மதுரை வரலாறும், மள்ளரின் மேன்மையும்
மதுரை வரலாறு
தென்பாண்டி நாட்டிலுள்ள பள்ளர்கள் நடுவே மதுரை என்பது 'மருதை' என்றே வழங்கி வந்துள்ளது. வைகையாற்றின் தென்கரையில் அவனியாபுரம்,வில்லாபுரம்,பழங்காநத்தம்,மாடக்குளம்,பொன்மேனி,தானத்தவம்புதூர்,விராட்டிபத்து,அச்சம்பத்து,ஆரப்பாளையம்,அனுப்பானடி,சிந்தாமணி,ஐராவத நல்லூர்,விரகனூர் ஆகிய ஊர்களும், ஆற்றின் வடகரையில்வண்டியூர்,கருப்பாயூரணி,மானகிரி,மதிச்சியம்,கோசாகுளம்புதூர்,செல்லூர்,'மீனாட்சி புரம்' என்ற பெயரில் மூன்று ஊர்கள்,தத்தநேரி,விளாங்குடி ஆகிய ஊர்களும் மதுரை மாநகருக்குள் நடுவம் கொண்டுள்ள மருத நில மக்களான பள்ளர்களின் பழம்பெரும் குடியிருப்புகளாகும்.
மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலில் கிழக்குக் கோபுரம் அவனிவேந்தராமன் என்கிற சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களை எழுப்பியவனும் இவனே. இச்சுவர் 'சுந்தர பாண்டியன் திருமதில்' என்றே வழங்கப்படுகிறது (கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.279). பாண்டிய அரசர்கள் 'அவனிப சேகரன்' என்றும், பாண்டிய அரசிகள் 'அவனி முழுதுடையாள்' என்றும் அழைக்கப் பெற்றனர்(கே.வி.ராமன், பாண்டியர் வரலாறு பக்.152). இது பற்றியே அவனியாபுரம் என்ற ஊர்ப் பெயர் எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் பள்ளர்குல மக்களே பெருந்திரளாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணம் பாண்டியர் வரலாற்றை அறிய உதவுகிறது. மதுரையைப் பற்றிய அக்காலத்தியக் கதைகளை இப்புராணம் பதிவு செய்துள்ளது. 'மாடக்குளக்கீழ் மதுரை' எனக் கல்வெட்டுகளில் வரும் பெயர் இந்நூலிலும் வருகிறது. 'மாடக்குளத்தில் வந்துதித்தவரான பரமசிவனுக்கு' எனப் பள்ளர் வரலாற்றை பறைசாற்றும் பழனி செப்பு பட்டய வரி 216 குறிக்கும். பாண்டியர் வரலாற்றை தாங்கிய மேற்கண்ட வரலாற்று முதன்மைச் சான்றுகள் முன்மொழிகின்ற மதுரை 'மாடக்குளம்' பள்ளர்களின் பழம்பெரும் ஊர் என்பது குறிப்பிடத் தக்கது.
சிலப்பதிகாரம்
மதுரைக் காண்டம் - ஊர்சூழ்வரி
அடிகள் 15 - 22
மல்லன் மதுரை
"அல்லலுற் றாற்றா தழுவளைக் கண்டேகி
மல்லன் மதுரையா ரெல்லாருந் தாமயங்கித்
களையாத துன்பமிக் காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கோல்
மன்னவர் மன்ன மிதிக்குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றஞ் சிதைந்த திதுவென்கோல்
மண் குளிரச் செய்யு மறவே னெடுந்தகை
தண்குடை வெம்மை விளைந்த திதுவென்கோல்"
பெருந்துயரமுற்று ஆற்றாது அழுகின்ற கண்ணகியைக் கண்டு அவள் துயரத்தைத் தம்மால் ஆற்ற முடியவில்லையே என்று ஏக்கமுற்று மல்லன் பாண்டிய நெடுஞ்செழியனுடைய மதுரை நகரத்தில் வாழுகின்ற மக்களெல்லாம் தாமும் இரங்கி அழுது மயங்கிக் கூறுகின்ற செய்தியை மேற்கண்ட செய்யுள் எடுத்துரைக்கின்றது.
இச்செய்யுளின் மூலம் 'மல்லன் மதுரை' வாள் வேந்தனான தென்னவன் பாண்டிய மன்னனின் தலைநகர் என்பது தெரிய வருகிறது. நெடுநெல்வாடையும் பாண்டியரின் தலைநகரை 'மாட மோங்கிய மல்லன் மூதூர்' (அடி.29) என்கிறது. பொ.வே. சோமசுந்தரனாரின் கழக வெளியீடு 'மல்லன் மூதூர்' என்கிறது. ஏனைய பதிப்புகள் சிலவற்றில் திரிக்கப்பட்டு 'மல்லல் மூதூர்' எனப்பதிப்பிக்கப்பட்டுள்ளது. 'மல்லன் மூதூர்' என்றாலும் வளமுடைய பழைமையான மருத நிலத்து ஊர் என்று தான் பொருள். வளம் என்றாலே பயிர்த்தொழில்,உற்பத்திப் பெருக்கம் என்பதையே குறிக்கும். எனவே பாண்டியரின் தலைநகரான 'மல்லன் மூதூர் - மல்லன் மூதூர்' என்பது மள்ளர்களின் ஊர் என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ளவியலாது.
திருவிளையாடற் புராணம்
மெய்க்காட்டிட்ட படலம்
செய்யுள் 27
மல்லன் மாநகரில் மள்ளரின் ஆரவாரம்
"பல்லிய மொலிக்கு மார்பும் பாயபரிசுலிக்கு மார்ப்புஞ்
சொல்லொலி மழுங்க மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக்
கல்லெனுஞ் கைம்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள்
மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே"
பல்வகை இசைக்கருவிகளின் முழக்கமும், குதிரைகளின் கனைப்பொலியும் மள்ளர் போர்ப்படை வீரர்களின் ஆரவார ஒலியும் ஒன்றோடொன்று கலந்து பேரொலியாயின. அப்படி மள்ளர் சிவபெருமானின் மள்ளர் படை வரும் ஒலி, முன்பொரு காலத்தில் பாண்டிய மல்லனின் மதுரைக் கடல் சீறி வந்து கொண்டது போலிருந்தது எனக் கூறும் மேற்கண்ட செய்யுளடியின் ஊடாக மதுரை மாநகர், மள்ளர்களின் பேரூர் என விளங்கி வந்தமையை அறிய முடிகிறது. இரா.பி.சேதுப்பிள்ளை தனது 'ஊரும் பேரும்' என்னும் நூலில் மதுரை என்பதை 'மருதந்துறை' என்று குறிப்பிடுகிறார்.
மதுரை காந்தி என்ற நூலில் பா.சி.சந்திரபிரபு, 1935 ஆம் ஆண்டு நா.ம.இராசுப்பராமன் என்பவர் நகராட்சித் தலைவராக இருந்தபோது மதுரை நகரில் உள்ள தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"நகராட்சியின் மூலம் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளும் நடைபெற்றன. நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களுக்கும், தெருக்களுக்கும் சாதிப் பெயர் சூட்டக் கூடாது என்று ஐயா அவர்கள் தடை விதித்தார். சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட அரசுகள் இது போன்ற சீர்திருத்தம் கொண்டுவர இன்றும் கூடத் தயங்குவதைப் பார்க்கிறோம். புரட்சிகரமான இத்திட்டத்தை 1935ஆம் ஆண்டில் ஐயா அவர்கள் மதுரையில் செயல்படுத்தியது அசாதாரணமானதாகும். அதற்கிணங்க சாதிப் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மாற்றுப் பெயர் அளிக்கப்பட்டன. உதாரணமாக 'பள்ளர் தெரு' என்று வழங்கி வந்த தெருவுக்கு 'பெருமாள் கோயில் தெரு' என்று சூட்டப்ப் பட்டது. இன்று அந்த தெருவில் வசிப்பவர்களும் கூட இச்செய்தியை அறிவார்களா என்பது சந்தேகமே." (பா.சி.சந்திரபிரபு, மதுரை காந்தி (ஒரு சத்தியாகிரகியின் கதை), ப.44-45)
பெருமாள் கோயில் தெருவாகப் பெயர் மாற்றப்பட்ட 'பள்ளர் தெரு' மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு மேற்குப் புறம் இருந்தது. இவ்வாறு பள்ளர் குல மக்களின் அடையாளங்கள் பல அழிந்து போய்விட்டன.
பாண்டியர் இடுகாடு - கோவலன் பொட்டல்
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள 'கோவலன் பொட்டல்' என அழைக்கப் படுகின்ற 'பாண்டியர் இடுகாடு' உண்மை வரலாற்றை உணர்த்துவதற்குத் தடம் பிடித்து காட்டும் தரவாக விளங்குகிறது. கே.ஆர்.அனுமந்தன் போன்ற வரலாறு அறிஞர்களால் கூறப்படும் பழங்காநத்தத்தில் உள்ள பாண்டியர் இடுகாடு என்பது இன்று பள்ளர்களின் இடுகாடாக இருக்கின்றது. அந்த இடத்தில் 'தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட மயானம்' என்று எழுதி வைக்கப் பட்டுள்ளது. இடுகாடு என்பது ஒரு குலத்திற்கு சொந்தமான சொத்தாகவே இருந்து வருவதை நாம் பார்க்கின்றோம். பொதுவாகவே ஒரு குலத்திற்கான இடுகாட்டை வேறொரு குலத்தை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது இல்லை. இஃது தமிழரின் மரபு வழக்காறாகவே இருந்து வருகிறது.
(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு நுழைவுப் பகுதி புகைப்படம்)
(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாடு - பள்ளர் சுடுகாடு உள்ப்புறம் புகைப்படம்)
(விரைவில் இணைக்கப்படும்: பாண்டியர் இடுகாட்டில் உள்ள பள்ளரின் கல்லறை)
பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைச் சிறைப்படுத்தி மரண தண்டனை வழங்கிக் கொன்றதால் கோவலனின் உடல் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படாமல் பாண்டியர்கள் தங்களின் இடுகாட்டிலேயே அடக்கம் செய்து விட்டதாக மரபு வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே 'பாண்டியர் இடுகாடு' 'கோவலன் பொட்டல்' என்று அழைக்கப் படுகிறது. இந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் காட்டுவதாகக் கூறி மு.கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு பலமுறை முயற்சித்தும், அம்முயற்ச்சியைப் பழங்காநத்தம் பள்ளர்கள் முறியடித்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இம்மரபு வழிச் செய்திகளையும், நடப்பியல்புகளையும் ஒப்பு நோக்கும் போது பள்ளர்களே பாண்டியர் மரபினர்கள் என்னும் வரலாறு உறுதி செய்கிறது.
தேவேந்திரன் சக்ரவர்த்தி: ஊர் குடும்பு ஆட்சி முறை
ஊர் குடும்பு ஆட்சி முறை - அன்றும் இன்றும்
மருத நிலத்தில் தோன்றிய ஊர்க்குடும்பு ஆட்சிமுறை களத்து மேட்டை நடுவமாகக் கொண்டெழுந்த காணியாட்சி முறையாகவே தொடக்கத்தில் இருந்தது. எனவே தான் நெல் விளைவிக்கப்படும் நிலங்களின் தொகுப்பிற்கு 'குடும்பு' என்று பெயர் ஏற்ப்பட்டது. குடியிருப்பதற்காக மக்களிடம் இருந்து மன்னர்களால் பெறப்பட்ட வரிக்கு 'குடிமை' என்று பெயர். சோழர் காலத்தில் தோட்ட வாரியம், கழனி வாரியம், ஏரி வாரியம் எனத் தனித்தனி அமைப்புகள் இருந்ததைப் போன்று 'குடும்பு வாரியம்' என்றொரு தனி அமைப்பும் இருந்து இயங்கி வந்துள்ளது. இதில் பணி புரிந்தவர்கள் 'குடும்பு வாரியப் பெருமக்கள்' என்று அழைக்கப் பெற்றனர்.
காஞ்சிபுரம் வட்டம், மணி மங்கலம் கல்வெட்டில் 'குடும்பிடு பாடகம்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. குடும்பிடு பாடகம் என்பது நிலப் பெயர் ஆகும். குடும்பு செய்வதற்கான நிலம் குடும்பிடு பாடகம் என்றானது. குடும்பர்களுக்கு உரிமையுடைய நிலம் குடும்பிடு பாடகம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேசுவர சாமி கோயில் கருவறையின் தெர்க்குச் சுவரில் உள்ள கல்வெட்டு முதல் பராந்தக சோழனின் 40 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது. (கி.பி.947 ) இக்கல்வெட்டில் 'குடும்பு காட்டுக்காற் குடும்பி' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.
