பழனி செப்பேடு உணர்த்தும் தெய்வேந்திரர் வரலாறு
கடவுள் வாழ்த்து
முருகன் வாழ்த்து
முருகன் மெய்க்கீர்த்தி
முருகன் வீரம்
முருகன் / மெய்க்கீர்த்திகள்
தமிழகத்தில் வடுகர் ஆதிக்கம்
வடுக அரசர் மேலாண்மை
மதுரை நாயக்கர்கள் ஆட்சி
வரி 31 - 38
தெய்வேந்திர வம்சத்தார்
வரி 38 - 44
வரி 44 - 50
வள்ளிக் கோடியில் குழந்தை
வரி 50 - 55
ஈசுவரி குழந்தை வள்ளல்
வரி 55 - 59
தெய்வேந்திரனுக்கும்,இந்திராணிக்கும்
வரி 59 - 61
வரி 61 - 65
வரி 65 - 70
வள்ளல் மகன் முதல் செந்நெல்
வரி 70 - 74
முப்பது முக்கோடி தேவர்களுக்கும்
வரி 74 - 77
சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை
வரி 77 - 81
வள்ளல் மகனை மூவேந்தர்கள்
வரி 81 - 86
வள்ளல் மகன் தெய்வலோகத்திலிருந்து
வரி 86 - 89
தெய்வ கண்ணாளர் ஏர்
வரி 89 - 94
உழுவதற்கு தெய்வலோகத்திளிருந்து
வரி 94 - 100
வள்ளல் மகனின்
வரி 100 - 102
இரம்பைகள் நடவு
வரி 102 - 107
இரம்பைகளுக்கு நடவு கூலியாக
வரி 107 - 111
வரி 111 - 113
வரி 113 - 117
வள்ளல் மகன் ரம்பைகளை
வரி 117 - 122
இரம்பைகள் வரையறையை
வரி 123 - 126
சோழ,பாண்டிய ராசாக்கள்
வரி 126 - 128
வள்ளல் மகனுக்கு தெய்வேந்திரன்
வரி 128 - 129
வரி 129 - 133
வரி 133 - 138
வரி 138 - 141
சம்பா வகை
வரி 141 - 148
வரி 148 - 151
வரி 151 - 155
வரி 155 - 159
வரி 159 - 164
தெய்வேந்திரன் ஆதிசிவனிடம்
வரி 164 - 169
மூவராசக்கள் தெய்வேந்திரன்
வரி 169 - 174
தெய்வேந்திர மரபின்
வரி 174 - 180
வரி 180 - 187
வரி 187 - 191
வரி 191 - 195
வரி 195 - 201
தெய்வேந்திரன்
வரி 201 -204
வரி 204 - 211
வரி 211 - 216
வரி 216 - 220
வரி 221 - 226
வத்தலக் குண்டு
வரி 226 - 231
வரி 231 - 234
ஈரோடு கொங்குமுடையப்
வரி 234 - 236
கரூர் திருச்சிராப்பள்ளி
வரி 236 - 239
தஞ்சாவூர்ப்பணிக்கனார்
வரி 239 - 242
மதுரை சொக்கக் குடும்பன்
வரி 242 - 246
வரி 246 - 251
தெய்வேந்திரர் பழனிகோயில்
வரி 251 - 253
வரி 253 - 269
கோயில் உரிமை
வரி 269 - 274
வரி 274 - 276
வரி 276 - 278
பேரூர்: மள்ளர்களின் நாற்று நடவு திருவிழா
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலும், மள்ளர்களின் நாற்று நடவு திருவிழாவும்
சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. (Ref: http://tamilnadu-tourism.blogspot.in/2008_12_01_archive.html)
பேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப் பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என வழங்கி வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. அப்பதினெட்டு குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.(நேர்காணல்: பு.வே.அசோக் பண்ணாடி, கோவை)
நாற்று நடவுத் திருவிழா
மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா.
நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.
(விரைவில் இணைக்கப்படும்: கோவை - நாற்று நடவுத் திருவிழா புகைப்படம்)
தேவேந்திரர் குல வேளாளர் பெண்கள் அவர்களது மண்டபத்தில் முளைப்பாரி வைத்து இருப்பார்கள்.தினந்தோறும் பட்டீஸ்வரர் மற்றும் பச்சைநாயகி அம்மன் உடன் சென்று முளைபாரிகளுக்கு தண்ணீர் ஊற்றும் நிகழ்ச்சி, தொடர்ந்து மகா தீபராதனை நடைபெறும்.மாலை பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மன் ரிஷப வாகனத்தில் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குப் புறப்படும் போது நந்தியிடம் “நாற்று நடும் நிகழ்ச்சிக்கு செல்கிறோம். சுந்தரமூர்த்தி கேட்டால் தகவல் கூற கூடாது“ என கூறும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சுவாமிகள் ரதத்தில் மண்டபத்திற்கு சென்றனர்.
