மள்ளர் என்பது ஒரு குலம்
மள்ளர் என்பது ஒரு குலம்
மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர் - தேவேந்திரன் எல்லாம் ஒன்றே,ஒருவரே
மள்ளர் என்பது மருத நில மக்களின் மரபுப் பெயர் என்பதையோ, மள்ளரும் மல்லரும் ஒன்று என்பதையோ, இம்மள்ளர் - மல்லரே இன்றையப் பள்ளர் என வழங்கப்படுகின்றனர் என்பதையோ இதுகாறும் தமிழர் வரலாற்றினை எழுத முனைந்த எந்தவொரு வரலாற்றாளர்களும் வெளிப்படுத்த விரும்பவில்லை. மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர். இதனால் தான் இதுவரையிலும் மூத்த தமிழ்குடி மக்களின் மூல வரலாறு மூடி மறைக்கப் பட்டே வந்துள்ளது. தமிழக வரலாற்றளார்கள் மள்ளர் / மல்லர் என்றால் 'வீரர்' என்று வெறுமனேப் பொருள் கூறி மழுப்பியுள்ளனர். மள்ளர் - மல்லர் என்பது ஒரு குலம் என்பதை இவர்கள் எடுத்துரைக்கத் தவறி விட்டனர்.
இலக்கியச் சான்றுகள்
- கம்பராமாயணம்
பால காண்டம் - ஆற்றுப் படலம்
கம்பன் காட்டும் மள்ளர் குலம்
செய்யுள் 18
நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
"காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த்திவலை, பொன்னும், முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று , அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு
கொத்தகால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே"
உழவர் குடியினராகிய மள்ளர் குலத்தார் வாய்க்கால்களில் நீர் வருதலை எதிர்நோக்கிக் காத்து நிற்றலைக் குறிக்கும், மகிழ்வை வெளிப்படுத்தும் ஆரவாரப் பறை முழங்க, திரண்ட நீர்த்தி வலைகள் பொன்னும் முத்துமாய் அலைகளால் தெளிக்கப் பட்டு, நிலத்தினைக் கிழித்துக் கொண்டு நீண்ட கோத்த கால்வாய், மள்ளர் குலத்தார் எப்படிப் பல கிளைகளாகப் பாண்டியர் குடி, சோழர் குடி, சேரர் குடி எனப் பிரிந்து சென்று மண்ணையும், மக்களையும் கத்துச் செழிப்பாக ஆள்வதைப் போல் பல கிளைகளாக வாய்க்கால்கள் பிரிந்து சென்று வயல்களை விளைவித்ததைக் கூறும் கம்பராமாயணம் மள்ளர் என்பதை ஒரு குலம் எனக் குறிப்பிடுகிறது.
பால காண்டம் - நாட்டுப் படலம்
செய்யுள் 32
குன்றுடைக் குல மள்ளர்
"கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன்தொடர் படுக்கும், வன வாரி சூழ்
குடுடைக் குல மள்ளர் குழுஉக் குரல்
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே"
குட்டிகளையுடைய பெண் யானைகள் விட்டு விட்டுச் சுர்ரித்திர்யும் ஆண் யானைகளின் வட்டங்கள், வலிய சங்கிலியால் பிடித்துக் கட்டப்படுகின்ற காட்டாறுகளும், ஓடைகளும் சூழ்ந்துள்ள குன்றுகளுக்கு உரிமை உடையவர்களான மள்ளர் குலத்தாரின் கூட்டங்களில் இருந்து எழும்புகின்ற ஆரவார ஒளியானது, இனிய பெட்டிகளுடன் களிக்கின்ற ஆண் அன்னங்களை நிலைகெட்டு ஓடச் செய்வதாகக் கூறும் மேற்கண்ட செய்யுளடிகள் மள்ளர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது.