களத்து மேட்டைக் கவனிக்கவும், விளை பொருட்களைக் கள்ளர்களிடம் இருந்து காக்கவும், ஏர் மள்ளர்களான குடும்பர்களுக்குத் துணையாகப் போர் மள்ளர்களான காலாடிகள் விளங்கினர். ஏர்க்கள நிருவாகத்தொடு போர்க்கள நிருவாகமும் இணைந்தபோது குடும்பன் காலாடி ஆட்சி முறையான மூவேந்தர்களின் அடிப்படை ஆட்சிமுறை தோன்றியது. குடும்பர்களுக்கு உதவியாக இருந்த காலாடிகளுக்குப் பதிலாக சில இடங்களில் வாரியார்கள் இருந்தனர். வாரியன் என்ற சொல்லே பின்னாளில் வாதிரியான் எனத் திரிந்தது. வாதிரியான் என்பது தற்போது 'வாத்திரியான்' என்று திராவிடத்தால் திரிக்கப் பட்டுள்ளது. வாதிரியான் என்பது பட்டியல் சாதிகளில் அகர வரிசை எண்.72 இல் உள்ளது.
இடைக்கால சோழர் ஆட்சியில் குடும்பு முறை
குடும்பு என்னும் சொல்லாட்சி வரலாற்றில் தொன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதைக் காண முடிகிறது. பாண்டிய மன்னர்கள் ஏற்ப்படுத்திய குடும்பிய முறை பின்னர் சோழர்களிடமும், சேரர்களிடமும் வழக்கில் இருந்தது. ஊர்க்குடும்பு ஆட்சிமுறையை உலகிற்கு உணர்த்துவதற்கு உரிய சான்றாக நிப்பது உத்திரமேரூர் கல்வெட்டாகும். இக்கல்வெட்டின் மூலம் இடைக்கால சோழர் ஆட்சி குடும்பு முறை செயல்பட்டதைப் பற்றிப் பார்ப்போம்.
உத்திரமேரூர் கல்வெட்டு - 1
தேவேந்திரன் சக்ரவர்த்தி
ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பாரந்தக சோழர் காலம்
அ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரிவன்மர்க்குயாண்டு பனிரெண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம். இவாண்டு முதல் எங்கள் ஊர் ஸ்ரீ முகப்படி ஆணை.
ஆ) இதனால் தத்தனூர் மூவேந்தர் வேளாண் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக் காலம் சம்வத்சர வாரியமும், தோட்ட வாரியமும், ஏரி வாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய்.
இ) பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி கானியத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன மைனயிலே அ.
ஈ) கம் எடுத்துக் கொடன்னு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும், சாஸ்த்திரத்திலும், காரியத்திலும் நிபுணர் எனப் பட்டி.
உ) ருப்பாரை அர்த்த சௌசமும் ஆத்மா சௌசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார் வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு
ஊ) அணைய பந்துக்கள் அல்லாதாரை குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் சேரியால் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு
எ) பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்து பன்னிரு வருசம் சம்பத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோலை
ஏ) லை வாங்கி பன்னிருவரும் தோட்ட வாரியம் ஆவதாகவும் நின்ற அறு குடவோலையும் ஏரி வாரியம் ஆ
ஐ) வதாகவும் முப்பது குடவோலை பறிச்சு வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும், முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங்கள் இவவியவஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலையிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவதாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு
ஒ) ம். குடவோலையில் பேர் எழுதி இடப் படாதார் ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத
ஓ) வாரியங்கள் ஒரு கால் செய்தாரை பிள்ளை அவ்வாரியத்துக்கு குடவோலை இடப் பெராததாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்றும் குடவோலை வாரியமேய இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி ஸ்ரீ வீரநாராயண ஸ்ரீ பராந்தக தேவர் ஆகிய பரகேசரி வர்மர் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக்காட்ட
ஓள) ஸ்ரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்த வேளாண் உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கேட்டு கிஷ்டர் வர்த்த்திதிடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திர மேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையோம்.
உத்திரமேரூர் கல்வெட்டு - 2
அ ) ஸ்வஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வன்மர்க்கு யாண்டு பதினாலாவது நாள் பதினாறு காலியூர் கோட்டத்து தன கூற்று உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்து சபையோம். இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் எம்பெருமான் ஸ்ரீ வீர நாராயணன் ஸ்ரீ பராந்தக தேவன் ஸ்ரீ பரகேசரிவன் மருடைய ஸ்ரீ முகம் வரக்காட்ட ஸ்ரீ முப்படி ஆ
ஆ) ஞஞையினால் சோழ நாட்டுப்புறங் கரம்பை நாட்டு ஸ்ரீ வாங்க நகரக்கரஞ் செய்கை கெண்ட யக்ரமவித்த பட்டனாகிய சோமாசி பெருமாள் இருந்து வாரியமாக ஆட்டொ ருக்காலும் சம்வத்சர வாரியமும் தோட்ட வாரியமும் ஏரி வாரியமும், இடுவதற்கு வியவஸ்தை செய் பரிசாவது குடும்பு முப்பதா முப்பது குடும்பிலும் அவ்வவ் குடும்பிலா
இ) ரே கூடிக் காணிலத்துக்கு மேல் இறை நிலமுடையான் தன மனையிலே அகம் மெடுத்துக் கொண்டிருப்பானை எழுபது பிராயத்தின் கீழ் முப்பத்தைந்து பிராயத்தின் மேற்ப்பட்டார் மந்த்ர பிராமணம் வல்லான் ஒதுவித்தறிவானைக் குட வோலை இடுவதாகவும் அரக்கா நிலமே யுடையனாயிலும் ஒரு வேதம் வல்லனாய் நாலு பாஷ்யத்திலும் ஒரு பா
ஈ) ஷ்யம் வக காணித்தறிவான அவனையுங் குட வோலை எழுதிப் புக இடுவதாகவும் அவர்களிலும் கார்யத்தில் நிபுணராய் ஆகாரமு டையாரானாரை யேய் கொள்வதாகவும் அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உடையாராய் மூவாட்டினிப்புறம் வாரியஞ் செய்து கணக்குக் காட்டாதே இருந்தாரையும் இவர்களுக்குச் சிற்றனவர் பேரவ்வை
உ) க்களையும், அவர்களுக்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்குத் தாயோடு உடப் பிறந்தானையும் இவர்கள் தகப்பநோடுப் பிறந்தானையும் தன்னோடுப் பிறந்தாளை வோட்டானையும் உடப் பிறந்தாள் மக்களையும் தன மகளை வேட்ட மருமகனையும் தன தமப்பனையும்
ஊ) தன மகனையும் ஆக இச்சுட்ட.....பர்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும், அகமியாகமனத்திலும் மகா பாதங்களில் முன் படைத்த நாலு மகா பாதகத்திலுமெழுத்துப் பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுடப்பபட்ட இத்தனை பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெருதாராகவும் சம சரக்க பதிதாரை பராஸ்யசித்தஞ் செய்யுமளவும்
எ) குடவோலை இடாததாகவும்....தியும், சாகசிய ராயிரைப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் பரத்ரவியம் அபகரித் தானையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெருதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டுங் கொண்டான் க்ரத பிராயஸ் சித்தஞ் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் ப்ராணாந்திகம்
ஏ) வாரியத்துக்கு குடவோலை யெழுதிப் புகவிடப் பெருந்தாகவும் .... பாதகஞ் செய்து பிராயச் சித்தர் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் ப்ராயஸ்சித்தஞ் செய்து சத்தரானாரையும் அகமியாங்கமஞ் செய்து ப்ராயஸ்சித்தஞ் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் ப்ரானாந்திகம் வாரியத்துக்குக் குடவோலை எழுதி எழுதிப்புகவிடப் பெருதாக
ஐ) வும் ஆகா இச்சுட்டப்பட்ட இத்தனைவரையும் நீக்கி இம்முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி இபன்னிரண்டு சேரியிலுமாக இக்குடும்பும் வெவ்வேறே வாயோலை பூட்டி முப்பது குடும்பும் வெவ்வேறே கட்டிக்குடம் புக இடுவதாகவும் குடவோலை பறிக்கும் போது மகா சபைத் திருவடியாரை சபால விருத்தம் நிரம்பக் கூட்டிக் கொண்டு அன்றுள்ளீரில் இருந்த நம்பிமார் ஒருவரையும் ஒழியா
ஒ) மே மகா சபையிலேரும் மண்டகத்தி லேயிருத்திக் கொண்டு அந்நம்பிமார் நடுவே அக்குடத்தை நம்பிமாரில் வருத்தராய் இருப்பா ரொரு நம்பி மேல் நோக்கி எல்லா ஜனமுங் காணுமாற்குலெடுத்துக் கொண்டு நிற்க பகலே யந்திர மறையாதானொரு பாலனைக் கொண்டு ஒரு குடும்பு வாங்கி மற்றொரு குடத்துகே புகவிட்டுக் குலைத்து அக்குடத்திலோரோலை வாங்கி மத்யஸ்தன் கையிலே
ஓ) குடுப்பதாகவும் அக்குடத்த வோலை மத்தியஸ் தன வாங்கும்போது அஞ்சு விரலும் அகல வைத்த உள்ளங்கையாலே ஏற்றுக் கொள்வானா கவும் அவ்வேற்று வாங்கின வோலை வாசிப்பானாகவும் வாசித்த அவ்வோலை அங்குள் மண்டகத்திருந்த தம்பிமார் எல்லோரும் வாசிப்பாராகவும் வாசித்த அப்பர் திட்டமிடுவதாகவும் இப்பரிசே முப்பது குடும்பிலும் ஒரே பேர் கொள்வதாகவும் இக்கொண்ட முப்பது பேரினுந்தோட்ட வாரியமும் ஏரி வாரியமும் செய்தாரையும் விச்சையா வருத்தரையும்
ஓ) வயோவ்ருத்தர்களையும் சம்வத்ஸர வாரியராக கொள்வதாகவும் மிக்கு நினாருட்பன்னிருவரைத் தொட்ட வாரியங் கொள்வதாகவும் நின்ன அறுவரையும் ஏரி வாரியமாகக் கொள்வதாகவும் இவ்வாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியப் பெருமக்களும் முன்னுற்றருபது நாளும் நிரம்பச் செய்து ஒழிவதாகவும் வாரியஞ் செய்ய நின்றாரை அபராதங்
ஐ) கண்டபோது அவனை யொழித்துவதாகவும் இவர்கள் ஒழித்த அனந்தரமிடும் வாரியங்களும் பன்னிரண்டு சேரியிலும் தன்மைக்ருதயங் கடை காணும் வாரியரே மத்யஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பராகவும் இவ்வியவஸ்தை யோலைப்படியே...க்ருக்குடவோலை பரித்தக் கொண்டே வாரியம் இடுவதாகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன் வாரியத்து.
ஓ) க்கு முப்பது குடும்பிலும் குடவோலைக்குப் பேர் தீட்டி முப்பது வாயோலை கட்டும் புக இட்டு முப்பது குடவோலை பறித்து முப்பதிலும் பன்னிரண்டு பேர் பறித்துக் கொள்வதாகவும் பறித்த பன்னிரண்டு பேர் அறுவர் பொன் வாரியம் அறுவர் பஞ்ச வாரியமும் ஆவனவாகவும் பிற்றை ஆண்டும் இவ்வரியங்களை குடவோலை பறிக்கும் போது இவ்வரியங்களுக்கு முன்னம் செய்
ஓ) த குடும்பன்றிக்கே நின்ற குடும்பிலே கரை பறித்துக் கொள்வதாகவும் கழுதை ஏறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப்புக் இடப் பெருததாகவும் மத்தியஸ்தரும் அர்த்த சௌசமுடையானே கணக்கெழுது வானாகவும் கணக்கெழுதினான் கணக்குப் பெருங்குறிப் பெருமக்களோடு கூடக் கணக்குக் காட்டி சுத்தன் ஆச்சி தன பின்னன்றி மாற்றுக் கண
ஓள) க்குப் புகழ் பெருதானாகவும் தான் எழுதின கணக்குத் தானே காட்டுவானாகவும் மாற்றுக் கணக்கர் புக்கு ஒடுக்கப் பெருதாராகவும் இப்பரிசே இவ்வாண்டு முதல் சந்த்ராதித்யவத் என்றும் குடவோலை வாரியமே இடுவதாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பட்டிதவச்சவன் குஞ்சர மல்லன் சூரா சூளாமணி கல்பகசரிதை ஸ்ரீ பரகேசரிபன்மர்கள் ஸ்ரீ முகம் அருளிச் செய்து வரக் காட்ட ஸ்ரீ ஆளஞயா
அக்கு) ல் சோழ நாட்டு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீ வங்க நகர்க் காஞ்சை கொண்ட யாக்ரமவித்த பாட்டனாகிய சேர்மாசி பெருமானுடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத்து அப்யுதயமாக துஷ்டர் கேட்டு விசிஷ்டர் வர்த்திப்பதாக வியவஸ்தை செய்தோம் உத்தரமேரு சதுர்வேதி மங்கலத்துச் சபையாம் இப்பரிசு குறியுள் இருந்து பெருமக்கள் பணிக்கு வியவஸ்தை மத்யஸ்தன்
அ) காடாடிப் போத்தன் சிவகுறி இராஜமல்ல மங்கலப்பிரியனேன்.