கோயில் வாயிலில் காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, ஏர் கலப்பைக்கு பொன்னேர் பூஜை நடைபெறும்.சுந்தரமூர்த்தி நந்தியிடம் சென்று சிவபெருமான் எங்கு சென்று உள்ளார். என கேட்டதற்கு நந்தி பதில் கூறாமல், தலையை தெற்கு புறமாக சாய்த்து, நாற்று நடவு மண்டபத்தில் சுவாமிகள் உள்ளதை மறைமுகமாக தெரிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தொடர்ந்து பட்டத்து யானை முன்னே செல்ல தாரை தப்பட்டை மற்றும் செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக பட்டீஸ்வரர் மண் வெட்டியுடன், பச்சை நாயகி அம்மன் நாற்றுகள் எடுத்து கொண்டு நாற்று நடவு மண்டபத்தில் எழுந்தரும் முன்னதாக வயலில் தண்ணீர் நிரப்பப்பட்டு, கலப்பையால் உழவு செய்யப்படும்.தேவேந்திர குல தம்பதியினர் வேடத்தில் சுவாமிகள் வயலில் இறங்கி, சுவாமி மண் வெட்டியால் வெட்ட, அம்மன் நாற்றுகளை நடும்போது பெண்கள் குலவை சத்தம் எழுப்பி, போட்டி, போட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாற்றுகள் நடுவார்கள்.அப்போது அங்கு வந்த சுந்தரமூர்த்தி பட்டீஸ்வரரை சந்தித்து, “திருப்பணிக்கு பொன், பொருள்கள் கேட்டு பாடல்கள் பாட அதற்கு சுவாமிகள் “இங்கு முக்தி கிடைக்கும் என கூறி பொன் பொருளுக்கு சேரமானை சந்திக்க ஓலை கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து சுவாதி திருவீதி உலா.சுந்தரமூர்த்தியிடம் தகவல் கூறிய நந்தியின் தாடையை மண்வெட்டியால் சுவாமி வெட்டும் நிகழ்ச்சியும் மகாதீபாரதனையும் சிறப்பாக நடைபெறும். (Ref: http://jaghamani.blogspot.com/2012/07/blog-post_10.html)
பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.
பேரூர் புராணம் கூறும் மள்ளர் தடங்கள்
இயற்றியவர் கச்சியப்ப முனிவர், காலம் 18 ஆம் நூற்றாண்டு
திருநகரப்படலம் - 2 செய்யுள் 12
வில்லம்பு கொண்ட மள்ளர்
"வாளொடு பரிசைகை வாங்கு மீளிகள்
தோளொடு தூணிவிற் றுதைந்த மள்ளர்கள்
நாளொடு வேல்கதை நயக்கும் வீரர்கள்
தாளொடு போர் பயில் சாலை யெண்ணில"
"வாளோடு கேடயமும் கைகளில் பிடித்த வலிமை மிக்க மள்ளர்கள், தோளோடு உள்ள அம்புக்கூடுகளில் வில்லம்புகள் நிறைந்த மள்ளர்கள், நல்ல நாட்களில் வீரக் கதைகள் பேசும் மல்லர்களுக்கு உழைப்போடும் போர்ப்பயிற்சிகள் கற்றுத் தரும் பாடசாலைகள் பல இருந்தன" என்பதை மேற்கண்ட செய்யுளடிகள் உணர்த்துகின்றன.
15 சுமதி கதிபெரும் படலம்
செய்யுள் 54
மல்லர்களுடைய கற்பு நெறி
"வருணமு மொழுக்கமு மல்லற் கற்பொடும்
ஒருவியன் பனைச் செகுத் துலப்பி றீங்குமுன்
மருவின மின்னுநம் மாட்டு ளாரினும்
வெருவுறு கொலைப்பழி மேவற் பாலதோ"
"மரபும், மரபு ஒழுக்கமும், மள்ளர்களின் கற்பு நெறியோடு கேடுகள் செய்யும் ஒருவனைக் கொன்று நீக்கித் தீமைகள் பலவற்றை முன்னே எதிர்த்துப் போராடினோம் இன்னும் தீயவர் பலர் நம்முள்ளே உள்ளாராயினும் அவர்களைக் கொன்றால் கொலைப்பழி வந்து சேராதோ?" என்று தீயவர்களைக் கொள்ளத் தயங்கும் மல்லர்களின் மனநிலை குறித்து மேற்கண்ட பாடலடிகள் தெரிவிக்கின்றன.
