ஆற்றுப் பாங்கான நொய்யலாற்று மருதக் கழனி வெளியில் புதிய ஊரை அமைத்து வாழத் தொடங்கிய போது அழைக்கப்பட்ட ஊர்தான் கோவன் புத்தூர் ஆகிய இன்றைய கோவை ஆகும்.
முதலாம் கோவனுக்கு பின்பு அடுத்த ஏழெட்டுத்தலைமுறை காலமும் கோவன் என்ற சொல் விருதுப் (பொதுப்) பெயராகி நிலைத்து விட்டதை நாம் அறிதல் வேண்டும்.
கொங்குச் சோழர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரூர்த் திருத்தலப் பணிகளில் ஈடுபட்ட போது இவ்வூர்த்தலைமை வேளாளரும் மன்னருடன் கூடிப்பாடுப்பட்டுள்தையே கற்சாசனங்கள் பேசும். இந்த முகமையாளர்கள் தான் கோப்பண்ண மன்றாடியார் என்று பேசப் படும் இன்றைய புரவிபாளையம் பெருநிலக் கிழார் குடும்பம் ஆகும். இவர்கள் சென்ற தலை முறை வரை இக்கோயிலின் முதன்மை அறங் காவலர்களாக இருந்து வந்துள்ளனர்.
எனவே கோவன் என்ற பெயர் ஒரு தொல்குடிப் பெயர் -அக்குடியினர் தலைமகன் ஒருவன் நிர்மாணித்த புத்தூரே ஆதிகாலக் கோவை நகரம் என்றும் புரிந்து மகிழ்வோமாக.

 (Referrence: http://thannambikkai.org/2010/08/01/4220/).

    கோவன் என்பவன் வேளாளருக்கு நெருக்கமானவன் என்பதும், அவர் நிர்மாணித்த பேரூர் கோவிலில் மரியாதை செய்யப்பட்டு இன்றும் வாழ்ந்து வரும் வேளாளர்கள் 'தேவேந்திர குல வேளாளர்கள்' (பண்ணாடி/மன்னாடி) என்பதும், பேரூர் சிவபெருமானையும் இந்த வேளாளரின் பெயரிலேயே பள்ளர் என தல புராணம் அழைப்பதும், இந்த பள்ளர் குல மக்களிடமே பேரூர் கோவில் மிராசு உரிமை இன்றும் உள்ளது என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.


    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை  'மலையாளி' என்று திரு.தெலுங்கர் கருணாந்தி போன்றோர் தூற்றிகொண்டு  இருப்பது உண்மை அல்ல. கேரளத்தில் பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்த ஊரின் பெயர் பள்ளசேனா என்பதும், அவரது சாதி மண்ணாடி என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த மன்னாடிகளும்,பண்ணாடிகளும் இன்றும் கொங்கு மண்டலத்தில் நிலக்கிழார்களாக வாழ்ந்து வருகின்றனர்.

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் மண்ணாடி


'வாராங்கோ வாராங்க பண்ணாடி வாராங்கோ
பச்சை குடை பிடிச்சி பயிர் பார்க்க வாரோங்கோ,
நீல குடை பிடிச்சு நிலம் பார்க்க வாரோங்கோ'

என்ற பள்ளரின் கிராமத்து பாடலை நீங்கள் திரைப்பட பாடலாகவும் கேட்டிருக்கலாம்.


மன்றாடி என்ற சொல்லுக்கு 'சிவன் என்றும், பள்ளரின் கிளை குடி என்றும்'  பொருள் கண்டுள்ளது தமிழ் அகராதிகள்.
=========
 4. cf. மன்னாடி. Title of certain castesof Pallas, Mūttāns;
(Referrence: மன்றாடி).
=========

    பள்ளர்,மன்றாடி,பண்ணாடி என்று பள்ளரும் அவரின் கிளைக்குடிகளும் இன்றும் கோவையில் வேளாண் குடிகளாக தொன்று தொட்டு வாழ்ந்து வந்தாலும், அவரின் இன்னொரு கிளைக்குடியான இருளப்பள்ளரை  பற்றியும், அவர்கள் யார் என்றும், கோயமுத்தூரை நிர்மாணித்த அந்த இனம் இப்போது எங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறது,எவ்வகையில் அவர்கள் மற்ற கொங்கு பள்ளர்களிடம் இருந்து தனிமை படுத்தப்பட்டனர் என்றும், ஏன் என்றும், மேலும் அவர்களை பற்றி பல தகவல்களைப் பற்றியும் இனி காண்போம்.