குடும்பு ஆட்சியில் குடவோலை முறை குறித்து மேற்கண்ட உத்திரமேரூர் கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இக்கல்வெட்டு இராசராசச் சோழனை தேவேந்திரன் சக்ரவர்த்தி குஞ்சர மல்லன், இராசமல்லன் எனவும் குறித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
குடும்பு வாரியம்
திருப்பாற்கடல் கற்ப்பூரிசுவரர் கர்ப்பகிரக வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தக சோழன் (கி.பி.918 ) காலத்தியது. இது குடும்பு வாரியப் பெருமக்களும்,தோட்ட வாரியப் பெருமக்களும் கழனி வாரியப் பெருமக்களும், ஏரி வாரியப் பெருமக்களும் பெரிய ஏரி மராமத்து செய்தது பற்றிக் குறிப்பிடுகின்றது.
"ஸ்வத்ஸ ஸ்ரீ மாதிரி கொண்ட சேர்ப்பரகேசரி பன்மர்க்குயாண்டு பன்னிரண்டாவது கோட் நாள் நூற்றுருபத்தொன்பது பருவூர்க் கோட்டடத்துக் காவதிப்பாக்கமாகிய அமணி நாராயணச் சதுர்வேதி மங்கலத்து......இவ்வாட்டைக் குடும்பு வாரிய பெருமக்களுந் தொட்ட வாரியப் பெருமக்களும் பட்டர்களும் வசிட்டர்களும் உள்ளிட்ட மகாசபையார் பணியால் இவ்வாண்டு ஏரி ாரிகஞ் செய்கின்ற ஏரிவாரிகப் பெருமக்களோம் சோழ நாட்டுப் பாம்புணிக் கூற்றுத்து அரைசூர் அரை சூருடைய .... ன் தீரன் சென்னிப் பேரரையர் பக்கல் ஒன்பதரை மாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சுப் பொன்னும் எம்மூர் பெரிய ஏரி கரை மண்ணாட்டுகின்ற ஓட நாயன்மார்க்கிடுவதற்க்கு முதலாக கொண்டு இந்நூற்றிருபதின் கழஞ்சு பொன்னாலும் வந்த வர்த்தியாலேய் பாண்டியனும் ஈழத்தரையனும் வந்து பெருமானடிகளோடு வேரூர் அஸ்திகடை செய்த நான்று இச்சென்னிப் பேரையர் சென்ற இடத்துப்பட்ட சேவகர் காரிமங்கலமுடையானுக்கும் வலிக் குட்டிக்கும் பெருநாயகனுக்கும் அழிநிலை மாடம்பிக்கும் ஆக இந்நால்வரையும்."
பள்ளு நூல்களில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளுவில் வடிவழக் குடும்பன் குடும்பு செய்து ஊர் மக்களுக்கு உழைத்த செய்தியைக் கீழ்கண்டவாறு உரைக்கிறது.
செய்யுள் 88
"ஆளுக்கும் பணியாள் - சீவலப்
பேரிக்குள் காணியான் - வில்லென்றும்
அரிப்பிட்டுப் போட்டான் - பள்வரி
தெரிப்பிட்டுக் கோட்டான்
...................................... குடும்பு செய்
தூராருக் குழைத்தான் - அழகர் சொம்
மார்க்கப் பிழைத்தான்"
என்று வடிவழகக் குடும்பன் குடும்பு செய்து ஊர்மக்களுக்காக உழைத்துத் தாழ்வின்றி தானும் பிழைத்த செய்தியை வெளிப்படுத்துகிறது. இங்ங்கனம் குடும்பு என்னும் சொல் ஊர் மக்களுக்கு நன்மை செய்யும் தலிமைப் பதவியைக் குறிக்கிறது.
கி.பி.1891 இல் பதிப்பிக்கப்பட்ட ஆற்றங்கரை சம்சுதான வித்துவான் கடிகை ஐந்கமுத்து புலவர் இயற்றிய பொய்கைப் பள்ளுவில், பொய்கைக் குடும்பன் குடும்பு செய்த வரலாற்றினைக் கூறுவதாகவுள்ள பாடலடிகள் வருமாறு.
செய்யுள் 27
"இன்னமென்று சொல்வேனேன் பள்ளியர் தம் பெருமை
யிதற்க்குமே லதிகமா மியம்பக்கே ளும்
மன்னு திருநெடுமால் கொண்டதும் பள்ளியீசன்
மற்றோர்சேர் வதும்பள்ளி மாநிலமெல்லாம்
பண்ணுந் துலுக்கர்தொழு கையும் பள்ளி வாசல்கல்வி
பயிலு மிடமனைத்தும் பள்ளி யிவற்றால்
தென்னன் சொக்கலிங்கபெத் தண்ணல்பண் ணைக்குடும்பு
செய்யடியேன் குலத்திற் சிறந்தோ னானேன்"
கரையாளப் பள்ளன்
கரையாளப் பள்ளன்
மீன் வகைகளை மீனவ மக்களை விட அதிகம் பேசும், ஆய்ந்து நோக்கும் ஒரே இலக்கியம் 'பள்ளு இலக்கியமே'. (மீன் வகைகளை பேசும் அத்தனை பள்ளு பாடல்களும் விரைவில் இங்கே பின் இணைப்பாக பதிப்பிக்கப் படும்). இவ்வாறாக பள்ளர்களின் வாழ்வியலோடு மீன்கள் நெருக்கமான உறவுடையவைகளாக உள்ளன. ஏனெனில் பள்ளர்களின் வேளாண் தொழிலோடு தொடர்புடையது ஆறு, குளம், கண்மாய், கிணறு முதலிய நீர்நிலைகலாகும். மள்ளர்கள் நெல்லுக்கு நீர் பாய்ச்சும் போது வயல்களில் கயல்கள் விளையாடிய செய்தியை இலக்கியங்கள் பேசக் காணலாம். மருத நிலத்தில் உள்ள நீர் நிலைகளில் தோன்றும் மீன்களைப் பற்றி பாடியவர்கலேல்லாம் பள்ளர்களே. மீன் வகைகளைப் பற்றிய அறிவு பள்ளர்களிடம் இருந்ததென்பதைப் பள்ளுப் பாடல்கள் மூலம் அறியலாம்.(காண்க பின் இணைப்பு). பள்ளர்களே மீனினத்திற்க்குப் பெயர் சூட்டி வகைப்படுத்தியுள்ளனர் என்பதே மெய்மை வரலாறு. இன்றளவும் மருத நிலத்தில் பள்ளர்கள் மீனவர்களாகவும், வாழ்ந்து வருகின்றனர். பள்ளர்களும், பள்ளத்தியரும் குளங்களில் மீன் பிடிப்பதை நடப்பிலும் காணலாம். பள்ளர்களில் பெரும்பாலும் எல்லோரும் நீச்சல் தெரிந்தவர்களாகவும், மீன் பிடிக்கத் தெரிந்தவர்களாகவும், மீன் இறைச்சி உண்பவர்களாகவும் உள்ளனர் என்பது கண்கூடு. மருத நில மக்கள் உழவுத் தொழில் மட்டுமின்றி மீன் பிடிக்கும் தொழிலும் செய்துள்ளனர் என்பதை,
"வானம் வேண்டா வறனில் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோளறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை..." (அகநானூறு 186 : 1 )
என்னும் அகநானூற்றுச் செய்யுலடியின் மூலம் அறியலாம். இதனை அடியொற்றிப் பார்த்தால் பள்ளர்களுக்கும், மீன்களுக்குமான உறவை விளங்கிக் கொள்ளலாம்.
கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திவாகர நிகண்டு, நெய்தல் நில மக்கட் பெயரினைப் பரதர்,நுளையர், கடலர்,வலையர் , சலவர், திமிலர் என்றும், நெய்தல் பெண்டிர் பெயரினை நுளைச்சியர், பரத்தியர், (நுரைக்) கடற்ப்பிணாக்கள் என்றும், நெய்தல் நிலத் தலைவன் பெயரினைக் கொங்கன், துறைவன், மெல்லன், புலம்பன், கடற்சேர்ப்பன் என்றும் இலக்கணபப் படுத்தியுள்ளது. இப்பெயர்கள் நெய்தல் நில மக்களான மீனவர்களின் குலம் சார்ந்தவையாகும். இதில் 'கரையார்' என்னும் மீனவச் சாதி பெயர் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். நெய்தல் நிலத்தில் பறந்து விரிந்து கிடக்கும் கடற்ப்பரப்பில் மீன் பிடிக்கும் மக்களுக்குப் 'பரதவர்' என்னும் பெயர் ஏற்ப்பட்டது. படகில் சென்று மீன் பிடித்தவர்களே படவர் - பரவர் என்றாயினர் எனக் கொள்வோரும் உளர். மருத நிலத்தில் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலும், கண்மாய்க் கரையிலும் இருந்து மீன்பிடிக்கும் பள்ளர்களுக்குக் 'கரையார்' என்னும் பெயர் ஏற்பட்டது.
வேளாண்மைத் தொழிலுக்காக ஆறுகளுக்குக் கரைகண்ட பள்ளர்களே ஆற்றின் மீன்பிடித் தொழிலையும் மேற்கொண்டனர். மருதநிலமே கடை நிலம் எனப்பட்டது. எனவே பள்ளர்களுக்குக் 'கடையர்' என்னும் பெயரேட்பட்டது. அவ்வாறே கரையில் மீன்பிடிக்கக் கூடிய பள்ளர்களுக்குக் 'கரையார்' என்ற பெயர் ஏற்ப்பட்டது. நெய்தல் நில நாகரிகம், மருத நில நாகரிகம் தோன்றியதற்குப் பிறகே தோன்றியதென்பதற்கு, அது எல்லா நாகரிங்கங்களுக்கும் இறுதியில் பேசப் படுவதே சான்றாகும். ஆகக் கட்டுமரங்கள் மூலம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் பழக்கம் மருத நில நாகரிகத்திர்க்குப் பின்னரே ஏற்ப்பட்டிருக்க வேண்டும். பள்ளர்களில் வங்கப் பள்ளர், அழைத்துப் பள்ளர் என்ற வகையினர் தூத்துக்குடிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். வங்கம் என்றால் கப்பல்;கப்பல் கட்டக் கூடிய பள்ளர்கள் வங்கப் பள்ளர்கள் ஆயினர். அளம் என்றால் உப்பளத்தை குறிக்கும். உப்பளத்தில் பணியாற்றும் பள்ளர்கள் 'அளத்துப்பள்ளர்கள்' என்றாயினர். இவாகைப் பள்ளர்களின் முகாமையான தொழில் இன்றளவும் மீன்பிடித்தலேயாகும். வங்கப் பள்ளர், அளத்துப் பள்ளர், கரையாப் பள்ளர் முதலிய பள்ளர் சாதி வகைகள் மருத நிலத்து நெல்லின் மக்களுக்கும், நெய்தல் நிலத்துக் கடலின் மக்களுக்கும் ஓர் இணைப்புப் பாலமாக விளங்கக் காணலாம்.
கரையாளன், ஆற்றங்கரையான், குளத்தங்கரையான் எனக் பெயரிடும் பள்ளர்கள் நடுவே இன்றும் இருந்து வருகிறது. அய்யனார் கோயில்கள் ஆற்றங்கரையிலும், குளத்தங்கரையிலுமே அமைந்திருக்கும். ஐயனாரைக் குல தெய்வமாகப் பள்ளரும், கரையாரும் வழிபட்டு வருவதை கள ஆய்வில் காணமுடிகிறது. இம்மக்களின் இக்குல தெய்வ வழிபாடு - முன்னோர் வழிபாடு பள்ளர்களும், கரையார்களும் ஒரே குலம் என்பதை உறுதி செய்கிறது.
"வீரக் கரையாள ராசாவும்
வீர மார்த்தாண்ட ராசாவும்
அண்ணன் தம்பி இருபேரும்
அசுவத்தில் ஏறலுற்றார்
பாண்டியமார் இருபேரும்
.........................................
நாற்பது வீட்டுப் பள்ளர்களை
நலமுடனே கூட்டிவந்தனர்"
(பேராசிரியர் சு.சண்முக சுந்தரம், ஐந்து கதைப்பாடல், ப.12 ) எனப் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம்(மறவர்) தனது ஐந்து கதைப் பாடல் ஆய்வில் வீரக்கரையாள ராசா, வீரமார்த்தாண்ட ராசா என்னும் பாண்டிய வேந்தர்கள் ஆட்சி செய்த பாண்டிய அரசின் உயிர்நாடியாக விளங்கிய நாற்பது வீட்டுப் பள்ளர்களை அழைத்து வந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்.
தி.நடராசன் தொகுத்த கதைப்பாடல்களில் பள்ளர்களின் வீர வரலாறு பேசப்படுகின்றது. அதில்
"தட்டானென்கின்ற கொட்டாப்புளி
சமர்த்தனுக் கொரு கையோலை
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாதனுக்கு மொரு கையோலை
ஆயிரத்து ஐநூறு ராணைவத்தாரும்
அன்புடன் வந்தார் பாஞ்சாலத்தில்"
.....................................................