பள்ளுப் படலம்
செய்யுள் 26
"இந்திரன் பிரம னாரணன் முதலா மிமையவர் நு கமல மேழி
வெந்திறந் கொழுவார் கயிறுகோல் பகடு வித்துநா றனைத்துமாயங்கு
வந்தனர் பயில வன்கண நாத ரேவல்செய் மள்ளராய் விரவி
முத்துறும் பட்டிப் பள்ளனை யடுத்து மொழி வழி வினை தொடங்கினரால்" இந்திரன், பிரமன்,திருமால் முதலாகவுள்ள தேவர்கள் நுகம்,கலப்பை,மேழி,கொழுவு,கயிறு,தார்க்கோல்,இடுபொருட்கள் ஆகியவற்றுடன் வந்தார்கள். மள்ளராய் முன்னே செல்லும் பட்டிப் பள்ளனாகிய சிவ பெருமானைத் தொடர்ந்து விரைந்து வந்து அவரின் ஏவல்படி வேளாண் தொழில் செய்யத் தொடங்கிய செய்தியை மேற்கண்ட செய்யுளடிகள் விளக்குகின்றன.
செய்யுள் 27
பள்ளச் சிறாரான விநாயகனும் முருகனும் வயலில் மீனும் அமையும் எடுத்து விளையாடுதல்
"கடலிடைத் துளபக் கடமுடன்பிடித்த காமுகக் கடவுளு மீனின்
தடமுலைச் சுவைப்பால் பருகிய மணிவேற் சாமியும் பள்ளனற் சிறாராய்
இடனகல் வயலிற் கமடமு மீனு மெடுத்தெடுத்திரும்பணைப் புறத்துத்
திடரிடத் துரத்திக் குறுகுறு நடந்து சிறுவிளை யாட்டையர்ந் தனரால்"
திருப்பாற் கடலிலே மாமன் திருமாலாகிய ஆமையை முன்பு பிடித்துக் கொண்டு வந்து கைலாசப் பள்ளர் பால் சேர்ப்பித்த யானை முகக் கடவுளும், மதுரை மீனாட்சி பள்ளத்தியாரின் பருத்த முலைப்பால் சுவைத்த முருகக் கடவுளும் பள்ளருடைய நல்ல மக்களாய் அகன்ற இடத்தையுடைய வயலிலே உள்ள ஆமைகளையும், மீன்களையும் எடுத்து எடுத்து வயற்புறங்களில் வீசிக் குறுகுறு என நடந்து சிறு குறும்பாக விளையாடிக் கொண்டிருந்தனர்.
பேரூர் கோவில் பற்றிய சிறு குறிப்பு
மூலவர் : பட்டீஸ்வரர்
அம்மன்/தாயார் : பச்சைநாயகி, மனோன்மணி
தல விருட்சம் : புளியமரம், பனைமரம்
ஊர் : பேரூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
திருவிழா:
திருவாதிரை முக்கிய திருவிழா. பங்குனியில் பிரம்மோற்ஸவ தேரோட்டம், ஆனியில் நாற்றுநடும் உற்சவம்.
தல சிறப்பு:
சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படி தழும்பை இப்போதும் காணலாம். கோயிலின் முன்பு "பிறவாப்புளி' என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது. இப்பகுதியில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.
தலபெருமை
இறைவன் பள்ளர் சாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்.
(ஆதாரம்: http://temple.dinamalar.com/New.php?id=460)
தேவேந்திர மடத்தில் உள்ள கல் சிற்பங்கள்
இந்த வீடியோ பதிவில் நிமிடம் 11.30 -12.20 வரை 'பேரூர் கோயில் குருக்கள்' மள்ளர்/பள்ளர் வரலாற்றை பேசுவதை காணலாம்.
பழனி முருகன் கோயிலும், பழன மக்களான மள்ளர்களும்
பழனி முருகன் கோயிலும்,
பழன மக்களான மள்ளர்களும்
'பழனம்' என்றால் 'வயல்' என்று பொருள். வயல் சூழ்ந்த ஊருக்கு 'பழனி' என்று பெயர் ஏற்ப்பட்டது.