    காடு திருத்தி நாடாக்கிய பெருமை கோவனையே சாரும். கோவையில் மிகப் பழமை வாய்ந்த கோவில்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், கோட்டீஸ்வரர் கோயில்(சங்கமேஸ்வரர் கோயில்), வெள்ளிங்கிரி ஆண்டவர் மலைக்கோயில், திருமூர்த்தி மலைக் கோயில், அவினாசி லிங்கேசுவரர் ஆகிய கோயில்கள் கோவையின் பழமையானவை ஆகும்.


யார் இந்த இருளப்பள்ளர்?
சோழர் படை தளபதிகளும், உப தளபதிகளும் மண்ணில் மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்த சமயம் தங்களை காத்து கொள்ள மலைகளில் தஞ்சம் புகுந்தனர்.அந்த போர் குடி மக்களே இருளப்பள்ளர்.

தன் தலைவர் மூப்பர் நினைவாக இருளப்பள்ளர் வாழும் அட்டப்பாடி கிராமத்தில் இருக்கும் மல்லீஸ்வரர் ஆலயம்.



கோவை அமராவதி ஆறு

கோவை நொய்யல் ஆறு

காண்க: பள்ளர்பாளையம் அணைக்கட்டு, பள்ளர்பாளையம் நீர்தேக்கம்

    நொய்யல் ஆற்றின் ஊற்றுக்கண்ணாக "பட்டியாறு" என்ற பெயரிலும் ஏழாவது மலையில் லிங்கவடிவிலும் இறைவன் வணங்கப்படுகிறார். அமராவதி (அமரர் அதிபதி) என்ற பெயரிலேயே உடுமலைப்பகுதியில் உருவாகிற ஆறு திருமூர்த்தி என்ற கடவுளின் பெயரில் கோவை மாவட்ட மக்களிடமே உள்ளது. இவ்விரண்டு ஆறுகளும் மேற்குமலைத் தொடரில் உருவாகி பவானி கூடுதுறையில் காவிரியோடு கலக்கிறது. இம்மேற்கு மலைத் தொடரில் இன்றும் வாழும் இனம் தான் இருளப்பள்ளர் இனம்.

    நொய்யல்நதி நாகரிகத்துக்கும் அமராவதி (அமரர் அதிபதியாகிய தேவேந்திரர்) நதி நாகரீகத்திற்கும் இருள பள்ளருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இம்மக்களிடம் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வழக்காறுகள் இவர்கள் நாடாண்ட மரபினர் என்பதும், தங்களுடைய பாரம்பரிய வரலாற்று நினைவலைகள் மாறாது வாழ்ந்து வருகின்றனர் என்பதும் இன்றும் காணும் உண்மைகள்.இம்மக்களின் உடல் அமைப்பு,நிறம்,குடும்ப வழிபாட்டு முறை,அச்சமின்மை,பிறரை எளிதில் நம்பாமை,அயலாரிடம் வேற்றுமை பாராட்டுதல் போன்றவை இருளபள்ளரிடம் இன்றும் உள்ளது. கிணற்று நீர்,தேங்கிக்கி கிடக்கும் குட்டை நீர்,குளத்து நீர் ஆகியவற்றை குடிப்பது தவிரித்து, ஓடுகின்ற ஓடை அல்லது ஓடுகின்ற ஆற்று நீர்,அல்லது நீர்வீழ்ச்சி நீரை பயன்படுத்தும் வழக்காறு குறிப்பிடத் தக்கவையாகும்.