"வடுகத் தட்டானொருவன்
வாசம் பெற்ற கொட்டாப்புளி
பள்ளக் குடும்பன் கரையாளன்
பாயும் புலிபோல பள்ளர்களும்
எல்லோரும் கூடி அளப்புகள் பேசி
யெட்டு நாளைக் குள்ளாக
பாளையங் கோட்டையில் வைத்து
நம்மாளை பட்டமும் கட்டியே
வைக்க வேண்டும்"
மேற்கண்ட கதைப்பாடல் பள்ளர் படைத் தலைவன் ஒருவனை 'பள்ளக் குடும்பன் கரையாளன்' என்கிறது. யாழ்ப்பாணத்திலும் ஐயனார் வழிபாடும், அண்ணமார் வழிபாடும் பள்ளருக்கும், கரையாருக்கும் உரியதாக விளங்கக் காணலாம்.
சுப்பிரமணிய நாவலரால் இயற்றப்பட்ட திருவேட்டைநல்லூர் அய்யனார் பள்ளு செய்யுள் 44 இல் இடம் பெற்றுள்ள மலைக்குரிய தெய்வமான வானவனை - இந்திரனை மீனவன் எனக் குறிக்கும் அடிகள் வருமாறு:
"மீனவன்செந் திருவேட்டை வானவன் நல்லூர்செழிக்க
வேணமழை பெய்யும் நாளை காணும் பள்ளீரே"
திருநெல்வேலி மாவட்டம், நாஞ்சான்குளத்தில் பள்ளர்கள் தங்களின் குல தெய்வமாக 'மாசானக் கரையான்' என்னும் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், மானூர் பள்ளர் -ஆசாரிமார் செப்பேட்டில் அக்கசாளைக் குடும்பர்களில்
"அஞ்ஞப் பள்ளு, அச்சைப் பள்ளு, மங்கல நாட்டுப் பள்ளு, கோத்திரப் பள்ளு, பட்டனக்கரைப் பள்ளு" என்பதில் கரையார் என்ற பள்ளர் பிரிவும் இடம்பெறக் காணலாம். தவிர, அணைக்கரையார், காலான்கரையார், அக்கரைகண்டார், பாலக்கரைநாட்டார் உள்ளிட்ட பள்ளர் சாதி வகைகளும் இவ்விடத்தே நினைத்தற்கு உரியனவாகும்.
பட்டினக் கரையார் - பள்ளருள் ஒரு வகையினர் (Pattinak Karaiyar - A sub-divisioin of the pallar caste) என்கிறது. சென்னைப் பல்கலைக் கழக வெளியீடான 'தமிழ் லெக்சிகன்' அகராதி பக்கம் 346 . பட்டினம் என்றால் கடற்கரை ஊர் என்று பொருள்.
இப்பட்டினக்கரையார் என்னும் பள்ளர்களில் ஒரு சாரார் மீன், கருவாடு, உப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தோடு முத்துக் குளித்தலில் கிடைத்த முத்துகளை விற்பனை செய்யும் பொருட்டு, இவர்தம் வணிக வளர்ச்சி கடல்கடந்து சென்றது. பின்னர் பல்பொருள் வணிகத்தில் இறங்கிய இவர்கள் பொருளியல் மேம்பாடு அடைந்து அதனை அடியொற்றியே தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினையை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குமுகமாகவே உருவெடுத்தனர். இவர்களே இன்று நகரத்தார்களாக - நாட்டு கோட்டைச் செட்டியார்களாக அறியப் படுகின்றனர். பள்ளருக்கும் கரையாருக்கும் குல தெய்வமாக விளங்கும் ஐயனாரே நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கு குல தெய்வமாகும். பின்னாளில் வணிகத்தில் ஈடுபட்ட பல்வேறு சாதிக் குழுக்களும் நரகத்தார்களாக நாட்டுக் கோட்டைச் செட்டியார்களாக உருவெடுத்தனர்.
மள்ளர் என்பது ஒரு குலம்
மள்ளர் என்பது ஒரு குலம்
மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர் - தேவேந்திரன் எல்லாம் ஒன்றே,ஒருவரே
மள்ளர் என்பது மருத நில மக்களின் மரபுப் பெயர் என்பதையோ, மள்ளரும் மல்லரும் ஒன்று என்பதையோ, இம்மள்ளர் - மல்லரே இன்றையப் பள்ளர் என வழங்கப்படுகின்றனர் என்பதையோ இதுகாறும் தமிழர் வரலாற்றினை எழுத முனைந்த எந்தவொரு வரலாற்றாளர்களும் வெளிப்படுத்த விரும்பவில்லை. மாறாக, உண்மைத் தமிழரின் தொன்மை வரலாற்றினை இருட்டடிப்புச் செய்வதில் இவ்வரலாற்றளார்கள் இறங்கியுள்ளனர். இதனால் தான் இதுவரையிலும் மூத்த தமிழ்குடி மக்களின் மூல வரலாறு மூடி மறைக்கப் பட்டே வந்துள்ளது. தமிழக வரலாற்றளார்கள் மள்ளர் / மல்லர் என்றால் 'வீரர்' என்று வெறுமனேப் பொருள் கூறி மழுப்பியுள்ளனர். மள்ளர் - மல்லர் என்பது ஒரு குலம் என்பதை இவர்கள் எடுத்துரைக்கத் தவறி விட்டனர்.
இலக்கியச் சான்றுகள்
- கம்பராமாயணம்
பால காண்டம் - ஆற்றுப் படலம்
கம்பன் காட்டும் மள்ளர் குலம்
செய்யுள் 18
நாட்டைக் காக்கும் மள்ளர் குலம்
"காத்தகால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச்
சேர்த்த நீர்த்திவலை, பொன்னும், முத்தமும் திரையின் வீசி,
நீத்தம் ஆன்று , அலைய ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு
கொத்தகால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே"
உழவர் குடியினராகிய மள்ளர் குலத்தார் வாய்க்கால்களில் நீர் வருதலை எதிர்நோக்கிக் காத்து நிற்றலைக் குறிக்கும், மகிழ்வை வெளிப்படுத்தும் ஆரவாரப் பறை முழங்க, திரண்ட நீர்த்தி வலைகள் பொன்னும் முத்துமாய் அலைகளால் தெளிக்கப் பட்டு, நிலத்தினைக் கிழித்துக் கொண்டு நீண்ட கோத்த கால்வாய், மள்ளர் குலத்தார் எப்படிப் பல கிளைகளாகப் பாண்டியர் குடி, சோழர் குடி, சேரர் குடி எனப் பிரிந்து சென்று மண்ணையும், மக்களையும் கத்துச் செழிப்பாக ஆள்வதைப் போல் பல கிளைகளாக வாய்க்கால்கள் பிரிந்து சென்று வயல்களை விளைவித்ததைக் கூறும் கம்பராமாயணம் மள்ளர் என்பதை ஒரு குலம் எனக் குறிப்பிடுகிறது.
பால காண்டம் - நாட்டுப் படலம்
செய்யுள் 32
குன்றுடைக் குல மள்ளர்
"கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன்தொடர் படுக்கும், வன வாரி சூழ்
குடுடைக் குல மள்ளர் குழுஉக் குரல்
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே"
குட்டிகளையுடைய பெண் யானைகள் விட்டு விட்டுச் சுர்ரித்திர்யும் ஆண் யானைகளின் வட்டங்கள், வலிய சங்கிலியால் பிடித்துக் கட்டப்படுகின்ற காட்டாறுகளும், ஓடைகளும் சூழ்ந்துள்ள குன்றுகளுக்கு உரிமை உடையவர்களான மள்ளர் குலத்தாரின் கூட்டங்களில் இருந்து எழும்புகின்ற ஆரவார ஒளியானது, இனிய பெட்டிகளுடன் களிக்கின்ற ஆண் அன்னங்களை நிலைகெட்டு ஓடச் செய்வதாகக் கூறும் மேற்கண்ட செய்யுளடிகள் மள்ளர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது.
யுத்த காண்டம் - வானரர் களம் காண் படலம்
செய்யுள் 25
உயிரிழந்து கிடக்கும் அரக்கர் சேனை குறித்த வீடணன் கூறுதல்
"நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கடும் பரம்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடுங் கமலா மலர் நாறும் முடி பரந்த
பெருங் கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனக் பொலியும் தகையும் காண்மின்"
நீண்ட வாட்படையாகிய ஏர்க் கலப்பையினால் உழுகின்ற மனிதச் சதைகளாகிய சேற்றில் குருதி நிறைந்த நீர்த் தேக்கத்தினையும், விரைவுடன் கூடிய வேழங்கலாகிய எருமைக் கடாக்கள் படிந்து தோயப் பெற்றதாகி வேகமாகப் பரவுதலுடைய மள்ளர் இனத்தார் கூடிப் பரம்படிக்கும் கையில்படும் தாமரை மலரின் நறுமணம் கமழ்கின்ற தலைகளாகிய நாற்று முடிகள் பரவிக் கிடந்த பெரிய அந்தப் போர்க்களம் பரந்து விரிந்த பெரிய வயல்வெளிகளைக் கொண்ட மருத நிலத்தின் தன்மையை ஒத்தது போல் விளங்குகின்றதைப் பாருங்கள் எனக் கூறும் மேற்கண்ட செய்யுள் என்பது ஒரு இனம் என எடுத்துரைக்கின்றது. இங்கனம் மல்லர்களை 'இனம்' எனக் குறிப்பது இவர்களே தமிழர்கள் எனப் பொருட்டாகும்.
- முக்கூடற் பள்ளு
இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காலம் கி.பி.1670 .
செய்யுள் 12
மள்ளர் குலமே பள்ளர் குலம்
"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க் கோர்
பள்ளக் கணவன் எனின் பாவனைவே றாகாதோ
கள்ளப்புள் வாய்கிழித்த காரழகர் முக்கூடல்
கொள்ளத் தமுது குடித்தரங்கள் கூறினரே"
மள்ளர் என்பது ஒரு குலம் என்பதையும், அம்மள்ளர் குலமே பள்ளர் குலம் என்பதையும் முக்கூடற் பள்ளு அடிகள் தீர்க்கமுடன் தெளிவுபடுத்துகின்றன.
=> மள்ளர் - மல்லர் ஒருவரே: தொல்லியல் அறிஞர்களின் கருத்து
முனைவர் நடன.காசிநாதன்
மள்ளர்களைப் போன்றே 'மல்லர்' என்பாரும் மருத நில மக்களே ஆவர். தொல்காப்பியம் 'மல்லல் வளனே' எனக் கூறுகிறது. ஆதனால் 'மல்லன்' என்போர் வளமுடையவர் என்று போருல்படுவர். மள்ளர்களில் பொருள் மிகுதியாகப் பெற்றிருந்தாரும், தலைவன் தகுதி பெற்றாரும் 'மல்லர்' என்று அழைக்கப் பெற்றனர். 'மல்லன் பேரூர்' என்று பெரும்பாணாற்றுப் படையும், மாடமோங்கிய 'மல்லன் மூதூர்' என்று நெடுநல் வாடையும் சுட்டுகின்றன. சங்க காலத்தில் வேளாண் தொழிலிலின்றும் விலகி மள்ளர் போர் வீரர்களாகவும், மல்லர் வேளாண் குடி மக்களின் தலைவராகவும் காவலராகவும் விளங்கி இருந்தனர் என்பது புலப்படுகிறது" என்கிறார் தமிழ்நாடு அரசின் மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நடன.காசிநாதன்.
முனைவர் இரா.நாகசாமி
'மல்' என்ற சொல்லிற்குச் 'செல்வம்' என்று பொருள். 'மல்லை' என்ற சொல்லிற்கு 'செல்வம் மிகுதியானது' என்று பொருள். இதற்குத் 'திண்ணம்' என்ற பொருளும் உண்டு. 'வலிமை' 'வளப்பம்' என்கிற பொருட்களும் உண்டு. இவ்வாறாக 'மல்' என்ற சொல்லிற்கு வளம்,வளமை,திண்ணம் - உறுதியான - வலிமையான,செல்வம், செழுமை என்ற பொருட்கள் உண்டு இதனை Lexican , Dravidan Etimolagy Dictionary முதலிய அகராதிகள் மூலம் அறியலாம். இதே பொருளை 'மள்' என சொல்லிற்கு பார்க்கலாம். 'மள்ளர்' என்பதற்கு திண்மை, செழுமை, என்று பொருள். மள்ளர் என்றால் உழுபகடு உறப்புவார். செல்வம் என்றால் என்ன? பயிரினால் வருவது செல்வம்; போர் புரிபவர்களுக்கும் மள்ளர் என்ற பெயர் உண்டு. மல் - மல்லர், மள் - மள்ளர் இரண்டிற்கும் ஒன்று போல் பொருள் வருகின்ற கரணியத்தால், சில இடங்களில் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இஃது எனது முடிவான கருத்து. மல்லர் என்றாலும், மள்ளர் என்றாலும் ஒரு பொருள் உண்டு. வேறு பொருளும் உண்டு. அந்த இடத்திற்கு தக்கவாறு சொல்லின் பொருள் மாறுபடும். 'பள் ' என்ற சொல்லிற்கு 'பள்ளம் செய்தல்' என்று பொருள். எந்த வேளாண் செயல்பாடுகளாக இருந்தாலும் 'பயிர் செய்தல்' என்று வந்தால் வரப்பு எடுத்து நீர் தேங்க அந்தப் பள்ளத்தின் அடிப்படையில் இருப்பதாலே 'பள்' என்றால் 'பள்ளர்' என்று பொருள் சொகிறார்கள்.