யுத்த காண்டம் - வானரர் களம் காண் படலம்
செய்யுள் 25
உயிரிழந்து கிடக்கும் அரக்கர் சேனை குறித்த வீடணன் கூறுதல்
"நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கடும் பரம்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடுங் கமலா மலர் நாறும் முடி பரந்த
பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனக் பொலியும் தகையும் காண்மின்"
நீண்ட வாட்படையாகிய ஏர்க் கலப்பையினால் உழுகின்ற மனிதச் சதைகளாகிய சேற்றில் குருதி நிறைந்த நீர்த் தேக்கத்தினையும், விரைவுடன் கூடிய வேழங்கலாகிய எருமைக் கடாக்கள் படிந்து தோயப் பெற்றதாகி வேகமாகப் பரவுதலுடைய மள்ளர் இனத்தார் கூடிப் பரம்படிக்கும் கையில்படும் தாமரை மலரின் நறுமணம் கமழ்கின்ற தலைகளாகிய நாற்று முடிகள் பரவிக் கிடந்த பெரிய அந்தப் போர்க்களம் பரந்து விரிந்த பெரிய வயல்வெளிகளைக் கொண்ட மருத நிலத்தின் தன்மையை ஒத்தது போல் விளங்குகின்றதைப் பாருங்கள் எனக் கூறும் மேற்கண்ட செய்யுள் என்பது ஒரு இனம் என எடுத்துரைக்கின்றது. இங்கனம் மல்லர்களை 'இனம்' எனக் குறிப்பது இவர்களே தமிழர்கள் எனப் பொருட்டாகும்.
- முக்கூடற் பள்ளு
இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காலம் கி.பி.1670 .
செய்யுள் 12
மள்ளர் குலமே பள்ளர் குலம்
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க் கோர்
பள்ளக் கணவன் எனின் பாவனைவே றாகாதோ
கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே"
மள்ளர் என்பது ஒரு குலம் என்பதையும், அம்மள்ளர் குலமே பள்ளர் குலம் என்பதையும் முக்கூடற் பள்ளு அடிகள் தீர்க்கமுடன் தெளிவுபடுத்துகின்றன.
=> மள்ளர் - மல்லர் ஒருவரே: தொல்லியல் அறிஞர்களின் கருத்து
முனைவர் நடன.காசிநாதன்
மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருத நில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் சுட்டுகின்றன. சங்க காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண் குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது" என்கிறார் தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.
முனைவர் இரா.நாகசாமி
'மல்' என்ற சொல்லிற்குச் 'செல்வம்' என்று பொருள். 'மல்லை' என்ற சொல்லிற்கு 'செல்வம் மிகுதியானது' என்று பொருள். இதற்குத் 'திண்ணம்' என்ற பொருளும் உண்டு. 'வலிமை' 'வளப்பம்' என்கிற பொருட்களும் உண்டு. இவ்வாறாக 'மல்' என்ற சொல்லிற்கு வளம்,வளமை,திண்ணம் - உறுதியான - வலிமையான,செல்வம், செழுமை என்ற பொருட்கள் உண்டு இதனை Lexican , Dravidan Etimolagy Dictionary முதலிய அகராதிகள் மூலம் அறியலாம். இதே பொருளை 'மள்' என சொல்லிற்கு பார்க்கலாம். 'மள்ளர்' என்பதற்கு திண்மை, செழுமை, என்று பொருள். மள்ளர் என்றால் உழுபகடு உறப்புவார். செல்வம் என்றால் என்ன? பயிரினால் வருவது செல்வம்; போர் புரிபவர்களுக்கும் மள்ளர் என்ற பெயர் உண்டு. மல் - மல்லர், மள் - மள்ளர் இரண்டிற்கும் ஒன்று போல் பொருள் வருகின்ற கரணியத்தால், சில இடங்களில் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இஃது எனது முடிவான கருத்து. மல்லர் என்றாலும், மள்ளர் என்றாலும் ஒரு பொருள் உண்டு. வேறு பொருளும் உண்டு. அந்த இடத்திற்கு தக்கவாறு சொல்லின் பொருள் மாறுபடும். 'பள் ' என்ற சொல்லிற்கு 'பள்ளம் செய்தல்' என்று பொருள். எந்த வேளாண் செயல்பாடுகளாக இருந்தாலும் 'பயிர் செய்தல்' என்று வந்தால் வரப்பு எடுத்து நீர் தேங்க அந்தப் பள்ளத்தின் அடிப்படையில் இருப்பதாலே 'பள்' என்றால் 'பள்ளர்' என்று பொருள் சொகிறார்கள்.