பள் > பள > பழ > பழனம் > பழனி
'பழன மள்ளர்' என்று பேரூர்ப் புராணம் - திருநாட்டுப் படலம் செய்யுள் 38 கூறுவது காண்க.
பழனமள்ளர்
"மலைபடு வயிரஞ் செம்பொன் மருப்புநித் திலஞ்சந் தாதி
அலையினிற் கவர்ந்து கொள்ளை யாயர்தம் புறங்கண் டன்னோர்
விளையிழு தழுதந் துயித்து மேற்சொலப் பழன மள்ளர்
குலைதொறும் பறைக ளார்ப்பக் கொம்மென வெதிர்சென் றாரால்"
(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.76 )
"மலைகளில் இருந்து வைரமும், செம்பொன்னும், யானைக் கொம்புகளும் முத்துக்களும், சந்தனம் முதலான பொருட்கள் ஆற்று நீரால் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லை நில இடையர்களைப் புறம்கண்டு, அவர்களின் விலை மிக்க பொருளாகிய பால்,வெண்ணை இவைகளை உண்டு, மேலே பெருக்கெடுத்து வர வயல்களுடைய மள்ளர்கள் கரைகள் தோறும் பறைகள் முழங்க விரைந்து எதிர் சென்று வரவேற்றனர் என்கிறது மேற்கண்ட செய்யுள்.
தென் பழனிப் பள்ளியின் அழகு குறித்து வையாபுரிப் பள்ளு செய்யுள் 3 கூறுவது காண்க.
"மஞ்சள் மணம் வீசிய மெய்யும்
கெஞ்சிப் பேசி யாடிய கையும்
மலைமுலையுஞ் சுமையினா னையும்
மருங்கலகுப் பையும்
பஞ்சிளைக் கொண்டைகளென விழியும்
கிஞ்சுகவாய்ப் பசுங்கிளி மொழியும்
பாக்குத் தான் தின்றபல் லொளியும்
படர் ரோம விழியும்
ரஞ்சித மிஞ்சிய கொண்டைச் சொருக்கும்
மஞ்சனப் பின் புரஞ்சரிந்திருக்கும்
நாடினவர் மணத்தை யுமுருக்கும்
நடை செல்லுஞ் செருக்கும்
செஞ்சந்தனப் பொட்டொளி மின்ன
அஞ்சன மா மட மயிலென்னத்
தென்பழனிப் பள்ளியும் வந்து
தோன்றினாளே "
இப்படியாகப் பழனி ஊருக்கும், பள்ளர் குலத்தாருக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்புகள் சிறப்பு வாய்ந்ததாகும்.(குருசாமி சித்தர், தமிழ் இலக்கியத்தில் பள்ளர் (மள்ளர்), தேவேந்திர குல வேளாளர்,ப.67 )
பழனி முருகன் கோயில் 'தேவேந்திர குல வேளாளருக்குச் சொந்தமானது' என்கிறார் பீபிகுளம் செல்வராசு. தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் மறவர் குலத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. 'நம் வேர்கள்' (சுறவம் 2037 - பிப்ரவரி 2006 பக்கம், 12 ,13 ) மாத இதழில் அவர் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் வருமாறு:
"சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு அரசாண்ட பரம்பரை இன்றும் மாற்றானிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது. தமிழன் கி.பி.1528 வரை தமிழகத்தை ஆண்டு வந்தான் என்பதற்கான வரலாற்றுச் சான்றை பழனி முருகன் கோயில் கி.பி.1528 ஆம் ஆண்டு செப்புப் பட்டையம் உறுதி செய்கிறது.
வரலாறு கூறுவது என்ன?
மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குப் (கி.பி.1272 - 1311 ) பின்னர் ஏற்ப்பட்ட பதவிப் போட்டியால் பாண்டியப் பேரரசு சிதைவுக்கு உட்பட்டது. அலாவுதீன் கில்சியின் போர்த்தளபதியான மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். அதே காலத்தில் சேரப் பேரரசை ரவி வர்ம குலசேகர பாண்டியன் (கி.பி.1299 - 1311 ) சேர நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு பின் சேர பேரரசு சிதைந்து சிற்றரசுகளாக தோற்றம் பெற்றன.