ஆதலால் பயிர் செய்து வளத்தைப் பெருக்கி, செல்வத்தைத் திரட்டியவர்களுக்கு 'பள்ளர்' என்று பெயர் வந்தது. அதாவது இம்மக்கள் தொழிலில் இருந்து நிறைவான செல்வத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனால் மருத நிலத்தில் வாழும் பள்ளர்கள் பிற குலத்தாருக்கு உணவூட்டியவர்களாவர். ஆதலால் 'பள்ளம்' செய்து செல்வத்தைப் பெருக்குகிறவர்கள் 'பள்ளர்கள்' என்றாயினர் என்று மேனாள் தொல்லியல்துறை இயக்குநர் இரா.நாகசாமி தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மல்லர் - மள்ளர் - பள்ளர் என்பது எல்லாம் ஒரே பொருள் தரும் சொற்கள் மட்டுமின்றி மருத நிலக் குடியினரை மட்டும் குறிக்கும் குறியீட்டுக் குல மரபுப் பெயர் சொற்கள் என்பதும் எளிதில் விளங்கும்.
=> மல்லர் - மள்ளர் - பள்ளர் - குடும்பர்
ஒன்றென உரைக்கும் சான்றுகள்
அனுமனேரிச் செப்பேடு
"ரெகுநாத காவேரிக்குத் தெற்கு மல்லர் திருமேனிக் குடும்பன் புஞ்செய்கு மேற்கு பொடுகட்டியூரணிக்கு வடக்கு" நில அளவையின் போது, அருகாமைந்த நில உரிமையாளரின் பெயரினைப் பதிவு செய்யும் மேற்கண்ட செப்பேடு 'மல்லர் திருமேனிக் குடும்பன்' எனக் குறிக்கிறது. இதனால் குடும்பர்கள் 'மல்லர் குலத்தவர்' என்பது மெய்ப்படுகிறது.
மதுரை மாவட்ட நில ஆவணம்
நில ஆவணத்தின்.... '1952 - ம் வருஷம் ஜனவரி மாதம் 9 -ஆம் தேதிக்கு தமிழ் கர வருஷம் மார்கழி மாதம் 25 - ம் தேதி மதுரை தாலுகா வண்டியூர் கிராமத்திலிருக்கும் இருளப்பக் குடும்பன் குமாரத்தி பள்ளர் சுகவாசி அரசாய் அம்மாளுக்கு மேலூர் தாலுகா, ஜாரி ஆமூர் கிராமம், மஜரா தெற்கிலாமூரிக்கும் மல்லர் குடும்பன் குமாரர் பள்ளர் விவசாயம் ஆளப்பன் எழுதி வைத்த செட்டில்மென்ட்...." எனக் குறிப்பிடுகின்றது.
செண்பகராமன் பள்ளு
இளைய பள்ளி வருந்தல்
"மல்லார் சேர் நாஞ்சிநாட்டுப் பள்ளி - மூத்த பள்ளி
வன்மத்தைக் கண்டாயோ பள்ளா
இல்லாத களவெல்லாம் சுமத்தி - யுன் தலையில்
ஏற்றியே மரத்திலிடு வித்தாள்
கொள்ளாமல் கொல்லவல்லோதுணிந்தாள் - பண்ணைக்காரக்
கூதற நயினாரு மதுதன்
னுல்லாரும் பெண்ணேபெண் என்றால் - நானுமிதுக்
கென்செய்வேன் பகவதிக் குடும்பா"
மரத்தில் அடிக்கப் பட்ட பள்ளனிடம் இளைய பள்ளி சென்று உன்மேல் இல்லாத களவெல்லாம் மூத்த பள்ளி சுமத்தி உன்னை மரத்திலடிக்கச் செய்தான். இதற்க்கு நான் என்னசெய்வேன் என்று வருந்துகிறாள்.
எட்டையபுரப் பள்ளு
செய்யுள் 146
"யிப்படிக் கூடிய நாள்நல்ல நாள் மல்லர் யாரும் வயல்
ஏரிடச் சாத்திகம் நேரிடச் சீக்கிரம் வாருஞ்
செப்பினேனென்று மனப்பிரியமாகவே நடந்தான் மள்ளர்
சேரத்திரண்ட பின்பு கூர்க்குடும்பன் பின்றுடர்ந்தார்
காகம் வலம்பாயக் கருடனிடம் பாயக் கண்டார் சிலைக்
காமன் குமாரயெட்டசாமி யோகமென்று கொண்டார்
வாகன கருடனுமாகாசம் வட்டமிட்டாடவே பள்ளர்
வந்தபேர்க ளெல்லாஞ் சிந்தை மகிழ்ந்து கொண்டாடவே..."
தென்னிசைப் பள்ளு மருத நில மக்களை மல்லர்,மள்ளர், குடும்பன், பள்ளர் எனக் குறிக்கிறது. மல்லர் / மள்ளர் என்பது ஒன்றே! யாவரே இன்றையப் பள்ளர்! குடும்பன் என்னும் குலப்பட்டம் இவர்களுக்குரியதே என்பதற்கு மேற்கண்ட பள்ளு மறுக்கவொண்ணாச் சான்றாக திகழ்கிறது.
"தொண்டையர் கோன் மண் மல்லகுல வரையால் நூற்றுக்கால் மண்டபத் தேணி" என்று சிதம்பரம் நடராசர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6 எண்.225 , வரி.14 -15 ), "ஆகோ மல்ல குல கால வாய்க்காலுக்கு வடக்கு" என்று மன்னார்குடி சயங்கொண்டநாதர் கோயில் கல்வெட்டும் (தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி - 6/37 ) மல்லர் என்பது ஒரு குலம் என்பதைக் குறிப்பிடுகிறது. கதிர்வேற் பிள்ளையின் மொழியகராதி 91 சாதிகளில் 'மல்லர்' சாதியையும் குறிப்பிடும். இதனூடாக மல்லர் / மள்ளர் என்பது பள்ளர் குல மக்களைக் குறிக்கவே கையாளப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
=> பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே
காஞ்சி காமாட்சியம்மன் கோயில்செப்புப் பட்டயம் - செப்பேடு
இப்பட்டயத்தில் பள்ளர்களில் நான்கு பேர்களும், படையாச்சிகளில் ஐந்து பேர்களும், முதலியார்களும் நான்கு பேர்களும், செட்டியார்களில் மூன்று பேர்களும், கொசாங்கிப் பகடைகளில் ஒருவரும், நாயக்கரில் ஒருவரும் ஆகா 23 பேர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பட்டயத்தின் காலம்
"சுபத்திய விசய சாலிவாகன சகாப்தம் 1223 கலியுக சகாப்தம் 4401 பிரவ ஜென்ம ஷரம் .... இதற்கு மேல் செல்ல நின்ற சருவதாரி வருஷம் வைகாசி மாதம் 11 தேதி சுக்கிர வாரமும், பூர்வ பட்சத்து பஜமியும், பூச நட்சத்திரமும், சுப நாம யோகமும், பாலவா கருணமும், பெற்ற சுபதினத்தில் செப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்த விபரம்".
தேவேந்திரர் மெய்க்கீர்த்தி
"தேவேந்திரப் பள்ளரில் வெள்ளானை வேந்தன் மிக விருது பெற்றவன். சேத்துக்கால் சென்னன், சென்னல் முடிக்காவலன், தேவேந்திர வர புத்திரன், மண் வெட்டி கொண்டு மலையை கடைந்த கண்ணன், வெள்ளானை கொடி படைத்தவன், வெள்ளக் குடை, முத்துக்குடை, பஞ்சவர்ண குடை, முகில் கொடி, புலிக் கொடி, அழகுக் கடை படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் தேவேந்திரப் பள்ளன்"
விருது பெற்ற தேவேந்திரர்கள்
"காஞ்சிபுரத்துப் பண்ணாடி, சின்னக் காஞ்சிபுரம் நாகப் பண்ணாடி, சர்வதீரத்து வீதி முத்துப் பன்னாடியும், செஞ்சி நகரம் அரசப் பன்னாடியும், தஞ்சாவூர் சீரங்க மூப்பன். திருச்சிராப்பள்ளி மூக்க மூப்பன், திருவெங்கிமலை நயினார்க் குடும்பன் மதுரை நாராயணக் குடும்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் காந்திமதி காலாடி, திருச்செங்கோடு பழனிப் பன்னாடியும் தேவேந்திர கூட்டத்தின் பெரியோர்களாகும்."
சிவகங்கைக் குடும்பர்கள் செப்பேடு
இப்பட்டயம் எழுத்தப் பட்ட ஆண்டு கி.பி.1752 ஆகும். வரி.96 - 107
தேவேந்திரர் சிறப்புகள் - அவை கூடுதல்
"வெள்ளாண்மை யுலகில் வியணப்பேற் விளைய வள்ளல் தெய்வேந்திரன் வர்சையா யனுப்ப வெள்ளானை மீதில் விரைவகை முளுதுயர் தெள்ளிய புகன் சேர் சேறாடிக் குடையும்ஞ் செகத்தில்க் கொணர்ந்த தேவேந்திரக் குடும்பர் சேத்துக்கால்ச் செலவரான குடும்பர்களும், அமராபதிகளும், அளகாபுரிக்கும், நிகரைச் சிரஞ்சீவிப் பதியான் சிவகெங்கைத் திருக்குளத்தங் கரையில்ச் சீவற்னயீசுவரன் பெரியனாயகி சன்னதியில் நிறைவுற நிறைந்து குறைவறக் கூடிக் கீள்திசை மேல்திசை வட திசை தென் திசையிலும் உள்ள உறவின் முறையாரையும், குடும்பர்களையுங் கூட்டஞ் செய்து..." என்கிறது.
மல்லிக் குந்தம் செப்புப் பட்டயம்
காலம் கி.பி.1701 . அடி 52 - 55
"மஞ்சப்பாவாடை யுடையவர் தேவேந்திரப் பள்ளன் வெள்ளைகொடை வெள்ளை வெண்சாமரமுடையவர் விருது கோங்கி பூதக் கொடியுடையவர் இவர்களுக்கெல்லாம் தலைகட்கு க.னுலை ம் முக்குருணி அரிசியும், கொடுக்க வேண்டியது" என்கிறது.
இங்கனம் செப்புப் பட்டயங்களின் வாயிலாகவும் பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் அனைவரும் ஒருவரே என அறியலாம்.
(விரைவில் இங்கே பிரசுரிக்கப்படும்: பள்ளன் - குடும்பன் - தேவேந்திரன் ஒன்ருவரே என்று ஓதும் பள்ளுப் பாடல்கள்)
பள்ளரே பாண்டிய மரபினர்
பள்ளரே பாண்டிய மரபினர்
பேராசிரியர். சு. சண்முக சுந்தரம் (மறவர்)
இவர் 'ஐந்து கதைப் பாடல்' என்ற நூலில் கள்ளரும், மறவரும் 'பாண்டியர் மரபினர்' அல்லர் என்றும், இவர்கள் பாண்டிய அரசிற்கு பகை ஆற்றலாகவே விளங்கி வந்தனர் என்றும், 'பள்ளர்களே பாண்டியருக்கு துணையாய் இருந்து வந்தனர்' என்றும் கண்டுள்ளார். அந்த கதைப் பாடல்களில் சில பாடலடிகளை இங்கே காண்போம்:
"கள்ளநாட்டார் ஒன்று கூடி
களவு செய்ய புறப்பட்டார்கள்"
...........................................
"தென்னாடு போகணுமே
தீவட்டிக் கொல்லைப் போடணுமே
கன்னக்கோல் ஆக்கணுமே
கையருவாள் வல்லயமும்
குத்துகம்பு வல்லையமும்
கொடுக்கருவாள் சமுதாடும்
பூட்டை மெல்ல முறிக்கணுமே
போய் களவு செய்யணுமே
கன்னமது போட வேண்டும்
களவு செய்து திரும்ப வேண்டும்
பதிமூன்று பேர் கள்ள நாட்டார்
பக்குவமாய் புறப்பட்டார்கள்"
.............................................
"களவுக்குத் தலைவன் அண்ணே
கருப்புசாமி வந்தேன் அண்ணே
காஞ்சிபுரம் கருப்பநென்றால்
கடவுளுக்கும் அஞ்சமாட்டான்"
..........................................
"களவு செய்ய இடமுமில்லை
கன்னம் போட வழியுமில்லை
இரும்பு ஊசி களவு போனால்
ஏற்ற தங்க ஊசி வாங்கிடுவேன்
ஆனால் ஒரு துப்பதுதான்
அருமையுடன் சொல்லக்கேளும்
கோபாலசமுத்திரத்தில்
குடியிருக்கார் குடும்பக்கமார்
நாகநல்ல குடும்பனென்றும்
கனக நல்ல குடும்பனென்றும்
பள்ளருட தாவளத்தில்
பணம் அதிகம் இருக்குதய்யா
ஏழுகிடாரத் திராவியந்தான்
இருக்குதய்யா அங்கேதான்
ஆயக்காலில் தொங்குதய்யா"
................................................