ஆதலால் பயிர் செய்து வளத்தைப் பெருக்கி, செல்வத்தைத் திரட்டியவர்களுக்கு 'பள்ளர்' என்று பெயர் வந்தது. அதாவது இம்மக்கள் தொழிலில் இருந்து நிறைவான செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனால் மருத நிலத்தில் வாழும் பள்ளர்கள் பிற குலத்தாருக்கு உணவூட்டியவர்களாவர். ஆதலால் 'பள்ளம்' செய்து செல்வத்தைப் பெருக்குகிறவர்கள் 'பள்ளர்கள்' என்றாயினர் என்று மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் இரா.நாகசாமி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மல்லர் - மள்ளர் - பள்ளர் என்பது எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள் மட்டுமின்றி மருத நிலக் குடியினரை மட்டும் குறிக்கும் குறியீட்டுக் குல மரபுப் பெயர் சொற்கள் என்பதும் எளிதில் விளங்கும்.
=> மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர்
ஒன்றென உரைக்கும் சான்றுகள்
அனுமனேரிச் செப்பேடு
"ரெகுநாத காவேரிக்குத் தெற்கு மல்லர் திருமேனிக் குடும்பன் புஞ்செய்கு மேற்கு பொடுகட்டியூரணிக்கு வடக்கு" நில அளவையின் போது, அருகாமைந்த நில உரிமையாளரின் பெயரினைப் பதிவு செய்யும் மேற்கண்ட செப்பேடு 'மல்லர் திருமேனிக் குடும்பன்' எனக் குறிக்கிறது. இதனால் குடும்பர்கள் 'மல்லர் குலத்தவர்' என்பது மெய்ப்படுகிறது.
மதுரை மாவட்ட நில ஆவணம்
நில ஆவணத்தின்.... '1952 - ம் வருஷம் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதிக்கு தமிழ் கர வருஷம் மார்கழி மாதம் 25 - ம் தேதி மதுரை தாலுகா வண்டியூர் கிராமத்திலிருக்கும் இருளப்பக் குடும்பன் குமாரத்தி பள்ளர் சுகவாசி அரசாய் அம்மாளுக்கு மேலூர் தாலுகா, ஜாரி ஆமூர் கிராமம், மஜரா தெற்கிலாமூரிக்கும் மல்லர் குடும்பன் குமாரர் பள்ளர் விவசாயம் ஆளப்பன் எழுதி வைத்த செட்டில்மென்ட்...." எனக் குறிப்பிடுகின்றது.
செண்பகராமன் பள்ளு
இளைய பள்ளி வருந்தல்
"மல்லார் சேர் நாஞ்சிநாட்டுப் பள்ளி - மூத்த பள்ளி
வன்மத்தைக் கண்டாயோ பள்ளா
இல்லாத களவெல்லாம் சுமத்தி - யுன் தலையில்
ஏற்றியே மரத்திலிடு வித்தாள்
கொள்ளாமல் கொல்லவல்லோதுணிந்தாள் - பண்ணைக்காரக்
கூதற நயினாரு மதுதன்
னுல்லாரும் பெண்ணேபெண் என்றால் - நானுமிதுக்
கென்செய்வேன் பகவதிக் குடும்பா"
மரத்தில் அடிக்கப் பட்ட பள்ளனிடம் இளைய பள்ளி சென்று உன்மேல் இல்லாத களவெல்லாம் மூத்த பள்ளி சுமத்தி உன்னை மரத்திலடிக்கச் செய்தான். இதற்க்கு நான் என்னசெய்வேன் என்று வருந்துகிறாள்.