போர் காலங்களில் தான் வெற்றி பெற நினைக்கும் நிலப்பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நோக்கோடு நீர்த்தேக்கங்களில் நஞ்சை கலந்து விடுவது வழக்கம். எனவே முந்தைய காலத்தில் போர்க்காலம் வந்து விட்டாலும் எதிரிகள் ஆக்கிரமிப்பு என்பதை அறிந்துவிட்டாலும், எதிரிப்படைகள் தங்கள் நாட்டுக்குள் புகுந்துவிட்டனர் என்றாலும் தங்களது நாட்டு நீர் தேக்கங்களிலேயும் நஞ்சைக் கலந்து எதிரிகள் தங்கி இருந்து போர் செய்யும் திறனையும், அதற்க்கேற்ற வசதிகளையும் அழிக்கும் வழக்கம் இருந்தது. இந்த வரலாற்று பின்னணியில் உருவானது தான் ஓடுகின்ற ஓடைநீர் ஆற்று நீர், வீழ்ச்சி நீர் மட்டும் பயன்படுத்தும் வழக்காறு இருளப்பள்ளர்களிடம் இருக்கின்றது.

கோயமுத்தூர் - கோவன் என்ற பள்ளர் தீர்மானித்ததால் கோவன்புதூர் என்றாகியது. கோனியம்மன் கோவிலில் பள்ளர்கலாகிய தேவேந்திர குல வேளாளருக்கு தேர்மிராசும், கம்பம் நடும் மிராசும் இன்றும் உள்ளது


கோவை கோனியம்மன் திருக்கோவில்





கோவையின் காவல் தெய்வமாக கருத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா,கோவை நகரின் தலை சிறந்த திருவிழாவாகும்.கோவன் புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் கோனியம்மன் என்பது வரலாறு.
(Referrence: http://jaghamani.blogspot.com/2012/02/blog-post_25.html)

மிராசு என்பது பங்குதாரர்,உரிமையாளர் என்று அர்த்தம். பேரூர் பட்டீஸ்வரத்தில் ஆணி உற்ச்சவம் அல்லது நாற்று நடவு உருசவம் அல்லது இந்திரா விழா என்ற பெயரில் நடைபெறும் 10 நாட்கள் பண்டிகை தேவேந்திர குல வேளாளருக்கு மட்டுமே உரித்தானது. 2000 ஆண்டுகளுக்கு முன் சோழப் பேரரசால் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ்வரத்தில் தேர்மிராசு பள்ளர்களுக்கே உரித்தானது. இக்கோயில் வரலாற்றில் குறிப்பிட்டுள்ள தமிழர் என்ற பெருமை பள்ளர்களுக்கே உரித்தானது.

    மண்ணின் மைந்தர்கள் பேரூர் நாட்டை ஆண்ட சோழ மள்ளர்களாகவும்,  தளபதிகளாகவும், உபதளபதிகலாகவும் படைப் பொறுப்பேற்று சோழப் பேரரசின் ஆட்சி பகுதியாகவும், பாண்டிய மள்ளர்களின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு எமது முன்னோர்கள் ஆண்ட கொங்கு மண்டலம் குறுநிலங்களாக அடிமை நிலப்பகுதிகலாகவே இருந்துள்ளன. பல்லவ பேரரசு, சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு என்ற வரிசையில் உருவான நிலப்பரப்பாக கொங்கு மண்டலம் இல்லை.

    தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர்களின் நம்பிக்கைக்கு ஆளான சோழர்படை மள்ளர் தளபதிகளே கொங்கு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நிர்வாகித்து உள்ளனர். சோழர் ஊழியம் புரிந்ததும், வீரசோழியம் படைத்தும் தஞ்சை சோழர் மள்ளர் படைகளாகும். 'கொங்கு சோழ வம்சம்' என்ற இடைசெருகல் எல்லாம் வரலாற்றின் புனைந்துரைகளாகும்.