"கண்டார்கள் கட்டிடத்தை
கல்லறைத்தான் துளைக்கும்
கன்னக்கோலை எடுத்தார்கள்
செங்கல்லைத் துளைக்கும்
சிறு ஆக்கரவைத்தான் எடுத்தார்
அத்தசாம நேரத்தில்
ஆளரவம் இல்லா வேளையிலே
கன்னமது போடலுற்றார்
கதவுகளைத்தான் திறந்தார்
கீழ்த்தாளை மேல்த்தாளை
கிருபையுடன் துறக்கலுற்றார்
வெண்கலக் கதவுதன்னை
வேகமுடன் திறக்கலுற்றார்
தங்க நல்ல களஞ்சியத்தைத்
தான் பார்த்தார் கள்ளநாட்டார்"
....................................................
"கள்ளருக்குத் தலைவன் தானே
கருப்பசாமி தேவராவார் --
'கலங்காதிங்கோ மயங்காதிங்கோ
காவலுக்கு ஒருவரில்லை' என
ஏழு கிடாரத் திரவியத்தை
ஏகமுடன் வாரலுற்றார்
வயிரங்களும் முத்துக்களும்
வாரி வாரி கட்டலுற்றார்'
..............................................
"குலவைச் சத்தம் காதில் கேட்டார்
குழந்த மெச்சும் பெருமாள் பாண்டியனும்
வண்ணாத்தி வீடு விட்டு
வாராரே பாண்டியரும்
காச்சிநாயும் பூச்சிநாயும்
கடுமையுட வருதய்யா
கள்ளருட குலவை சத்தம்
காச்சி நாயும் கேட்டிடுமாம்
வீமானென்ற நாயுதுதான்
துள்ளி ஓடி வருதய்யா
நாயுடனே பின் தொடர்ந்தார்
நலமான பாண்டியரும்"
...................................................
"தொட்டிபாலம் தான் கடந்து
துளசிமாடம் தான் கடந்து
தாம்பிற வன்னிதான் கடந்து
தானே பாளையங்காலும் கடந்து
நாகக் குடும்பனுட வளவதிலே
நலமான பாண்டியரும்
பள்ளர்களை எழுப்பியல்லோ
பாண்டியரும் ஏது சொல்வார்
கனகக் குடும்பா நீ கேளு
களஞ்சியங்கள் எங்கே போச்சி
நாகக் குடும்பா எனது
நாட்டாண்மை எங்கே போச்சி
ஏழுகிடாரத் திரவியந்தான்
இருக்குதோ பாருமென்றார்
பூமியிலே போட்டிருந்தால்
பூதங்க்கொண்டு போகுமென்று
ஆயக்கால் போட்டு வைத்தாய்
அருமையான திரவியத்தை
வடநாட்டு கள்ளர் வந்து
வாரிக் கொண்டு போய்விட்டார்
கருங்காட்டு ஊரதிலே
கண்டேனே கள்ளர்களை
ஓடவிட்டு தலையறுத்தேன்
உங்கள் திரவியத்தை நான் காத்தேன்"
கள்ளரும்,மறவரும் பாண்டிய நாட்டின் பகைக் கூட்டத்தினர் என்பதுவும், குடும்பர் குலப்பட்டம் கொண்ட பள்ளர்களே பாண்டியர்களின் உறவினரும், மரபினரும் ஆவர் என்பதுவும் மேற்கண்ட கதைப்பாடல் ஆய்வுகள் கண்டு காட்டும் உண்மையாகும்.
தஞ்சைப் பகுதியை சேர்ந்த கள்ளர் மரபினரில் சிலர் தங்களை சோழர் பரம்பரையினர் என்றும், இராசராச சோழனின் வழி வந்தவர்கள் என்றும் அண்மைக் காலங்களில் உரிமை பாராட்டி வருகின்றனர். ஆனால் அவர்களின் வரலாறோ, அரச மரபிற்கும், குடிமக்களுக்கும் நேர் எதிராக உள்ளது குறிப்பிடத் தக்கது.
மள்ளர் - குடும்பர் ஒன்றே!
மள்ளர் - குடும்பர் ஒன்றென
உரைக்கும் பள்ளுப்பாடல்கள்
வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் வழங்கிவந்த வேளாண்குடி மக்களின் வேறுபட்ட பெயர்கள் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை உணர்த்தி, மள்ளர்களின் நீண்டதோர் வரலாற்றுத் தொடர்ச்சியினை இணைத்தும், பிணைத்தும் பள்ளுப் பாடல்களே தெளிவுற்றுகின்றன. மள்ளர் குலத்தவரின் குலப்பட்டமே குடும்பர் என்பது குறித்துக் கூறும் பள்ளுப் பாடல்கள் சிலவற்றை இங்கே காட்டாகக் காண்போம்.
- சாமிநாதப் பள்ளு
இயற்றியவர் சிவபெருமாள் கவி.
செய்யுள் 10
"பெருக்கமிடும் பண்ணைதனைக் காவியத்தியாய்
வந்த மள்ளன் பிரபலமோங்கு
திருக்குலவு வீராச்சிமங்கை நகரக் குடும்பன்
வந்த திரஞ் சொல்வோமே"
அடர்ந்த கருங்கொண்டையை முடிந்து, மீசையை நன்றாக முறுக்கு, உருமாலையை இறுக்கிக் கட்டி, வண்ணச் சோமனை இடையிற்கட்டி, சோமபானம் அருந்தி, தென்கரை நாட்டில் பெரும் புகழ் பெற்ற குடும்பனார் வரவை, அவர்தம் குடியினரான மள்ளர்கள் புகழ்ந்ததாக மேற்க்கண பள்ளு அடிகள் பரப்புரை செய்கின்றன.
- எட்டையபுரப் பள்ளு
இயற்றியவர் முத்துப் புலவர்
செய்யுள் 37
"வாய்ந்த ராமனூற்றுப் பண்ணை
மள்ளர் கட்டிய வெள்ளை காளையைப்
பேய்த்தண்ணீர் வெறியாலே கொம்பை
யுயர்த்திப் பிடிப்பாராம்
குருமலை தனில் வாழும் கெச்சிலாக்
குடும்பன் கட்டிய யிடும்புக் காளையை
மறுவிலாத தென்னிசைக் குடும்பன்
வளைத்து பிடிக்கவே...."
செய்யுள் 41
"நெஞ்சூ டெருதுகுத்தும் நீள்காயாத்தாற் காய்ந்தே
தொஞ்சே மயங்கி மதிசோர்ந்திருக்கும் வேளைதன்னில்
மஞ்சாடும் பூங்கூந்தல் மள்ளியர்கள் வாய்மொழியோர்
சஞ்சீவிக் குடும்பன் தானெழுந்து கொண்டானே...."
தென்னிசைப் பள்ளு அடிகள் மள்ளரும் குடும்பரும் ஒன்றென்பதைத் தீர்க்கமுடன் தெளிவுறுத்துகின்றன. இதில் முதற் செய்யுளில் இடம் பெற்றுள்ள 'கெச்சிலாக் குடும்பன்' நினைவாகவே 'கெச்சிலாபுரம்' என்ற ஊர்ப்பெயர் ஏற்ப்பட்டுள்ளது. 'கெச்சிலாபுரம்' என்ற பெயரில் கோயில்பட்டி அருகே ஓர் ஊரும், கழுகுமலை அருகே ஓர் ஊரும் உள்ளன.
- தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு
"புள்ளியுரு மாலுங்கட்டி மள்ளியர்தமைப் பகட்டிப்
போதவே சிலப்பங் கையில் வாணத்தடியுந்த்
துள்ளிய வீசி முருக்கி வொள்ளிய கச்சை யிருக்கித்
தொட்டு விளிக்குஞ் சபாது பொட்டது மிட்டு
வள்ளல் பழனியப் பேந்திரன் பண்ணை வளம்பார்க்கிறான்
மைந்தன் உடையக் குடும்பன் வந்து தோன்றினானே...."
மேற்கண்ட பள்ளு அடிகளும் மள்ளர் - குடும்பர் ஒன்றென்பதை உணர்த்துகிறது.
- பொய்கைப் பள்ளு
இயற்றியவர் கடிகை அங்கமுத்துப் புலவர், காலம் கி.பி. 1891
செய்யுள் 25
"குடும்பனென்ப துயர்ந்தசாதி யானல்ல வென்பர்
குடும்ப நுயர்ச்சியினைக் கூறவெளி தோ
நெடுங்கடற் புவியுள் ளோரவரவர் குலத்துக்கு
நிகழ்த்துந் தலைமையுள் ளோனே குடும்பனாம்
திடஞ்சேர் மறையோராதி குலசிரேட் டருங்கெல்லாத்
சேர்ந்திருக்கு மேன்பெயர் தெரியு மீது
தடம்புயன் சொக்கலிங்கப் பெத்தண்ணல் பண்ணை மள்ளச்
சாதிக் குடும்பனேன்னைத் தள்ளலரிதே ..."
மேற்கண்ட பள்ளு குடும்பர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை உணர்த்துவதோடு 'மள்ள சாதிக் குடும்பன்' என்ற சொற்றொடரின் ஊடாக மள்ளரும், குடும்பரும் ஒன்றென்பதை விளக்கி உரைக்கின்றது.
செய்யுள் 119
"எண்டிசையும் போற்றுசொக்க லிங்கபெத்த னேந்திரதுரை
மண்டலங்கொண் டாடுபண்ணை மள்ளிமூத் தாள்சாடி
விண்டகன்ற பின் குடும்பன் மிகக்கிடை வைத்துவயல்
கண்டுவந்தான் போலவொரு கணத்தினில் வந்துற்றானே .."
மேற்கண்ட பள்ளு மூத்த பள்ளியை மள்ளிமூத்தாள் என்றும் பள்ளியின் கணவனை 'குடும்பன்' எனவும் குறிக்கின்றது.
மள்ளர் - பள்ளர் ஒன்றே!
மள்ளர் - பள்ளர் ஒன்றென ஓதும் பள்ளிசை
இன்று வாழ்கின்ற பள்ளர்களே இலக்கியங்கள் புகழ்கின்ற மள்ளர்கள் என்பதற்குப் பல்வேறு வரலாற்று அறிஞர்களும், மொழியியல் அறிஞர்களும், தங்களின் விளக்கங்களோடு கூடிய கருதுகோளை முன்வைத்த போதிலும் , பள்ளர்களே மள்ளர்கள் என்பதற்கு மறுக்கவென்னாச் சான்றுகளைப் பள்ளுப் பாடல்களே அதன் பாடலடிகளின் ஊடாகப் பதிய வைத்துள்ளன. அது குறித்துச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.
- செங்கோட்டுப் பள்ளு
இயற்றியவர் பொன்னுச் செல்லையா, காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
செய்யுள் 197
"பள்ளனும்பள் ளியருடனே வந்து போற்றப்
பண்ணையினார் கோல்காரன் தனையும் பார்த்து
உள்ளமகிழ்த் திவூரில் பள்ளர் பள்ளி
ஒருவரிலா மற்படியிங் கழையும் என்ன
வள்ளல்மொழி கேட்டவன்போய் அளித்த பின்பு
வழமை செறி மோரூரில் வாழ்ந்திருக்கும்
மள்ளர்கள் பள்ளிய ருடனே கூடிவந்து
மன்னவரைத் தொழஅவரும் மகிழ்ந்து சொல்வார்..."
செய்யுள் 245
"வந்ததுமே திருக் கூட்டமதாகவும்
மள்ளரும் பள்ளிமார்களும் கூடியே
சிந்தை தானும் மகிழ்ந்து அவரவர்
தெய்வங்கள் தமைப் போற்றியேகும்பிட்டு"
செய்யுள் 354
"மள்ளனும் இளைய பள்ளி
மனையினில் வந்தி ருந்து
கள்ளிமோ கத்தால் காமக்
கடலினில் அழுந்திக் கொண்டான்
பள்ளன்செய் கொடுமை மூத்த
பள்ளியும் மனம்பொ றாமல்
வெள்ளியங் கிரியார் பண்ணை
வேந்தர்முன் வந்து சொல்வாள்"
செய்யுள் 819
"மங்கையர் மீதினில் மாங்க னி - பறித்
தங்கிட மள்ளர்வி ளாங்க னி
மந்தியின் மீதிலே எறிந்து மே - மகிழ்
விந்தையைப் பாரடி பள்ளிய ரே"
மேற்கண்ட செங்கோட்டுப் பள்ளுவின் செய்யுட்கள் பள்ளரே மள்ளர் என்பதை உறுதி செய்கின்றன.
- திருவேட்டைநல்லூர் ஐயனார் பள்ளு
இயற்றியவர் சுப்பிரமணிய நாவலர், காலம் கி.பி.1882
பகுதி 118
"பள்ளத் தடாக நல்லூர்ப் பள்ளி சொன்ன சொற்படியே
மள்ளத் தலைவனைக் கால்மரம் வெட்டி விட்டபின்பு
உள்ளத்து அறிவான் உடல்செலவு எல்லாம் போக்கி
எள்ளத்தனை குறையாது இருப்பு வகை சொன்னானே"
பள்ளரே மள்ளர் என்கிறது மேற்கண்ட பள்ளு அடிகள்.