எட்டையபுரப் பள்ளு
செய்யுள் 146
"யிப்படிக் கூடிய நாள்நல்ல நாள் மல்லர் யாரும் வயல்
ஏரிடச் சாத்திகம் நேரிடச் சீக்கிரம் வாருஞ்
செப்பினேனென்று மனப்பிரியமாகவே நடந்தான் மள்ளர்
சேரத்திரண்ட பின்பு கூர்க்குடும்பன் பின்றுடர்ந்தார்
காகம் வலம்பாயக் கருடனிடம் பாயக் கண்டார் சிலைக்
காமன் குமாரயெட்டசாமி யோகமென்று கொண்டார்
வாகன கருடனுமாகாசம் வட்டமிட்டாடவே பள்ளர்
வந்தபேர்க ளெல்லாஞ் சிந்தை மகிழ்ந்து கொண்டாடவே..."
தென்னிசைப் பள்ளு மருத நில மக்களை மல்லர்,மள்ளர், குடும்பன், பள்ளர் எனக் குறிக்கிறது. மல்லர் / மள்ளர் என்பது ஒன்றே! யாவரே இன்றையப் பள்ளர்! குடும்பன் என்னும் குலப்பட்டம் இவர்களுக்குரியதே என்பதற்கு மேற்கண்ட பள்ளு மறுக்கவொண்ணாச் சான்றாக திகழ்கிறது.
"தொண்டையர் கோன் மண் மல்லகுல வரையால் நூற்றுக்கால் மண்டபத் தேணி" என்று சிதம்பரம் நடராசர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6 எண்.225 , வரி.14 -15 ), "ஆகோ மல்ல குல கால வாய்க்காலுக்கு வடக்கு" என்று மன்னார்குடி சயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6/37 ) மல்லர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது. கதிர்வேற் பிள்ளையின் மொழியகராதி 91 சாதிகளில் 'மல்லர்' சாதியையும் குறிப்பிடும். இதனூடாக மல்லர் / மள்ளர் என்பது பள்ளர் குல மக்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
=> பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே
காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு
இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து பேர்களும், முதலியார்களும் நான்கு பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில் ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பட்டயத்தின் காலம்
"சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்".
தேவேந்திரர் மெய்க்கீர்த்தி
"தேவேந்திரப் பள்ளரில் வெள்ளானை வேந்தன் மிக விருது பெற்றவன். சேத்துக்கால் சென்னன், சென்னல் முடிக்காவலன், தேவேந்திர வர புத்திரன், மண் வெட்டி கொண்டு மலையை கடைந்த கண்ணன், வெள்ளானை கொடி படைத்தவன், வெள்ளக் குடை, முத்துக்குடை, பஞ்சவர்ண குடை, முகில் கொடி, புலிக் கொடி, அழகுக் கடை படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் தேவேந்திரப் பள்ளன்"
விருது பெற்ற தேவேந்திரர்கள்
"காஞ்சிபுரத்துப் பண்ணாடி, சின்னக் காஞ்சிபுரம் நாகப் பண்ணாடி, சர்வதீரத்து வீதி முத்துப் பன்னாடியும், செஞ்சி நகரம் அரசப் பன்னாடியும், தஞ்சாவூர் சீரங்க மூப்பன். திருச்சிராப்பள்ளி மூக்க மூப்பன், திருவெங்கிமலை நயினார்க் குடும்பன் மதுரை நாராயணக் குடும்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்திமதி காலாடி, திருச்செங்கோடு பழனிப் பன்னாடியும் தேவேந்திர கூட்டத்தின் பெரியோர்களாகும்."