    14 ஆம் நூற்றாண்டாகிய இக்காலத்தில் தான் பாண்டிய மள்ளர்களும், கடைய மள்ளர்களும் கொங்கு மண்டலத்தில் குடியேறி உள்ளனர். மதுரையில் மள்ளர்களின் ஆட்சி வீழ்ச்சியைத் தொடர்ந்து தெலுங்கு விஜயநகர கூட்டணி சமுதாயங்களின் தாக்குதல்களினால் தங்களின் நிலபுலன்களை கைவிட்டு கோவை பகுதியில் பாண்டிய,கடைய மள்ளர்கள் குடியமர்வுகள் நிகழ்ந்துள்ளன. மாலிக்காபூருக்கும், தெலுங்கு விஜய நகர் ஆட்சிக்கும் தென்தமிழகத்து கள்ளர்,மறவர்,அகமுடைய சாதிகளில் அகமுடைய சாதியனர் மள்ளர் ளை வீழ்த்தவே கோவையில் கொங்கு மண்டலத்தில் குடியமர்த்தப்பட்டனர் (இந்த குடியேற்றங்களை பற்றி விரிவாக வேறு கட்டுரையில் காண்போம்). இவ்வாறு தெலுங்கு விஜயநகர கூட்டணி சாதியாகிய அகமுடையார்கள் கோவை மொண்டி பாளையத்தில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கடைசி சனிக்கிழமை சென்று வழிபடுகின்றனர். 1970 களில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் வழிபாடு துவங்கி உள்ளனர்.

    மாலிக்காபூரின் படையெடுப்பினால் மதுரையில், இரண்டாம் பாண்டிய மள்ளர் பேரரசின் வீழ்ச்சியால் கோவை அல்லது பேரூர் நாட்டு மள்ளர் ஆட்சியையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. பாண்டியர்களின் இரண்டாம் பேரரசு கோவை வரையிலும் இருந்துள்ளது குறிப்பிட தக்கதாகும். 100 ஆண்டு காலங்கள் தமிழகம் சுல்தான்கள் ஆட்சியில் இருந்துள்ளது. முகமதிய படைகளை எதிர்த்து போராடிய மள்ளர் தளபதிகள், உபதளபதிகளில் குடும்பங்கள், காடுகளில் பதுங்கி வாழ நேர்ந்தது. அடர்ந்த இருள் சூழ்ந்த காடுகளுக்குள் பதுங்கி வாழ நேர்ந்த போது இருளர் என்ற பெயர் வந்திருக்கலாம். பின்னர் தெலுங்கு விஜயநகர பேரரசின் படைகளையும் எதிர்த்து மள்ளர் படை போராடி மீண்டும் வீழ்ந்த போது மேலும் அடர்ந்த காடுகள் படர்ந்திருந்த மலைப்பகுதிகளை நோக்கி மேலும் நகர நேர்ந்தது.

    தளபதிகள் மீண்டும் தனது மள்ளர் சமூகத்தவரை அணுக முடியாத அளவுக்கு தெலுங்கர்களும் அவர்களுக்கு விசுவாசிகளான கன்னடத்து ஹோயசாலர்களும்(சாளுக்கியர்கள்)  விஜய நகர படைகளுக்கு துணை போன தமிழின எதிர்ப்பு சமூகங்களும் மேற்கு மலைத் தொடர் கிராமங்களில் தங்களின் குடியேற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

   மேற்கு மலைத்தொடரில் இருந்து ஆரம்பித்து கிழக்கு நோக்கி மள்ளர்களின் குடியிருப்பு பகுதிகள் வரையிலான இடைப்பட்ட நிலப்பரப்புகளில் தெலுங்கு,கன்னட குடியிருப்புகள் கிராமங்களாக,ஊர்களாக அமைந்துள்ளன. இவர்களது அருகாமையிலும், கலந்தும், அண்டை ஊர்களாகவும் தமிழர்களில் சில சமூகங்களை இன்றும் காணலாம். தெலுங்கு விஜயநகரம் ஆரியத்தை ஏற்றுக் கொண்டதால், ஜாதி இந்துக்கள் என்ற கலப்பு சமூகத்தை உருவாக்கினர். இவர்களின் பாதுகாப்பு வளையத்தை மீறி தனது மள்ளர் மக்களுடன்(பண்ணாடி,மண்ணாடி) இருள பள்ளர்களுக்கு(போர் மள்ளர்கள்) எந்த தொடர்பும் வைக்க இயலாத நிலை ஏற்ப்பட்டது.