இந்நிலையில் தில்லி சுல்தானாகிய கியாசுதீன் துக்ளக்கின் மகனான (பின்னால் முகமது பின் துக்ளக்) உலூப்கான் பாண்டிய நாட்டை 1323 ஆம் ஆண்டு கைப்பற்றினான். இதுவே தமிழகத்தில் அமைந்த வட இந்தியர் ஆட்சியாகும். இவ்வந்தேறி ஆட்சி 1351 வர நீடித்தது.
விசய நகர பேரரசை கிருட்டின தேவராயர் (கி.பி.1509 - 1529 ) ஆண்டு வந்தபோது பாண்டிய நாட்டை சந்திர சேகரப் பாண்டியன் ஆண்டு வந்தான். இச்சந்திர சேகரப் பாண்டியனை சோழ அரசன் படையெடுத்து விரட்டி விட்டான். விரட்டப் பட்ட சந்திர சேகர பாண்டியன் கிரிட்டின தேவராயரிடம் போய் முறையிட்டான். அவன் நாகம நாயக்கன் என்பவனை மதுரைக்கு ஏவி மதுரை அரசை மீட்டுப் பாண்டியனிடம் ஒப்படைக்கச் சொன்னான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் பாண்டியனிடம் ஒப்படைக்காததால் சந்திர சேகர பாண்டியன் மீண்டும் கிருட்டின தேவராயனிடம் ஓடினான். கிருட்டின தேவராய நாகம நாயக்கனை அடக்க, அதே நாகம நாயக்கனின் மகனான விசுவநாத நாயக்கனை ஏவினான். இவ்விசுவநாத நாயக்கன் அவனுடைய அமைச்சனான தளவாய் அரியநாத முதலியார் என்னும் கயவனின் துணையுடன் 1529 ஆம் ஆண்டில் தமிழ் வளர்த்த மதுரையில் நாயக்கர்களின் வந்தேறி ஆட்சியை நிறுவினான்.
அக்கால கட்டத்தில் சேரப் பேரரசின் சிற்றரசுகளில் ஒன்று கரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தது. இக்கால கட்டத்தில் மைசூர் நாட்டு கன்னடர்களின் படையெடுப்புகள் கிழக்கே சேலம் வரையில், தெற்க்கே பழனி வரையிலும் பரவியது. பழனி முருகன் கோயில் பறிக்கப் பட்டது. இக்கால கட்டமாகும். மதுரையில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலம் கி.பி.1529 . கன்னடர்களின் படையெடுப்பு விரிந்த பகுதி தெற்கே பழனி முருகன் கோயில் தமிழர்களிடம் (பள்ளர்களிடம்) இருந்தது. இதனை கி.பி.1528 ஆம் ஆண்டைய பழனி முருகன் கோயில் செப்புப் பட்டயம் உறுதி செய்கிறது " என்கிறார். (நம் வேர்கள், அரிமா வளவன் ,பிப்ரவரி 2006 ,ப.12 -13 )
(பழனி செப்புப் பட்டயத்தின் தகவல்கள் http://mallarchives.blogspot.in/2012/11/blog-post.html)
பழனி முருகன் கோயிலில் பள்ளர் குலத்தவர்களுக்கு இருந்த உரிமைகள் வடுகராட்சி ஏற்பட்ட பின் படிப்படியாகப் பறிக்கப்பட்டு முற்றிலுமாக இக்கோயிலில் இம்மக்களுக்கு இருந்த தொடர்புகள் அறுக்கப்பட்ட நிலையில் 1990 களில் குருசாமி சித்தரால் இப்பட்டையம் வெளிக்கொணரப் பட்டதால் மீண்டும் வரலாறு திரும்பியது. அக்கால கட்டத்தில் பெ.ஜான் பாண்டியன் தலைமையிலான அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் முன்னெடுத்த 'இழந்த உரிமைகளை மீட்கும் போராட்டத்தில்' பள்ளர் குலத்தவர்களுக்கு உரிமையுடைய பழனி முருகன் கோயில் சொத்தான நெல் விளையும் வயல்களும் மீட்கப் பட்டது. அவ்வாறே பிள்ளை சாதியினரால் பறிக்கப் பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்திர்க்குச் சொந்தமான மடமும் மீட்கப் பட்டது. இப்போராட்டத்திற்க்குப் பின் தொடர்ந்து இன்றளவும், பழனி முருகன் கோயிலில் பள்ளர்களுக்கு முதல் மரியாதையும், மண்டகப் படி உரிமையும் வழங்கப் பட்டு வருவது என்பது வரலாற்றுச் சிறப்பாகும்.
Subscribe to:
Posts (Atom)