சிவகங்கைக் குடும்பர்கள் செப்பேடு
இப்பட்டயம் எழுத்தப் பட்ட ஆண்டு கி.பி.1752 ஆகும். வரி.96 - 107
தேவேந்திரர் சிறப்புகள் - அவை கூடுதல்
"வெள்ளாண்மை யுலகில் வியணப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வர்சையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகன் சேர் சேறாடிக் குடையும்ஞ் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால்ச் செலவரான குடும்பர்களும், அமராபதிகளும், அளகாபுரிக்கும், நிகரைச் சிரஞ்சீவிப் பதியான் சிவகெங்கைத் திருக்குளத்தங் கரையில்ச் சீவற்னயீசுவரன் பெரியனாயகி சன்னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வட திசை தென் திசையிலும் உள்ள உறவின் முறையாரையும், குடும்பர்களையுங் கூட்டஞ் செய்து..." என்கிறது.
மல்லிக் குந்தம் செப்புப் பட்டயம்
காலம் கி.பி.1701 . அடி 52 - 55
"மஞ்சப்பாவாடை யுடையவர் தேவேந்திரப் பள்ளன் வெள்ளைகொடை வெள்ளை வெண்சாமரமுடையவர் விருது கோங்கி பூதக் கொடியுடையவர் இவர்களுக்கெல்லாம் தலைகட்கு க.னுலை ம் முக்குருணி அரிசியும், கொடுக்க வேண்டியது" என்கிறது.
இங்கனம் செப்புப் பட்டயங்களின் வாயிலாகவும் பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே என அறியலாம்.
(விரைவில் இங்கே பிரசுரிக்கப்படும்: பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் ஒன்ருவரே என்று ஓதும் பள்ளுப் பாடல்கள்)
பள்ளரே பாண்டிய மரபினர்
பள்ளரே பாண்டிய மரபினர்
பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)
இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:
"கள்ளநாட்டார் ஒன்று கூடி
களவு செய்ய புறப்பட்டார்கள்"
...........................................
"தென்னாடு போகணுமே
தீவட்டிக் கொல்லைப் போடணுமே
கன்னக்கோல் ஆக்கணுமே
கையருவாள் வல்லயமும்
குத்துகம்பு வல்லையமும்
கொடுக்கருவாள் சமுதாடும்
பூட்டை மெல்ல முறிக்கணுமே
போய் களவு செய்யணுமே
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்ப வேண்டும்
பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
பக்குவமாய் புறப்பட்டார்கள்"
.............................................
"களவுக்குத் தலைவன் அண்ணே
கருப்புசாமி வந்தேன் அண்ணே
காஞ்சிபுரம் கருப்பநென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
..........................................
"களவு செய்ய இடமுமில்லை
கன்னம் போட வழியுமில்லை
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்
கோபாலசமுத்திரத்தில்
குடியிருக்கார் குடும்பக்கமார்
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திராவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா"
................................................
"கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
அத்தசாம நேரத்தில்
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்
கதவுகளைத்தான் திறந்தார்
கீழ்த்தாளை மேல்த்தாளை
கிருபையுடன் துறக்கலுற்றார்
வெண்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார்
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்"
....................................................
"கள்ளருக்குத் தலைவன் தானே
கருப்பசாமி தேவராவார் --
'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
காவலுக்கு ஒருவரில்லை' என
ஏழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார்
வயிரங்களும் முத்துக்களும்
வாரி வாரி கட்டலுற்றார்'
..............................................
"குலவைச் சத்தம் காதில் கேட்டார்
குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்
காச்சிநாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்
வீமானென்ற நாயுதுதான்
துள்ளி ஓடி வருதய்யா
நாயுடனே பின் தொடர்ந்தார்
நலமான பாண்டியரும்"
...................................................
"தொட்டிபாலம் தான் கடந்து
துளசிமாடம் தான் கடந்து
தாம்பிற வன்னிதான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்
கனகக் குடும்பா நீ கேளு
களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா எனது
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்
பூமியிலே போட்டிருந்தால்
பூதங்க்கொண்டு போகுமென்று
ஆயக்கால் போட்டு வைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டு கள்ளர் வந்து
வாரிக் கொண்டு போய்விட்டார்
கருங்காட்டு ஊரதிலே
கண்டேனே கள்ளர்களை
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"
கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.
தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Posts (Atom)