    மறைந்து வாழ்ந்த மள்ளர் தளபதிகளின் குடும்பத்திற்கு சுமார் 300 ஆண்டுகளில் தங்களின் வரலாற்று பின்னணியை மறந்ததோடு, தமிழர் என்று அடையாளம் தெரிந்தால் எதிரிகளால் வேட்டையாடப்படுவோம் என்ற நிலையில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் (மேற்கு மலைத்தொடரின் பின்புறம் மலையாள நாடு இருப்பதால்), தமிழ் மொழிகளின் கூட்டாக இருளர் மொழி படைத்து முற்றிலுமாக தங்களை இருளர்கலாக, மலைவாழ் மக்களாக மாற்றிக் கொண்ட வாழ்க்கை வாழ நேர்ந்துள்ளது. வறுமையும், வளமற்ற வாழ்வும், கல்வி அறிவு இன்மையும் ஒரு இனத்தை எந்த அளவுக்கு முடமாக்கும் என்பதை இருளர் வாழ்க்கை வரலாறு நமக்கு காட்டுகிறது.

    தங்களின் சைவ சமயத்தை மறக்க இயலாத இந்த இருளப்பள்ளர் மக்களால் ஆறுமலைகளைக் கடந்து ஏழாவது மலையில் லிங்க வடிவில் சிவனை வழிபாடும் கோவில் உருவாக்கப்பட்டது. இதுவே வெள்ளிங்கிரி ஆண்டவர் மலைக்கோயில் வழிபாட்டு தலமாகியது.

வெள்ளிங்கிரி மலை 

மருத மலை


    மேற்கு மலைத் தொடரில் உள்ள மற்றொரு மருத நில மக்களின் தலைவன் மருதமலை ஆண்டவராக (முருகன்) வழங்கப்படுவதும் இம்மக்களின் வழிபாட்டு மரபை கூறுகிறது. தமிழரின் இறையியல் கோட்பாட்டின்படி இவ்வழிபாட்டு தளங்கள் சோழ மள்ளர் தளபதி அல்லது குறுநில மன்னரின் உடலை அடக்கம் செய்த இடமாக (பள்ளிப் படுத்திய) இடமாக இருக்கலாம்.

பேரூர் பட்டீஸ்வரம் திருக்கோவில்

இன்றும் பள்ளர்பாளையமாகிய செல்வபுரத்தில் (திராவிட அரசால் சாதி ஒழிப்பு என்ற பெயரில் பள்ளர்பாளையம் செல்வபுரம் என்று பெயர்மாற்றம் மிக சமீபத்தில் நடந்தேறி உள்ளது) வெள்ளிங்கிரி ஆண்டவர் குலதெய்வ குடும்பம் உள்ளது என்பது சிறப்பு. சாதியின் பெயரால் ஊர் உள்ளதையும் மள்ளர்களின் மண் என்ற பெருமையும் ஆகும். அம்மண்ணில் மள்ளர்களின் ஆட்சியின் கீழ் குடிமக்களாக தங்களை வரலாறு  கூறும் என்ற உண்மையை ஏற்க மறுத்த பிற சமூகத்தாரால் செல்வபுரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறாக சமூகப் புரட்சி என்றும் அரசியல் கொள்கை என்ற பெயரில் பள்ளரின் வரலாறு அழிக்கப்பட்டது.

   தமிழர்களின் இறையியல் கோட்பாட்டின்படி பட்டி மள்ளரையும்,பச்சை நாயகியையும் அடக்கம் செய்த இடமாக பேரூர் பட்டீஸ்வரம் சிவபெருமான் இருக்கலாம். பேரூர் நாடாண்ட சோழ மன்னர்களின் வரலாற்று சுவடுகளாக நம்மால் காண முடிகிறது.

--- முற்றும் ---