- எட்டையபுரப் பள்ளு
இயற்றியவர் முத்துப் புலவர்
செய்யுள் 146
"அகத்திலுகந்து கொண்டு நு கத்தை மகிழ்ந்து கையிலெடுத்தான்
பண்ணையாண்டவர் சொல்படி பூண்டு பள்ளரிடங் கொடுத்தான்
மகத்துவ மீறிய வையகத்து மானதவாழ்த்தித் தொழுதார்
மள்ளர் வலிலேரைப் பூட்டி நயமாகக் கூட்டியுழுதார்"
செய்யுள் 153
"வேலைவிட்டொன் னார்தளத்தை வென்றருள்கு மாறயெட்ட
மாலையிட்ட தார்பரவு மள்ளருக்குப் பள்ளியர்கட்
செளைவிட்டுப் பின்வேறு சிந்தையுண்டோ செய்கால்வாய்க்
காலைவிட்டாப் பாலே கடக்கக்கா லேறாதே"
- சாமிநாதப் பள்ளு
இயற்றியவர் சிவப்பெருமாள் கவி
செய்யுள் 7
"மஞ்சினஞ் சூழ்ந்திலகு வீராச்சி
மங்கை நகர்க்கிசைந்திடும் பண்ணை
மள்ளனுக்கே மனமகிழ் மூத்த
பள்ளி வந்தனளே"
பள்ளரே மள்ளர் என்பதற்கு சாமிநாதப் பள்ளு ககரும் சான்று இது.
- தென்புதுவைப்பதி தேவாங்கப் பள்ளு
பக்கம் 19 வரி 9 ,10
"வருமனய மள்ளரெலா மூத்தபள்ளிக் காவேசம் வறுத்து வாய்மெய்
பெருமையென வேளாரை வருகவென வந்தவகை பேசலாமே"
- முக்கூடற் பள்ளு
இயற்றியவர் பெயர் தெரியவில்லை, காலம் 1670
செய்யுள் 10
"ஆதிமரு தீசருக்கும் ஆட்பட் டழகருக்கும்
பாதியடி மைப்படுமோ பள்ளிமரு தூரிளையாள்
சோதிமுக மள்ளருக்கே தோன்ற வயலுற்ற நட்ட
போதிலொரு பூவில் ஐந்து பூவும் பயிராமே"
தன ஒளி பொருந்திய முகம் மள்ளர் வடிவழகக் குடும்பனாருக்கு மட்டுமே தோன்றும் படியாக மருதூர் இளைய பள்ளி வயலில் நாற்று நட்டால் பயிர் செழித்து வளர்ந்து விளைச்சல் ஐந்து மடங்காய் பெருகி விளையும் என்னும் பொருள்பட அமைந்த மேற்கண்ட முக்கூடற் பள்ளு அடிகள் பள்ளரே மள்ளர் என்பதையும் அறிவிக்கின்றன.
மள்ளரே பள்ளர் எனக்கூறும் அறிஞர்களின் கூற்று
மள்ளரே பள்ளர் எனக்கூறும்
அறிஞர்களின் கூற்று
தமிழ் இலக்கியங்கள் யாவிலும் ஏர்த்தொழிலையும், போர்த்தொழிலையும் குலத்தொழிலாகக் கொண்ட மருத நிலக் குடிகளான மள்ளர்களே மரபு பிறழாமல் பண்டையக் குலத்தொழிலோடும், பண்பாட்டு வழக்காறுகளோடும் மரபறியும் வகையில் தடம் பதித்து வாழ்ந்து வருகின்ற பள்ளர்கள் என்பதைப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர். அவ்வறிஞர் பெருமக்களின் கூற்றுகள் உரைக்கும் உண்மைகள் வருமாறு:
- முனைவர் வின்சுலோ
"இன்று தென்னகத்தில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் பள்ளர், மள்ளர் என்பதின் உச்சரிப்பு வேறுபாடு ஆகும்" என்கிறது வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி (Dr.Winslow Dictionary pp.174).
- டி.கே.வேலுப்பிள்ளை
"பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் மள்ளர் பிற்காலத்தில் பள்ளர் என வழங்கலாயினர்" என்கிறார் டி.கே.வேலுப்பிள்ளை. (T.K.Veluppillai, Travancore State manual 1940)
- முனைவர் சி.ஒப்பார்ட்
"மள்ளர் பள்ளர் ஆனது உச்சரிப்பு வேறுபாடாகும்" என்கிறார் மேலை நாட்டு அறிஞரான சி.ஒப்பார்ட் (Dr.G.Hobart, Dravidians, The Original inhabitants of India, pp.101)
- ஞா.தேவநேயப் பாவாணர்
"பள்ளர் என்பவர் மள்ளர், மருதநிலத்தில் வாழும் உழவர்" என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர் (செந்தமிழ்ச் செல்வி 1975 ஏப்ரல் வெளியீடு)
- ந.சி.கந்தையாப் பிள்ளை
"பள்ள என்பது மள்ள என்பதன் உச்சரிப்பு வேறுபாடாகும். பண்டைய மள்ளரே இன்றைய பள்ளர்" என்கிறார் ந.சி.கந்தையா பிள்ளை (தமிழர் சரித்திரம் பக்.206 ). இக்கருத்தினைப் பண்டித சவரியாரும் வலியுறுத்துவார். இவ்விருவரும் யாழ்ப்பாணத்து அறிஞர்களாவர்.
- சேலம் மாவட்டக் குடிக் கணக்கு
1961 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் கணக்கன்கிரி ஊர் பற்றிய கையேட்டில் "பள்ளர் என்பவர் மருத நில மக்களாகிய மள்ளர்" எனக் கண்டுள்ளது. (1961 Census of India, Vol.IX, Madras Part VI, Village Survey Monograph, Kanakkangiri Village, Salem District)
- கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டு - II
எசு.கே.வசந்தன் என்பவரால் எழுத்தப்பட்டு,திருவனந்தபுரம், கேரள மொழிப் பயிற்சியகம் வெளியிட்ட கேரளப் பண்பாட்டு நிகண்டு பாகம் 2 பக்கம் 123 இல் பள்ளர் என்பவர் சங்க இலக்கியங்களில் மள்ளர் என அறியப்படுவதைத் தெளிவுபடுத்துகிறது. மலையாளத்தில் உள்ளவாறு.....
(விரைவில் அந்த பக்கம் இங்கே ஸ்கேன் செய்து பிரசுரிக்கப் படும்)
பள்ளன்
"தெக்கன் திருவிதாங்கூரில் காணுன்னா தமிழ் கர்சகத் தொழிலாளிகள் யுத்தம் தொழிலாகிய கூடியான. அதினால் மள்ளர் என்னும் பறையும் - சங்க சகாத்தியத்திலே மள்ளர். இவர் மக்கத்தாயிகளான. வளரப்பெயர் கிருத்தவ மதம் சிவிகரிச்சு. பீர்மேடு பாங்களிலும் இவரக் காணும்."
இதன் தமிழாக்கம் வருமாறு....
பள்ளன்
"தெற்குத் திருவிதாங்கூரில் காணப்படும் தமிழ் வேளாண் தொழில் மக்கள், போர்த் தொழிலையும் இனைந்து மேற்கொண்டதால் மள்ளர் என்றும் அழைக்கப் படுகின்றனர் -- சங்க இலக்கியங்களில் மள்ளர்கள், இவர்கள் தந்தை வழி நிலத்திற்கு உரிமையுடையவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். பீர்மேடு பகுதிகளில் இவர்களைக் காணலாம்" என்கிறது கேரள பண்பாட்டு வரலாற்று நிகண்டு.
குடும்பரும் மூவேந்தரும்
குடும்பரும் மூவேந்தரும் ---
கல்வெட்டில் குடும்பன்
- இன்றைய கேரளாவில் வயநாடு பகுதியில் எடக்கல் என்ற ஊருக்கு அருகே உள்ள ஒரு மலைக்குகைக் கல்வெட்டு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு பழமையுடையது. அக்கல்வெட்டில்,
"விஷ்ணு வர்மம குடும்பிய குல வர்த்த நஸய லிகித"
என்று சேர வேந்தன் விஷ்ணு வர்மனின் குடும்பிய குளம் பற்றிக் கூறுகிறது. (இந்திய தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1897 , எண்.120 -123 HULTSCZH )
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூர் திரு மருதுடையார் கோயில் கல்வெட்டில்,
"கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன்
சோழனான இராஜராஜதேவன்"
என்று தென் குடும்பரான இராசராசசோழனால் நிலக் கோடை வழங்கப் பட்டதாக கூறும் கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
- தற்காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் பூலாங்குறிச்சி. இவ்வூரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு பெரும் பாறையில் சுமார் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் நடுவில் உள்ள கல்வெட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. இடப்பக்கம் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வலப்பக்கம் உள்ள கல்வெட்டு மட்டுமே தெளிவாக உள்ளது. அக்கல்வேட்டுச் செய்தி வருமாறு:
"விஷ்ணு வர்மம குடும்பிய குல வர்த்த நஸய லிகித"
என்று சேர வேந்தன் விஷ்ணு வர்மனின் குடும்பிய குளம் பற்றிக் கூறுகிறது. (இந்திய தொல்லியல் துறை ஆண்டறிக்கை 1897 , எண்.120 -123 HULTSCZH )
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூர் திரு மருதுடையார் கோயில் கல்வெட்டில்,
"கரைவழி நாட்டு ஊராளி தென் குடும்பரில் சிங்கன்
சோழனான இராஜராஜதேவன்"
என்று தென் குடும்பரான இராசராசசோழனால் நிலக் கோடை வழங்கப் பட்டதாக கூறும் கல்வெட்டு ஸ்ரீ வீரநாராயணனின் 7 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
- தற்காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் பூலாங்குறிச்சி. இவ்வூரில் உள்ள கண்மாய் மதகை ஒட்டியுள்ள குன்றின் சரிவுப் பகுதியில் உள்ள ஒரு பெரும் பாறையில் சுமார் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று கல்வெட்டுகளில் நடுவில் உள்ள கல்வெட்டு முற்றிலுமாக அழிந்து விட்டது. இடப்பக்கம் உள்ள கல்வெட்டு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. வலப்பக்கம் உள்ள கல்வெட்டு மட்டுமே தெளிவாக உள்ளது. அக்கல்வேட்டுச் செய்தி வருமாறு:
"இக்கோயில்களில் பச்செறிச்சில் மலைமேல் செய்வித்த தேவகுலத்து குழலூர்த் துஞ்சிய உடையாரால் வேற்கூரில் பெறப்பட்ட குடும்பியர் பரம்பரையல்லது வேற்றார் தவிர்க்கப்பட வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குடிமியாமலை குடுமிநாத சுவாமி கோயிலில் இரண்டாம் கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடைபன்ம்ரான திறபுவனச் சக்கிரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 27 ஆவது ஆவணிமாதம் 2 தியதி நாள் தென் கோனாட்டு சிகாநல்லூர் குடுமியார் உதையப் பெருமாள் உள்ளிட்டாற்கு புல்வயல் அஞ்சுநிலை ஊராக இசைந்த ஊரவரோம் தீர்வு முறி குடுத்த பரிசாவது முன்னாள் இவர் ஊர்....."
- கோயமுத்தூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் கோவில் யாளிக் கல்லில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கோனாட்டான் வீரசோழனின் 37 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
"தென் குடும்பரான கோனாட்டான் வீரசோழன்" ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பல்லியில் அருக தேவருக்கு அளித்த நிலக் கோடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் கொங்கவிடங்கேசுவரர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கி.பி.1233 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
"கரை வழிநாட்டு ஏழூர் தென் குடும்பரில் ஆரியன் உலகுய்ய வந்தனான வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன்" கண்ணாடிப் புத்தூரில் உள்ள தன நிலத்தைக் கோவிலுக்கு அளித்து அதன் வருவாயில் ஐப்பசி மாதச் சிறப்புப் பூசைகள் நடக்க ஏற்பாடு செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
- கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலக்கிரிசல் என்ற ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை,வெள்ளைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பக் காய்ச்சியதனால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக்கரிசலில் உள்ள ஈசுவரன் கோயில் முன் சுமார் 4 கல்வெட்டுத் துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியைச் சேர்ந்த கற்கள் இவை. கி.பி.13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் அக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள கல்வெட்டு வரிகள் வருமாறு:
" ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க்கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரசி தன்மம்"
என்று குடும்பர்களைப் போன்று குடுமிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.
- ஈரோடு மாவட்டம், குண்டடத்தில் உள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,
"ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராசேந்திர தேவற்குயாண்டு பதினொன்றா வதுகேதிராவது பொங்கலூர்க்கா நாட்டின் குண்டொடத்திற் குடுமிச்சிகளில் சிங்கன் கோவியாந அங்கராயன் மனைக்கிழத்தி குண்டொடத்தில்"
என்று இக்கல்வெட்டும் குடுமிச்சிகள் பற்றிக் கூறுகிறது.
- கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாரியூர் தென்னந்தோப்பு உப்பளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குடும்பன் வில்லியம் பலவணானான சித்திரவல்லியின் உப்பளம் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 41 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
".....கோவிராஜ கேசரிபன்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 41 -வது இது ..... க்கு வார் திருவாணை நாஞ்சி நாட்டு சுந்தர சோழ சதுர்வேதி மங்கலத்து சுசீந்திரமுடைய மகாதேவர்க்கு பெருமாள் திருமேனி கலியாண திருமேனியாக இராசாதிராசப் பாண்டி நாட்டு உத்தம சோழ வள நாட்டு அமரபுரி மங்கலத்து பொன் பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலவராயன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. இவ்விளக்குக்குப் புறந்தா நாட்டு வாரியூரான பராக்கிரம சோழப் பேராத்து குடும்பன் வில்லியம் பலவானான இரண்டாயி.... சித்திரவல்லி பணியில் இரண்டு பாத்தி சந்திராதித்தவற் விலை கொண்டு குடுத்த குலோத்துங்க சோழன் திருநுந்தாவின்....." (Trivancore Archaelogical Series Vol.1, Edited by T.A.Gopinatha Rao, Dept. of Cultural Publications, Govt. of Kerala, Reprinted in 1988, pg.355-356.)
- தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இருவப்ப புறம் என்னும் ஊரில் 'பெரும்படைச் சாத்தான் கோயில்' உள்ளது. பெரும்படைச் சாத்தான் என்றால் பெரும்படை கொண்டு மக்களைக் காத்தவன் என்று பொருள். இக்கோயில் பள்ளர்களின் குல தெய்வ முன்னோர் வழிபாடாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
"1815 ஆம் ஆண்டு கீதட்டா பாறை சுப்ப குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி இருள குடும்பன் ஸ்ததிரி ஆள்வார் சாத்தாவுக்கு உபயம் ரூ.75 /- கோவில் கோடாங்கி" (பழங்காசுகள், காலாண்டிதழ், ஏப்ரல் 2002 , ப.21 )
இருவப்புரம் பெரும்படைச் சாத்தான் கோயிற் பூசாரிகளான சுப்பக் குடும்பனும், அவரது மகன் இருளைக் குடும்பனும், பெரும்படைச் சாத்தானை வழி வழியாக வழிபாடு செய்து வந்துள்ளனர். இவ்விருவரும் அக்கோயிலில் தங்களது உருவச் சிற்ப்பங்களையும், கை குவித்து வணங்கி நிற்கும் நிலையில் அமைத்துள்ளனர். இவ்வாறு கோயில் திருப்பணிகள் செய்கிறவர்கள் தங்கள் சிலைகளைக் கோயிலில் வைக்கும் மரபினை முதன் முதலாகத் தொடங்கியன் இராசராச சோழனாவான். இசசோழ வேந்தன் தஞ்சை பெருவுடையார் கோயிலில் தனது உருவம் பொறித்த செம்புச் சிலையினை அமைத்தான் என்று அங்குள்ள கல்வெட்டுச் செய்தி கற்பிக்கின்றது. அதைப் போன்று மதுரை மீனாட்சி கோயில், பேரூர் பட்டீசுவர் கோயில் முதலிய கோயில்களில் திருப்பணிகள் செய்த பள்ளர்கள் அந்த அந்தக் கோயில்களில் சிற்ப்பங்களாக செதுக்கப்பட்டு நிற்கும் காட்சிகளைக் காணலாம்.
இப்படியாக இருவப்புரம் பெரும் படைச் சாத்தன் கோயிலி சுப்பக் குடும்பனும், இருளைக் குடும்பனும் கழுத்தணிகளையும் குடுமிக் கொண்டை முடித்து சடையை விரித்த நிலையில் காதுகளில் குண்டலங்களும், இடையிலிருந்து கணுக்கால் வரை பஞ்சகச்ச ஆடையும், கைகளில் கடகமும், விரல்களில் கணையாழியும், தோள் பட்டைகளில் வாகுவளையும் அணிந்து காணப்படுவது பள்ளர்களின் மேன்மையை விளக்குவதாய் உள்ளது.
- திண்டுக்கல் மாவட்டம், பழனி வாட்டம், கீரனூர் கல்வெட்டு பொன் அணிகலன்களை திருவாகீசுவர முடையார் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்த குடும்பர் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டுச் சொற்றொடர் வருமாறு:
"கீரனூரான கொழுமங்கொண்ட சோழ நல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளன் மணவாட்டி இளையாண்டி"
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சங்கிராமநல்லூர் சோழீசுவரர் கோயில் கல்வெட்டொன்று கோயிலுக்கு நிலக் கோடை வழங்கிய குடும்பரை "குடும்பர் அணுத்திரப் பல்லவரையன்" என்று பொரித்துள்ளது.
- ஈரோடு மாவட்டம், குண்டடம் அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டில் குடும்பர் பெயர் இடம் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு செய்தி வருமாறு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு இயாண்டு பத்தாவது குண்டோடத்தில் குடும்பரில் இருங்கோளன் .....
காவன்......நா......யா......கொங்கி......." என்றுள்ளது. (Annual Reports on Indian Epigraphy (ARE) - 130/1920)
இவ்வாறாக சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் நாடுகள் அனைத்திலும் குடும்பர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
- கோயமுத்தூர் மாவட்டம், அவிநாசி வட்டம், ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளி அணியாதழகியார் கோவில் யாளிக் கல்லில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு கோனாட்டான் வீரசோழனின் 37 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
"தென் குடும்பரான கோனாட்டான் வீரசோழன்" ஆலத்தூர் வீரசங்காதப் பெரும்பல்லியில் அருக தேவருக்கு அளித்த நிலக் கோடை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், கடத்தூர் கொங்கவிடங்கேசுவரர் கோவில் கருவறை வடக்குச் சுவரில் உள்ள கி.பி.1233 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்,
"கரை வழிநாட்டு ஏழூர் தென் குடும்பரில் ஆரியன் உலகுய்ய வந்தனான வீரராசேந்திர அணுத்திரப் பல்லவரையன்" கண்ணாடிப் புத்தூரில் உள்ள தன நிலத்தைக் கோவிலுக்கு அளித்து அதன் வருவாயில் ஐப்பசி மாதச் சிறப்புப் பூசைகள் நடக்க ஏற்பாடு செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.
- கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலக்கிரிசல் என்ற ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை,வெள்ளைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பக் காய்ச்சியதனால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக்கரிசலில் உள்ள ஈசுவரன் கோயில் முன் சுமார் 4 கல்வெட்டுத் துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியைச் சேர்ந்த கற்கள் இவை. கி.பி.13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் அக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள கல்வெட்டு வரிகள் வருமாறு:
" ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க்கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரசி தன்மம்"
என்று குடும்பர்களைப் போன்று குடுமிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.
- ஈரோடு மாவட்டம், குண்டடத்தில் உள்ள கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு,
"ஸ்வஸ்தி ஸ்ரீ வீரராசேந்திர தேவற்குயாண்டு பதினொன்றா வதுகேதிராவது பொங்கலூர்க்கா நாட்டின் குண்டொடத்திற் குடுமிச்சிகளில் சிங்கன் கோவியாந அங்கராயன் மனைக்கிழத்தி குண்டொடத்தில்"
என்று இக்கல்வெட்டும் குடுமிச்சிகள் பற்றிக் கூறுகிறது.
- கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாரியூர் தென்னந்தோப்பு உப்பளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு குடும்பன் வில்லியம் பலவணானான சித்திரவல்லியின் உப்பளம் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு குலோத்துங்க சோழனின் 41 வது ஆட்சியாண்டைச் சேர்ந்தது.
".....கோவிராஜ கேசரிபன்மரான சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 41 -வது இது ..... க்கு வார் திருவாணை நாஞ்சி நாட்டு சுந்தர சோழ சதுர்வேதி மங்கலத்து சுசீந்திரமுடைய மகாதேவர்க்கு பெருமாள் திருமேனி கலியாண திருமேனியாக இராசாதிராசப் பாண்டி நாட்டு உத்தம சோழ வள நாட்டு அமரபுரி மங்கலத்து பொன் பற்றி உடையான் அரையன் மூவாயிரத்தொருவனான குருகுலவராயன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்று. இவ்விளக்குக்குப் புறந்தா நாட்டு வாரியூரான பராக்கிரம சோழப் பேராத்து குடும்பன் வில்லியம் பலவானான இரண்டாயி.... சித்திரவல்லி பணியில் இரண்டு பாத்தி சந்திராதித்தவற் விலை கொண்டு குடுத்த குலோத்துங்க சோழன் திருநுந்தாவின்....." (Trivancore Archaelogical Series Vol.1, Edited by T.A.Gopinatha Rao, Dept. of Cultural Publications, Govt. of Kerala, Reprinted in 1988, pg.355-356.)
- தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டம், இருவப்ப புறம் என்னும் ஊரில் 'பெரும்படைச் சாத்தான் கோயில்' உள்ளது. பெரும்படைச் சாத்தான் என்றால் பெரும்படை கொண்டு மக்களைக் காத்தவன் என்று பொருள். இக்கோயில் பள்ளர்களின் குல தெய்வ முன்னோர் வழிபாடாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் செய்தி வருமாறு:
"1815 ஆம் ஆண்டு கீதட்டா பாறை சுப்ப குடும்பன் மகன் கரை அடி ஊர் கோடாங்கி இருள குடும்பன் ஸ்ததிரி ஆள்வார் சாத்தாவுக்கு உபயம் ரூ.75 /- கோவில் கோடாங்கி" (பழங்காசுகள், காலாண்டிதழ், ஏப்ரல் 2002 , ப.21 )
இருவப்புரம் பெரும்படைச் சாத்தான் கோயிற் பூசாரிகளான சுப்பக் குடும்பனும், அவரது மகன் இருளைக் குடும்பனும், பெரும்படைச் சாத்தானை வழி வழியாக வழிபாடு செய்து வந்துள்ளனர். இவ்விருவரும் அக்கோயிலில் தங்களது உருவச் சிற்ப்பங்களையும், கை குவித்து வணங்கி நிற்கும் நிலையில் அமைத்துள்ளனர். இவ்வாறு கோயில் திருப்பணிகள் செய்கிறவர்கள் தங்கள் சிலைகளைக் கோயிலில் வைக்கும் மரபினை முதன் முதலாகத் தொடங்கியன் இராசராச சோழனாவான். இசசோழ வேந்தன் தஞ்சை பெருவுடையார் கோயிலில் தனது உருவம் பொறித்த செம்புச் சிலையினை அமைத்தான் என்று அங்குள்ள கல்வெட்டுச் செய்தி கற்பிக்கின்றது. அதைப் போன்று மதுரை மீனாட்சி கோயில், பேரூர் பட்டீசுவர் கோயில் முதலிய கோயில்களில் திருப்பணிகள் செய்த பள்ளர்கள் அந்த அந்தக் கோயில்களில் சிற்ப்பங்களாக செதுக்கப்பட்டு நிற்கும் காட்சிகளைக் காணலாம்.
இப்படியாக இருவப்புரம் பெரும் படைச் சாத்தன் கோயிலி சுப்பக் குடும்பனும், இருளைக் குடும்பனும் கழுத்தணிகளையும் குடுமிக் கொண்டை முடித்து சடையை விரித்த நிலையில் காதுகளில் குண்டலங்களும், இடையிலிருந்து கணுக்கால் வரை பஞ்சகச்ச ஆடையும், கைகளில் கடகமும், விரல்களில் கணையாழியும், தோள் பட்டைகளில் வாகுவளையும் அணிந்து காணப்படுவது பள்ளர்களின் மேன்மையை விளக்குவதாய் உள்ளது.
- திண்டுக்கல் மாவட்டம், பழனி வாட்டம், கீரனூர் கல்வெட்டு பொன் அணிகலன்களை திருவாகீசுவர முடையார் கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்த குடும்பர் பற்றிக் கூறுகிறது. கல்வெட்டுச் சொற்றொடர் வருமாறு:
"கீரனூரான கொழுமங்கொண்ட சோழ நல்லூர் உடையார் குடும்பர் சுந்தன் அதிசய சோழனான குலோத்துங்க சோழ இருங்கோளன் மணவாட்டி இளையாண்டி"
- கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சங்கிராமநல்லூர் சோழீசுவரர் கோயில் கல்வெட்டொன்று கோயிலுக்கு நிலக் கோடை வழங்கிய குடும்பரை "குடும்பர் அணுத்திரப் பல்லவரையன்" என்று பொரித்துள்ளது.
- ஈரோடு மாவட்டம், குண்டடம் அமிர்தகடேசுவரர் கோயில் இடது நிலையில் உள்ள கல்வெட்டில் குடும்பர் பெயர் இடம் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு செய்தி வருமாறு:
"ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு இயாண்டு பத்தாவது குண்டோடத்தில் குடும்பரில் இருங்கோளன் .....
காவன்......நா......யா......கொங்கி......." என்றுள்ளது. (Annual Reports on Indian Epigraphy (ARE) - 130/1920)
இவ்வாறாக சேர, சோழ, பாண்டிய என மூவேந்தர்களின் நாடுகள் அனைத்திலும் குடும்பர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
Subscribe to:
Posts (Atom)